ஆயிரம் பட்டாம் பூச்சிகள்


இரண்டு கண்களையும் மூடியபடி
என்ன சிந்தித்தாய் 
என்று தெரியவிலை!
ஆனால் அந்த ஓவியத்தைத்தான்
எனது கண்களுக்குள்
ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கிறேன்.
நான் கண்களை மூடும்போதெல்லாம்
நீ 
விழித்திரையில் 
விரிந்து நிற்பதற்காக!!



பட்டாம்பூச்சி ஒன்று
உன்னைக்கடந்து செல்வதைப்
பார்த்துப் படபடத்தன உனது இமைகள்!
உனது இமைகள் 
படபடப்பதைப் 
பார்த்து
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் 
என் வயிற்றுக்குள் 
படபடக்கின்றன!

Comments

  1. உங்கள் வார்த்தை ஜாலங்களை ரசித்தேன். நன்றி..

    ReplyDelete
  2. ஏதோ கிறக்கத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கவிதை ரசித்தேன். தமிழ் உபயோகிப்பில் குறை காணும் நீங்கள் ஆங்கிலத்தை ஏன் சுருக்குகிறீர்கள்.?
    Thank you sir,

    ReplyDelete
  3. எல்லாருக்கும் மனசுக்குள்தான் பட்டாம்பூச்சி பறக்கும்.உங்களுக்கு வயிற்றிலா....நல்ல கவிதை !

    ReplyDelete
  4. அருமையான் காதல் கவிதை
    பட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்தவள் யாரோ?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?