Posts

Showing posts from May, 2023

மேகமலை

 நிறைய வான்டர்லஸ்ட்டுகளின் லிஸ்டில் சமீப காலங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு பெயர் 'மேகமலை'.  தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் மேகமலை, "  இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மேகமலையை  ட்ரை பண்ணிப் பார்ப்போமே...!" எனச்  சுற்றுலா அன்பர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது.   மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது ....? ஊட்டி போலப் பரபரப்பான, ஆர்ப்பாட்டமான ஒரு மலைவாழிடமோ,  கொடைக்கானல் போலக் கூட்டம் குவிந்து கிடக்கிற மலை வாழிடமோ,  ஏற்காடு போன்ற ஒரு  சிறுநகரமோ அல்ல இந்த மேகமலை .  இன்னமும் சொல்லப்போனால் மேகமலையை ஓர் ஊர் என்று கூடச் சொல்ல முடியாது‌  அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரண்டு உணவகங்கள், ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், சில அரசு அலுவலகங்கள் , அலுவலர் குடியிருப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்ற மேகமலையின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்த அமைதியும் தனிமையும் கலந்த அழகும், சிலு சிலுவென்று கிளைமேட்டும்தான்.  நாம் ஏறத் தொடங்கிய நாளில் வெயில் செம காட்டு காட்டிக் கொண்டிருந்தது.  ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வந்திருந்த நமக்கு இது சற்று ஏமாற

கோவா

 கோ என்பதால் போ என்கிறாய்...  வா என்பதால் வா என்கிறாய்....!  கோவா, ஆனாலும் ஒரு ஸ்வீட் லொகேஷன் . ஏப்ரல் 28 கடைசி வேலை நாளில் மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்புவதாகத் திட்டம். மங்களூருவில் உள்ள பனம்பூர்க் கடற்கரை, காசர்கோட்டின் கப்பில் கடற்கரை ,கண்ணூரின் கவ்வாயிக் காயல் படகு வீடுகள், வடகரயின் சர்காலயா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் மியூசியம், தலச்சேரிக் கோட்டை....  மூன்று நாட்கள் பேருந்துப் பயணம் என முடிவு செய்து பாலக்காடு- மங்களூர் ஸ்விஃப்ட் சர்வீஸ் ஏசி பஸ் டிக்கெட் புக் செய்துவிட்டுக் காத்திருந்த அடுத்த நாளில் லியோராஜ் அந்த பவுன்சர் கேள்வியை வீசினார்.  " மங்களூர் வரைக்கும் போறதுன்னு ஆயிருச்சு... அப்படியே கோவா போயிட்டா என்ன ....?"  பட் அந்த டீலிங் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சி இருந்துச்சு . கடைசி நேரத்தில் ட்ரெயின் டிக்கெட் கிடைக்காதே எனத் திருப்பி அவரிடமே கேட்க, " கிரான்ட் விட்டாரா இருக்க, ட்ரெயின் எதற்கு ....?" எனப் பன்ச் அடித்து மூன்று நாள் பயணத்திற்கு முடிவுரை எழுதி, ஐந்து நாள் பயணத்திற்கு அடித்தளமிட்டார். அடுத்த நிமிடம் பஸ் புக்கிங் கேன்சல் செய்யப்பட்டது.  ஏற்கனவே கிராண்

இளையோர் சூடா வளையோர் கொய்யார்.

 ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப் பேராட்சியும், நடிப்பு அரக்கன் விக்ரமின் பேராற்றலும், மணிரத்னத்தின்‌என்றும் அலுக்காத திரை மொழியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொன்னியின் செல்வன் II இரவுக்காட்சிக்கு புக் செய்ய வைத்தன. இளையோர் சூடார் பாடலைக் கேட்கும்பொழுது உடன் வந்திருந்த நண்பர், "இது திரைப்பாடல் போலத் தெரியவில்லையே....! செய்யுள் பாடத்தில் படித்தது போலத் தெரிகிறது....!" என்று டவுட் கேட்டார்.  அங்கேயே ஆற்ற ஆரம்பித்தால் அருகில் அமர்ந்திருப்போர் அடிக்க வந்து விடுவார்கள் என்பதால் முகநூலிலும் வலைப்பூவிலும் பதிவிடுகிறேன், படித்துக் கொள்ளுங்கள் பிறருக்கும் பயன்படும் என நான் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெயம் ரவி மேல் மாடத்திலிருந்து பாய்ந்து பாண்டிய ஆபத்துதவிகளைத் துரத்தத் தொடங்கி இருந்தார்.  சோழ நாட்டில் குடவாயில் என்னும் ஊரைச் சேர்ந்த கீரத்தனார் எழுதிப் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கும் ஒரே பாடல் அது .  "இளையோர் சூடார் வளையோர் கொய்யார்....!" புதுக்கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒலியமங்கலம்தான் அன்றைய நாளில் ஒல்லையூர் என்பது அறிஞர் தெளிவு.  ஒல்லையூர் நாடு என்று என்று புகழப்