Posts

Showing posts from 2012

கிறுக்கு முற்றியது

Image
கிறுக்கு முற்றியது                      (தாழிசை) கண்ணழகுக்கு இவ்வுலகில்        என்னவிலையும் கொடுக்கலாம்; கண்ணசைவுக் கட்டளையில்       காலன்கூட மயங்கலாம்! உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக‌       உலகத்தையே துறக்கலாம்; உதட்டு வார்த்தை உத்தரவில்      சொர்க்கம்கூடத் திறக்கலாம்! பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப்       படையல் ஒன்று போடலாம்; முக்தியடைய அடுத்த பிறவியிலுன்      முகப்பருவாய்ப் பிறக்கலாம்! என்னவளே உன்னழகை       என்ணியெண்ணி வியக்கலாம்; கன்னியுன்றன் முகத்தைகாட்டிக்       கல்லைக்கூட மயக்கலாம்! கன்ணேஉன் கனிமொழியைக்      காலம்முழுதும் கேட்கலாம்; புண்ணியமாய்ப் போகுமொரு      புன்னகை செய் தேவலாம்! கண்மணியின் காலடியில்      காலம் முழுதும் கிடக்கலாம்; - உன் கால்கள்பட்ட இடத்திலெனக்குக்      கல்லறையே கட்டலாம்! உன்விழியின் ஒளியதனை      உலகுமுழுதும் பரப்பலாம்; இரவுபகல் வேறுபாடே     இல்லையென்று சொல்லலாம்! கூந்தலிழை ஒன்றுபோதும்      குவலயத்தை ஆளலாம்; ஏந்திழையின் எண்ணங்களை      எழுத்துவடிவில் தீட்டலாம்! பாதம் துடைக்க வானிலிருந்து      மேகத்துணி கிழிக

அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள்

என்ன இவ்வளவு தாமதமாக ஒரு பதிவா என்று பார்க்காதீர்கள்...இது வேறு கதை ... அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எது  ? இங்கிலாந்து, நியூஸிலாந்து வெளியேறியது... இத்தொடர்கள் எல்லாம் செய்தித்தாள்களில் வந்தவை ..அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்றும் இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகள் வெளியேறின என்றும் எழுதியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..?  ENGLAND AND NEWZEALAND  IS OUT  என்று யாரும் எழுதுவதும் இல்லை..எழுதினால் அதை யாரும் ரசிப்பதும் இல்லை.......ம்ம்ம்ம்ம்...என்னத்தச் சொல்ல..?போயிட்டு வர்றேன்...

தூய தமிழ்ச்சொற்கள்

டக்கர் - அருமை தங்கம் - பொன் ஸ்வர்ணம் - பொன் குரு - ஆசான், ஆசிரியர் உல்லாசம்- களிப்பு வலைப்பூக்களில் தூய தமிழைப் பயன்படுத்துவோம்

கோயம்புத்தூருக்கு மோனோ ரெயில்

Image
தொழில், கல்வி,சுற்றுலா மற்றும் மருத்துவத்துறைகளில் கோலோச்சிவரும் கோயம்புத்தூர் மாநகரம் கட்டமைப்பு வசதிகளில் போக்குவரத்தைப் பொருத்தவரையில்  பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க இயலாமல் திணறி வருகிறது. INDIAN TIER II CITIES பிரிவில் வரும் இருபது நகரங்களில் ஒன்றான கோவையில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரிகிறார்கள்.. பேருந்து, ரெயில் விமானம் என இந்தியாவின் அனைத்துப்பகுதிகளுடனும் சிறப்பாக இணைக்கப்பட்டிருந்தாலும் மாநகரப்போக்குவரத்து நெருக்கடி என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சத்தி சாலை, பொள்ளாச்சி சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டினால்  விழிபிதுங்கிவிடும்..  இந்த இடையூறைத் தவிர்க்க   மோனோ ரெயில் திட்டம் உதவிகரமாக இருக்கும் .. மாநகராட்சிக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமென நினைக்கிறேன்..TUFISIL ( Tamilnadu Urban Infrastructure Finanacial Service Limited)) எனப்படும் மாநில அமைப்பிற்கு இந்த வரைவு அனுப்பப்படும். in comparison city                    urban area population       city limit population                     project status KOCHI          

சுடிதாரா...குர்தீஸா...?

Image
இன்று  வருவாயா மாட்டாயா... சுடிதாரா..குர்தீஸா... கொண்டையா..பின்னலா.. பஸ்ஸா....டூவீலரா... பார்ப்பாயா...பார்க்கமாட்டாயா.... என்று பட்டிமன்றம் நடத்தியே என் பகல்பொழுதுகள் கழிகின்றன...!

மக்காயாலாவுக்கு மீனிங் தெரியுமா மக்களே....?

Image
தற்செயலாகப் பார்க்க நேரிட்டதிரைப்படம் "நான்". போய் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாடல் வந்தது.  மக்கயாலா.......ஒருமணி நேரம் மட்டும் நேரத்தைப் போக்க வந்த இடத்தில் மயக்கும் இசையும் , துள்ளும் அசைவுகளும், வசீகர வரிகளுமாக மக்கயாலா பாடல் மன தி ல் நச்சென்றுஅமர்ந்துகொண்டது..மக்கயாலாவுக்குப்  பொ ருள் என்னவென்று தேடினேன்..பாடலாசிரியர் என்ன பொருளில் எழுதினார் என்று தெரியாது.ஆனால் மக்கயாலா என்பது MICHAELA  என்பதன் நவீன வடிவம் என்றும்  அழகான , எல்லாரையும் வசீகரிக்கக்கூடிய, நளினமான கூந்தலையுடைய,அழகான கண்களையுடைய இளம்பெண் என்றும் பொருள் கிடைத்தது......பொருள் தெரியாமல் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களே என்ற்தேடலின் அடிப்படையில்  இந்தப் பதிவைத் தருகிறேன்.  

அடடா...!

Image
இல்லாத இடை , கொடியிடை, பனியிடை, மெல்லிடை  என இடையைத்தான் எத்தனை விதமாக வருணித்துள்ளனனர்....எனது பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் கூறுவார்.. ஆனண்களின் இடை மத்தளம் போன்றும் பெண்களின் இடை உடுக்கை போன்றும் இருக்க வேண்டும் என்பார்.உடுக்கை என்பது மேலே விரிந்தும் ,இடையில் குறுகியும், பின் விரிந்தும் இருக்கும்.    பற்றிக் கொண்டு நடக்க இடையைப்போல.... வேண்டாம்..சொந்தக்கதைகள்... நளவெண்பாவில்புலவர் புகழேந்தி சொல்வதைக் கேட்போம்.... என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும் நின்ற கவிகை நிழல்வேந்தே ‍ ஒன்றி அறுகால் சிறுப‌றவை அஞ்சிறகால் வீசும் சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து தமயந்தியின் இடையானது, ஆறு சிறுகால்களையுடைய சிறிய வண்டானது  தனது மெல்லிய சிறகால் வீசும் காற்றுக்குக் கூட ஆற்றமாட்டாமல் துவண்டு விடும்   என்கிறார்...இதை இனியும் விளக்க வேண்டுமா...? குறளில்   "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை"   என்பார் வள்ளுவர்..காம்பைக் கிள்ளாமல் பூச்சூடியவளின் இடை பாரம் தாங்காமல் முறிந்து விழும் ஒலியைக் கூறுகிறார் வள்ளுவர்.

காதல் ரேகை

Image
ஒரே ஒருமுறை என்னுடன் கைகுலுக்கிக்கொள்..! என்  கைரேகை எல்லாம் காதல் ரேகை ஆகிவிடட்டும்...!!

ம்ம்ம்ம்ம்ம்....

Image
டூ வீலரில் என்னை மிதவேகத்தில் கடந்து செல்கிறாய்! என் மனதோ ராக்கெட் போல் அதிவேகத்தில் துரத்துகிறது உன்னை!

கொளுத்திப் போடுவொம்

பிழையில்லாத் தமிழையும், தூய தமிழையும் வலியுறுத்தி நாம் தொடர்ந்து பதிந்து வருவதில் பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி இது. உங்கள் பெயரில் வரும் வடமொழி எழுத்துகளையும், எஸ் என்ற தலைப்பெழுத்தையும் ஏன் மாற்றவில்லை?சற்று விளக்கமாகக் காண்போம்.தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை என்று கேட்டால் 247 என்போம். இக்கூற்று சரிதானா என்று பார்த்தால்  தமிழ் எழுத்துகளை இலக்கணிகள் முதல் மற்றும் சார்பெழுத்துகள் என இருவகையாகப் பிரிக்கின்றனர்.முதல் எழுத்துகள் மெய்யும் உயிருமாக முப்பதும்,சார்பெழுத்துகள் பத்துமாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றுள் ஸ, போன்ற ஒலிக்குறிப்புகளுக்கு வரிவடிவம் இல்லை எனினும் அவற்றின் ஒலிவடிவம் புழங்கியே வருகிறது.காகம் என்பது காம் என்றே ஒலிக்கப்படுகிறது.பசை என்பது பஸை என்றே ஒலிக்கிறது.எனினும் பெயர்ச்சொற்களை நாம் கையாள்கை யில் கிரந்த எழுத்துகளான வடமொழி எழுத்துகள் தேவைப்படவே செய்கின்றன.ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று கூறுவது நெருடத்தான் செய்கிறது. அதேபோல ஆவணப்படுத்தப்பட்ட சொற்களான எஸ்.குமாரபாளையம் போன்றவற்றில் நாம் அதை எவ்வாறு தவிர்ப்பது எனத் தெரியவில்லை...!கவிப்பேரரசு கார் போன்ற ஆங்கிலச்ச் சொற்கள

கோயம்புத்தூரில் ஏர் டாக்ஸி அறிமுகம்

தொழில், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் கோவைக்கு இப்பொழுது ஏர்டாக்ஸி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்புசென்னையில் மட்டும்  இந்த வசதி இருந்தது.கோவையில் இருந்து சென்னைக்கு எட்டுப் பேர் செல்ல 4 லட்சம் கட்டணமாகக் கூறப்பட்டுள்ளது.சென்னை மற்றும் பெங்களூருவில் ஒரு மணி நேரத்துக்கு 2,25,000 ரூபாய் கட்டணம் ஆகிறது. கோவையில் அறிமுகக் கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த SANWE Air நிறுவனம் இந்த வசதியைக் கோவையில் அறிமுகப்படுத்துகிறது.இனி கோவையில் இருந்து இந்தியாவின்  எந்த ஊருக்கும்  ஏர்டாக்ஸி மூலம் செல்ல முடியும். நீலகிரி, கோயம்புத்தூர்,  மற்றும் திருப்பூர்ப் பகுதியில் உள்ள சுற்றுலா, கல்வி, டெக்ஸ்டைல், மருத்துவம் மற்றும் இயந்திரத் துறையினர் இதன் மூலம் பெரும்பயன் அடைவர் என்று நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகிறார்.   நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா, கோவைப் பதிப்பு

வெப்ப வரிகள்

Image
கவ்விச் சுவைத்த உன் கரும்பிதழ்களுக்கிடையே அள்ளிக் குடித்த அமுதமென்ன பாலும் தேனும் கலந்த படையலா காதல் தேவதையே..? சொல்வாய்...என் சுடர் மிகு  பூவழகே...! அனல் பறக்கிறதா வரிகளில்... வெப்பமாகாமல் என்ன செய்யும்..? கவிதை  சுடப்பட்டதாச்சே ...  திருவள்ளுவர் எழுதிய குறள் இது... பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயி  றூறிய  நீர்  .  காதற்சிறப்புரைத்தல்  என்னும் அதிகாரத்தில் வரும் 1121 ஆவது குறட்பாவிது..... வள்ளுவர் முன் நாமெல்லாம் ....சும்மா....!

ஆசெதுகை-கவிஞர்களுக்காக ஓரிடுகை

தொடைகளுள் எதுகை என்பது செய்யுளுக்கு இனிமை சேர்க்கும் அழகுப் பொருளாம். இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும். எ‍‍கா: "மதியும் மடந்தை முகனும் அறியா               பதியிற் கலங்கிய மீன்"                                                       (திருக்குறள்)  இங்கு மதி, பதி என்பவை எதுகைச்சொற்கள். ஆசெதுகை என்பது என்ன? ஆசு என்ற பதத்துக்குப் பற்று, பொடி எனப் பொருள் கொள்ளலாம்.  பொன் மற்றும்வெள்ளி நகை செய்பவர்கள் கம்பி,மற்றும் தகடுகளைப் பொடி வைத்து ஊதி இணைப்பர். அதனைப் போல எதுகை யெழுத்தையும், முதலெழுத்தையும் இணைக்கும் வகையில் இடையில் வரும் எழுத்தை ஆசென்று கூறி இவ்வகையை  ஆசெதுகை என்பர்.  சான்று:      "ஒத்துயர் கானவன் கிரியி னோங்கிய       மெத்துறு மரந்தொறு மின்மி னிக்குலம்       மொய்த்துள வாமென முன்னும் பின்னரும்       தொத்தின தாரகை மயிரின் சுற்றெலாம்"                                                                                          -  கம்பராமாயணம்.         ஒத்துயர்         மெத்துறு         மொயித்துள         தொத்தின          என்பனவற்றுள் மூன்றாம் அடியில் எதுகை எழ

தமிழறிவோம்

தூய தமிழ்ச்சொற்களை வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்! சுயநலம்- தன்னலம் ரசம் - சாறு, சுவை மாமிசம், மாம்சம்- இறைச்சி, கறி,உடல்,ஊன்,சதை,தசை,புலால் பிரதிபலிப்பு - எதிரொளி பிரமாதம் - அருமை ஜாமீன் - பிணை

பதினாறு பேறுகள்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன என்று கேட்டிருந்தார் அன்புக்குரிய GM.BALASUBRAMANIYAM  அவர்கள்.. இதோ... புகழ் கல்வி ஆற்றல் வெற்றி நன்மக்கள் பொன் நெல் அறிவு பெருமை ஆயுள் நல்லூழ் இளமை துணிவு நோயின்மை நுகர்ச்சி பொருள்

பசி வந்தால் பறக்கும் பத்து எவை என்று தெரியுமா?

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே ... அந்தப் பத்து என்னென்ன என்று தெரியுமா? நல்வழியில் ஔவையார் கூறுகிறார். பாடலைப் பாருங்கள்... பசி வந்து விட்டால் என்னவெல்லாம் நம்மை விட்டுப் பறக்கின்றன என்று.. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்  கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்!

தூய தமிழ்ச்சொற்கள்

நிஜம் - உண்மை நிஷ்டை - தூக்கம், உறக்கம் சுபாவம் - இயல்பு, தன்மை சுபிக்ஷம் - செழிப்பு, வளமை கூஜா - குவளை அவஸ்தை - துன்பம் தூய தமிழ்ச்சொற்களை  வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்..

சாய்னா நெஹ்வால்----வாழிய பல்லாண்டு..!

Image
பொன்மகள் போற்றுதும் பொன்மகள் போற்றுதும் வெண்கலம் வீரத்துடன் வென்று கொடுத்துநம் பெண்குலம் சிறப்பித்த தால்.               ( சிந்தியல் வெண்பா) தங்கத்தைத் தவற விட்டாலென்ன...? வெண்கலம் வென்று வந்தவளே ஒரு தங்கமகள்தானே...?                 சாய்னா நெஹ்வால்              (வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா) விறகுதள்ளி யரிசியிட்டு விதியதன் மேல் பழிசுமத்திZ இறகுகிள்ளிச் செவிகுடைந்த வழக்கமெலா மொழிந்ததுகாண் இறகணிந்த சிறுபந்தா லிருபஃதே யகவைகொண்ட‌ திறம்மிகுந்த வொருமங்கை திசைபலவு முலவிவந்து குவித்தவெற்றி யரும்பெண்ணைக் குலத்திற்கே பெருமையாம் புவிப்பந்தில் நம்நாடும் பூண்டதுகாண் புதுவாகை                                                                                              (தரவு) ஆந்திரத்துத் தலைநகராம் ஐதராபாத் தினில்பிறந்து தேர்ந்திறகுப் பந்தாட்டந் தினந்தோறும் பயிற்சிபெற்று உலகளவில் பலபோட்டி கலந்துவெற்றி           வலம்வருஞ்சீர் நலமிகுந்த விளஞ்சாய்னா நேவல்வா ழியநெடுநாள்! அதிவிரைவில் முதலிடத்தைத் தரவரிசை   தருமெனலாம் பதக்கங்கள் பலவள்ளிப் பட்டங்கள் பலசூடி நம்மினிய நாட்டுக்குப்

யாப்பருங்கலக்காரிகை - அவையடக்கம்

                                       அவையடக்கம் சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்த‌ பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப் பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!        அவையடக்கத்தை முன்னர்க் கண்டோம். இப்பாடலில் மீண்டும் அவையடக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.                                      பதவுரை சுருக்கமில் -    அளவிலா கேள்வி -    கேள்வியறிவு துகள் -    குற்றம் மொழிந்த -    கூறிய‌ பருப்பொருள் -    (சிறப்பற்ற) பிண்டப்பொருள் விழுப்பொருள் -   சிறந்த பொருள் மால் -    பெரிய‌ பொருப்பகம் -   மலை இருநிலம் -   உலகம்                                                  தெளிவுரை    அளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன் நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையை அடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்த‌ நுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.                                        

இரவின் பாடல்-நள்ளிரவில் எழுதுகிறேன்

Image
இரவின் பாடல் வழிந்தோடும் இருளில் வாய்த்த வலிகளற்ற சஞ்சாரம் நீண்டு கொண்டே செல்கிறது. திசை நிரப்பும் கருமை மெலிதான குரலில் இரவின் தீரா வேட்கையை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒன்றைச் சொல்ல எந்நேரமும் இரவு முயன்றுகொண்டே இருக்கிறது. இன்றுவரை அஃது என்னவென்று சொல்லிவிட்டதா இல்லையா என்பது மட்டும் புரியவே இல்லை. இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே என்ற திரைப்பாடலினை  அண்மையில் கேட்டேன்.வசீகரிக்கும் வரிகளும், மயக்கும் இசையும் வழிந்தோடும் அப்பாடலினை மீண்டும் கேட்கத் தோன்றியது. காணொளியுடன் பார்த்த போது இரவின் மீதான காதல் எல்லாருக்கும் ஒருவிதத்தில் எப்பொழுதும் அல்லது எப்பொழுதாவது பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனத் தோன்றியது.பொய்யான வாழ்வில் மெய்யான இன்பந்தரும் மது போதையோ (பாடல் வரிகள்), இலக்கிய இன்பமோ,வாசித்தலின் சுகானுபவமோ, கூடிக்களித்தலின் பேரின்பமோ எதுவோ ஒன்று இரவின் நிறத்தை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. இரவானது நள்ளிரவாகப் பரிணமிக்கும்போது அதன் நிறமும் அடர்த்தியும் மாறத் தொடங்கி விடுகிறது.பகல்பொழுது இரவை

அட ... நாமளும் ஃபேமசாயிட்டோம்.....

Image
வாழ்க போட்டோபுனியா.... வாழ்க போட்டோபுனியா....

கொல்லாதே...!

Image
உனக்கு  ஓட்டுநர் உரிமம் யார் கொடுத்தது? ஸ்கூட்டி பெப்பில் வந்து மோதாமலேயே தினமும் ஓராயிரம் பேரையாவது கொல்கிறாய்....!

தூய தமிழ்ச்சொற்கள்,

மரியாதை - கண்ணியம், மாண்பு,மதிப்பு,மாட்சி மவுனம் - அமைதி மனோகரம் - அழகு,எழில் மனோபாவம் - மனநிலை மாதம் - திங்கள் மனுஷன் - மனிதன், மாந்தன்

விண்மீன்களை என்ன செய்தாய்...?

Image
எனது தூக்கத்தைத்தான் பறித்து விட்டாய்..! இந்த விண்மீன்களை  என்ன செய்தாய்... இரவு முழுக்கத் தூங்காமல் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன...!

யாப்பருங்கலக்காரிகை -பாயிரம்- உரை

                                                           பாயிரம்                                                  அவையடக்கம் தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால் ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!                                                                                   யாப்பருங்கலக் காரிகை‍‍‍‍‍‍ - 2. "ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிரமல்லது பனுவலன்றே" என்று சொல்வர். காரிகையாசிரியரும் இதில் தவறாது பாயிரத்துடன் தொடங்குகிறார்.                       அக்காலத்தில் நூலாசிரியர் தனது நூலினைக் கற்றோர் அவையில் அரங்கேற்ற‌ வேண்டும். அவையோரது ஐயங்களை அகற்றிய பின்னரே நூலானது அரங்கேறும். எனவே நூலின் அருமையையும், நூற்பொருளின் தன்மைகளையும் முதலில் அவையோரிடத்து அறிவித்துத் தனது எளிமையையும் நூலாசிரியர் புலப்படுத்துவது வழக்கம்.                    ஆன்றோர் நிறைந்த அவையில் தனது அடக்கத்தைக் கூறிவிடுவதாலும்  இதனால் அவையோர் மிகைபடக் கேளாது மென்மையாக அடக்கப்பட்டு விடுவதால

கவிஞர்களே வாருங்கள்.. கவிதை எழுதுவோம்

முகடு தவழும் முகில் பொதிகள்; புழுதி களையும் மழைத் துளிகள்; மனது கழுவும் மதியின் ஒளிகள்; கனவில் சிரிக்கும்  கன்னி வெடிகள்; மிழற்றிப் பிதற்றும் மழலை மொழிகள்; அலர்ந்து கவரும் அழகு மலர்கள்; ஈர்த்துக் கொல்லும்  இரண்டு விழிகள்; கவிதையைத் தொடர்ந்து எழுதி முழுமையாக்குங்கள்...

தூய தமிழ்ச்சொற்கள்

பரிகாரம் - மாற்று, திருத்துதல், சரிசெய்தல் பரிகாசம் -எள்ளி நகைத்தல் சுங்கம் - வரி , இறை சுந்தரம் - அழகு , பொலிவு கறார் - உறுதி

இன்னும் என்ன செய்வாய்?

Image
எனக்கான  உன் பார்வையில் எனக்காக  எதையோ வைத்திருக்கிறாய் என்ற கற்பனையே எவ்வளவு சுகமாக இருக்கிறது..? நான் நாற்காலியில்  அமர்ந்திருந்தேன்; எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்! என் காதல்  உன் தலைக்குப் பின்னால்  ஒளிவட்டம் அமைத்திருந்தது!

தமிழைப் போற்றும் SDM பள்ளி

பள்ளி ,  கல்லூரிகள் கூடத் தமிழைப் புறக்கணிக்கும் பரிதாப நிலை இது "வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது"  எனபதுதான் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அனைத்திலும் காணப்படும் செய்தியாகும். அண்மையில் கோவை மாவட்டம் தாசநாயக்கன்பாளையத்திலுள்ள   பள்ளி வாகனத்தின் பின்னால் கண்ட சொற்றொடர் வியப்பூட்டும் வகையில் "வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது" என்று தூய தமிழில் என்றிருந்தது.  நான் இதுவரை பார்க்காத ஒரு நிகழ்விது ..  அப்பள்ளியை மனமார வாழ்த்துகிறேன்

தமிழ் வலைப்பதிவர்களுக்காக ஒரு பதிவு

வலிமிகுமிடங்கள் நான்காம் வேற்றுமை விரியில் வல்லினங்களான க்,ச்,த்,ப் ஆகியன மிகுந்து வரும். சான்று: அவனுக்கு + கொடுத்தான் + அவனுக்குக் கொடுத்தான் வேலிக்கு + கம்பி = வேலிக்குக் கம்பி வயலுக்கு + பயிர் = வயலுக்குப் பயிர் வினாச்சொற்களை அடுத்து: எ+பக்கம் = எப்பக்கம் எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான் எந்த + படம்= எந்தப் படம் சுட்டுச் சொல்: அ+காளை =அக்காளை அந்த + படம் =அந்தப்படம் இ+ சிலை =இச்சிலை இந்த +கல் =இந்தக்கல் தூய தமிழில் பதிவிடுவோம்.                                          (தொடரும்..)

ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

Image
இரண்டு கண்களையும் மூடியபடி என்ன சிந்தித்தாய்  என்று தெரியவிலை! ஆனால் அந்த ஓவியத்தைத்தான் எனது கண்களுக்குள் ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கிறேன். நான் கண்களை மூடும்போதெல்லாம் நீ  விழித்திரையில்  விரிந்து நிற்பதற்காக!! பட்டாம்பூச்சி ஒன்று உன்னைக்கடந்து செல்வதைப் பார்த்துப் படபடத்தன உனது இமைகள்! உனது இமைகள்  படபடப்பதைப்  பார்த்து ஆயிரம் பட்டாம் பூச்சிகள்  என் வயிற்றுக்குள்  படபடக்கின்றன!

தின்று துய்த்துப் பிறருக்கும் கொடு

"ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும்" நெருநல் உளஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்றார் வள்ளுவர்.சாவே நிகழா வீட்டில் கடுகு வாங்கி வரச்சொன்னார் புத்தர். மரணத்தைத் தடுப்பவனும் ஒத்திபோடுபவனும் எங்குண்டு? நம் எல்லாருக்கும் அதுவேதான் வழி. ஆகவே மானிடா நமக்கும் சனியன் சாவு வரும் வரைக்கும் நமக்குண்டானதைத் தின்று துய்த்துப் பிறருக்கும் கொடுத்து வாழப் பழகு என்று கூறுகிறார் ஔவையார்.

தமிழறிவோம்

மிருகம்  -விலங்கு தசம்-பத்து  பட்சி-பறவை, புள் தர்ணா-முற்றுகை விபரம்-விளக்கம் வாபஸ்-திரும்பப் பெறுதல்

"சைட் " ஒரு சமூகப் பார்வை

Image
இளையோர் முதியோர், ஆண் , பெண் என வேறுபாடில்லாமல்"சைட்" என்பது இன்றைய தலைமுறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.பண்டைக்காலத்திலிருந்து நிலவி வரும் பழக்கந்தான் என்றாலும்மாறிவரும் சூழலுக்கேற்ப இதுவும் மாற்றம் பெற்று வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் இது  உறைந்து கிடக்கிறது.மூன்றாசைகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானது.வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் முதலில் செய்வது இதைத்தான்.சிலர் மற் ற வர்களுக்குத் தெரிந்து செய்கிறார்கள், சிலர் தெரியாமல் செய்கிறார்கள். ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் இதில் மட்டும் யாருமே சலிப்பது இல்லை. போதுமென்ற மனமும் யாருக்கும் இல்லை. சைட்டில் கிடைக்கும் பேரானந்தத்திற்கு மனிதன் எப்போதுமே அடிமை. பேருந்துப் பயணங் க ள் , நடை பயிற்சி, வெளியூர் என எங்கும் நாம் இதை விடுவதேஇல்லை. பார்த்து மகிழ்ந்த பி ன் தான் நமக்கு மன நிறைவு.சில பொழுதுகளில்" சே.... மாப்ள... இது மட்டும் எனக்குக் கிடைச்சா.. வாழ்க்கையே சொர்க்கந்தாண்டா.. " என் று அங்கலாய்ப்பதும் உண்டு.சைட்டுகளி ல் பலவகை உண்டு.சிறியது, பெரியது, வளைவு , நெளிவுகளுடனான் அமைப்பு. இடை

உள்ளே வாருங்கள்! இந்தப் பதிவு உங்களுக்குத்தான் !!

சந்திப்பிழை சகித்து வாழும் தலைமுறை தாண்டி, சந்திப்பிழை மறந்து வாழும் தலைமுறையும் தாண்டி, சந்திப்பிழை அறியாமல் வாழும் தலைமுறையும் தாண்டி சந்திப்பிழை இருந்தால் என்ன குடியா முழுகி விடும் என்ற தலைமுறையினர் வாழும் காலகட்டத்தில் இருக்கிறோம். இடுப்பில் இலையுரி கட்டித் திரிந்தால் கூடத்தான் குடிமுழுகி விடாது, ஆனாலும் அழகியலைப் பார்ப்பது போலத்தான்.கூடுதலாக ஒரு ப், க், ச் அல்லது த் என்ற ஒன்றினைச் சேர்த்து எழுதினால் என்ன எழவு துன்பம் நேர்ந்து விடும்...? "வாங்கி சென்றார் " என்பதை " வாங்கி ச் சென்றார்" என்று எழுதித் தொலைப்போம் என்று சொன்னால் இளக்காரமாகப் பார்க்கும்  அரைவேக்காட்டுக் கூட்டம் பெருகிவிட்டது. எங்கெல்லாம் இரண்டு சொற்களுக்கு இடையில் வல்லினம் மிக வேண்டும்  என் று  தெரிந்து கொள்ளுங்கள்! இரண்டாம் வேற்றுமை விரி: '"ஐ" என்ற  உருபு நிலைமொழிலியிலிருக்க வல்லினம் மிகும். ஆட்டை + கட்டினான் =ஆட்டைக்கட்டினான் வீட்டை    + கட்டினான் = வீ ட்டைக்கட்டினான் வாயை + பொத்தினான் = வாயை ப்  பொத்தினான் நாயை+ துரத்தினான் = நாயை த்  துரத்தினான் வேட்டியை + துவைத்தான் =

சைட் அடி

புகைபிடி புற்றுநோய் வரட்டும்! மதுவைக்குடி மரணம் நெருங்கட்டும் SMS  அனுப்பு பேலன்ஸ் தீரட்டும் சைட் அடி  சுளுக்கு எடுக்கட்டும் எச்சில் துப்பு வழுக்கிவிழட்டும் பாத்ரூம் போ நிம்மதி கிடைக்கட்டும் ஈவ்டீசிங் செய் இடுப்பை ஒடிக்கட்டும் சீரியல்பார் சிந்தை செழிக்கட்டும் வெட்டியாய்ப் பேசு வெற்றி தொலையட்டும் புறங்கூறு புகழ் மறையட்டும் ஊழல் செய் உலகு தூற்றட்டும் வாயைத் திற வாந்தி வரட்டும் மூக்கை நோண்டு        முகம் சுளிக்கட்டும்     காது குடை கதறி அழட்டும்!

அட....!

Image
இத்தனை நாட்களாகத்  துடித்துக் கொண்டிருந்த இதயம்  நீ உள்ளே வந்த பின்பு  துள்ளிக்  குதித்துக் கொண்டிருக்கிறது !

ஏது செய்வீர் தமிழர்காள்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதியும் திருப்பூர் மாவட்டத்தில்  பாதியுமாக விரவிக்கிடக்கும் ஊரது.திருப்பூரைப் பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் , தென்னைமரங்களும், கோழிப்பண்ணைகளும், விசைத்தறிகளும் சூழ அமைந்திருக்கும் அவ்வூரின் பெயர் பதின்மூன்றரை எழுத்துகளால் ஆனது. காமநாயக்கன்பாளையம் என்பதை எவ்வாறு வாசிப்பீர்கள்?  கமநைக்கன்பலயாம் என்று யாரும் வாசித்தால்  பல்லிலோ நாக்கிலோ  எதுவும் சுளுக்கு என்றுதா னே   நி னை க்கத் தோன்றும்? உலகப்பொதுமொழியாம் ஆங்கிலத்தின் அழகையும் வள‌மையையும் பயன்பாட்டு நன்மைகளையும் உணராமலும் , உணர்த்தாமலும் வலுக்கட்டாயமாக மொழியைத் திணிக்கும் கல்விக்கூடங்களுள் ஒன்றில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பொன்றில்  காமநாய்க்கன்பாளையம் என்று ஒலித்ததைத் திருத்திக் கமாநைக்கன்பலயாம் என்று ஸ்டைலாகச் சொல்லிக்கொடுத்த கொடுமையை அண்மையில் கேட்டறிந்தேன்.பெயர்ச்சொற்களை (இடம்,பெயர்....) எம்மொழியிலும்  இயல்பு மாறாமல்தான் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாததுகளிடம் இன்ரைய கல்வி சிக்கிக் கொண்டுள்ளதே என்று வெதும்புகிறது மனம்.நேசமணி பொன்னையாவை நாசமாநீ போனியா என்ற

தூய தமிழ்ச்சொற்கள்

சூட்சுமம் - உள்நோக்கம் நிர்மாணம் - கட்டுதல் , எழுப்புதல் , அமைத்தல் கௌரவம் -   பெருமிதம் , உயர்ந்த மாருதம் - காற்று, வளி ரூபம் -    வடிவம் , உருவம் கல்தா - வெளியேற்று, தள்ளு

மின்னித் தீர்க்கிறது

Image
மலர் விரிகிறது      துயிலெழுகிறாய் மணம் பரவுகிறது      முகம் கழுவுகிறாய்? பனி மறைகிறது      து  கில் திருத் து கிறாய் கதிர் எழுகிறது      கண்ணாடி பார்க்கிறாய் குளிர் வழிகிறது      குளித்து முடிக்கிறாய் ஒளி தெறிக்கிறது      ஒப்பனை செய்கிறாய் குயில் இசைக்கிறது - யாருக்கோ       குட்மார்னிங் சொல்கிறாய்! முகில் நகர்கிறது     உடை உடுத்துகிறாய் இலை உதிர்கிறது     நகம் நறுக்குகிறாய்  மரம் அசைகிறது     நடை பயில்கிறாய் தென்றல் தவழ்கிறது     கூந்தல் உலர்த்துகிறாய் மழை பெய்கிறது     நகை புரிகிறாய் இடி இடிக்கிறது     இமை திறக்கிறாய் மின்னித் தீர்க்கிறது     விழி சுழற்றுகிறாய் நிலவு ஒளிர்கிறது      நெற்றி துடைக்கிறாய் மலை தெரிகிறது     பெருமூச்செறிகிறாய் உயிர் துடிக்கிறது    எதிரில் வருகிறாய்