Posts

Showing posts from February, 2024

நிழலிலாது நீளும் சாலைகள்....

  ”அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார்” என்பது தமிழில் புகழ்பெற்ற சொற்றொடர்களில் ஒன்று. உண்மையில் அதன் அருமை இப்போது தான் தெரிகிறது . கோவை நீலம்பூரிலிருந்து மரப்பாலம் வரை ஏறத்தாழ 30 கிலோமீட்டர் தொலைவிலான சுற்றுச்சாலையின் ஓரங்களில் மருந்துக்குக் கூட நிழல் தரும் மரங்கள் இல்லை .ஜாகுவார் ஷோரூம் பகுதியில் மட்டும் சில மீட்டர் தொலைவிற்கு மர நிழல் இருப்பதால் வெயில் காலங்களில் சாலையோரம் நம்மால் நிற்க முடிகிறது.  இரண்டு நாட்கள் முன்பு சரவணம்பட்டியில் இருந்து காந்திபுரம் வரும் வழியில் உச்சி வெயிலில் இருசக்கர வாகனத்தில் இருக்கும் குடிநீரை எடுத்துக் குடிப்பதற்காகச் சில நொடிகள் நிறுத்தும் அளவு கூட எங்கும் நிழலே தென்படவில்லை. மரங்கள் இன்றி முதன்மைச் சாலைகள் அனைத்தும் மூளியாகவே தோற்றமளிக்கின்றன . நஞ்சப்பா ரோடு,  ப்ரீமியர் மில்ஸ், உக்கடம், அவினாசி சாலை,  ராமநாதபுரம், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் பாலங்கள் பல கிலோமீட்டர் தொலைவிற்குக் கட்டப்பட்டிருப்பதன் பெரும்பயன் பாலத்தின் மேலே இல்லை; பாலத்தின் கீழே நிழலில் பயணம் செய்வதில் இருக்கிறது ...! நிழலில் பயணிப்பதற்காக  அனைத்து ரூட்டுகளிலும் இதுபோல நீளமான பாலங்

சிறுவாணி இலக்கியத் திருவிழா-2024-கோயம்புத்தூர்

  கோயம்புத்தூர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையும், பொது நூலக இயக்ககமும் இரண்டு நாட்கள் நடத்திய சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் இரண்டாம் நாளில்தான் என்னால் கலந்து கொள்ள முடிந்தது. இரண்டு நாட்களிலும் 30 நிமிடக் கால அளவில் இலக்கிய உலகின் பல்வேறு ஆளுமைகளின் பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாகத் திரு. மகுடேஸ்வரன் அவர்கள், தமிழ் இலக்கணம்: தற்காலச் சூழலும் எதிர்காலத் தேவையும் என்ற தலைப்பில் பேசும் பொழுது, தமிழின் தனிச்சிறப்புகளில் ஒன்று குற்றியலுகரம் எனக் குறிப்பிட்டார் .உண்மைதான், தமிழ்ப் பெயர்ச்சொற்களில் நிறையச் சொற்கள் உகரத்தில் முடிவதாக்வே இருக்கின்றன. அந்தப் பழக்கத்தில்தான் ஆங்கிலச் சொற்களையும் நாம் உகரத்துடனே ஒலித்து முடித்துக் கொல்கிறோம் . 2011 இல் எழுதிய " உகரத்தின் மீது நமக்கு இருக்கும் வெறி "என்ற எனது பதிவுகளுக்கான லிங்க்'களைப் பதிவின் இறுதியில் தருகிறேன். படித்துப் பார்க்கவும் . நம்மையும் அறியாமல் நாம்‌ செய்யும் தவறுகள் புரியும். "கதைகளின் பயணம்" என்ற தலைப்பில் அடுத்து திரு .எம் .கோபாலகிருஷ்ணன் அவர்கள் த

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

  செந்தேர் உருளும் செந்தேன் கமழும் செஞ்சேரி ஊருக்கு -அங்கே செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும் செல்லும் யாருக்கும்..! வந்தோர் எவரையும் வாய்கள்ஆர வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத் தந்தே வணங்கி வாழ வழிதரும் தலைமுறை தலைமுறைக்கும்..! உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும் ஊரின் அடையாளம் -வாழ்வு தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே தரணியில் உவமானம்..! பெருமை மிகுந்த ஊருக்கின்னோர் பெயர்தரும் இடம் உண்டு- அழியாத் திருவாம் கல்வி புகட்டும் பள்ளி தெரிவோம் இங்கின்று..! மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும் மாண்புறு அரும்பள்ளி- கல்வித் தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த் தீட்டிடும் பெரும்பள்ளி..! அழியாச் செல்வம் கல்வியை வாரி அளிக்கும் கையள்ளி- அவர்தம் வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய் வரமாய் வரும்பள்ளி..! மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன் மனிதம் புகுத்துங்கள்- நாளை அழ

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

 தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதிய போது தலைமை ஆசிரியர் என்று பிரித்துத்தானே எழுத வேண்டும், தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதுவது பிழையல்லவா என நண்பர் ஒருவர் கேட்டார். கேட்டவர் யார் என்பது இப்பொழுது நினைவில் இல்லையென்றாலும் இதில் இருக்கும் இலக்கணம் என்ன என்பதைப் பார்க்கலாம். தலைமை + ஆசிரியர்---தலைமையாசிரியர்  இதுபோல் பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக என்பவை எல்லாம் தொடக்க நிலை வகுப்புகளிலேயே தமிழ்ப் பாடத்தில் நமக்குத் தரப்படும் பயிற்சிகள்.  இரண்டு சொற்கள் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். முதலில் இருக்கும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் சொல்வோம்.  இங்கு, தலைமை + ஆசிரியர் என்பதில் தலைமை என்பது நிலைமொழி. ஆசிரியர் என்பது வருமொழி.  உண்மையில் இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியின் இறுதியெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன. இறுதியெழுத்தை ஈற்றெழுத்தென்போம்.சில இடங்களில் இயல்பாகவும் ,சில இடங்களில் மாற்றங்களுடனும் புணர்ச்சி நடைபெறும். உதாரணத்துக்கு, ஒன்றுடன் ஒன்று இணையும்‌ சொற்களின் இறுதியெழுத்து-முதலெழுத்து இரண்டுமே உயிரெழுத்துகளாக