Posts

Showing posts from April, 2023

முன்னாள் தலைவர்- முந்நாள் தலைவர் ... எது சரி....?

 அடிக்கடி வரும் குழப்பங்களுள் இதுவும் ஒன்று. இரண்டில்  எது சரி என்றால் இரண்டுமே சரிதான்....! பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து.....!   முந்நாள் -  மூன்று நாள்   முன்னாள்-  முன்பிருந்த நாள் , முந்தைய நாள்   முந்நாள்  தலைவர் என்று சொன்னால் மூன்று நாட்களுக்குத் தலைவராக இருந்தவர் ,இருப்பவர், அல்லது இருக்கப் போகிறவர் என்று பொருள்.  முன்னாள் தலைவர் என்றால் இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் எனப் பொருள்.   முன்னால் என்றால் முன்பாக என்பதில் பெரும்பாலும் யாருக்கும் குழப்பம் இல்லை . அதேபோல முந்நூறு , முன்னூறு  என்பதிலும் பலருக்கும் குழப்பம் வரும் . மூன்று + நூறு = முந்நூறு  முன் + நூறு = முன்னூறு  (இதற்கு முன்பு நூறு எனப் பொருள்). மூன்று + நூறு  என்பதில்   நன்னூல் இலக்கண விதிப்படி மூன்று என்பதில் 'று' மறைந்து ' மூன் ' என்றாகி , ,' மூன் ' என்பதில்    ' மூ'  என்பது 'மு'  எனக் குறுகி,  'ன்'  என்பது வருமொழிக்கு ஏற்ப 'ந்' எனத் திரிந்து முந்நூறு எனப் புணர்கிறது.  இலக்கண விதிகளை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் என்னுடைய வலைதளத்துக்கு வரலாம். இது

கடுப்பேத்திட்டாரு மை லார்ட்

 மாலை 3 மணிக்கு செல்ஃபோனில்  அழைத்து  ”ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சுக்கோங்க… ஷார்ப்பா ஈவினிங் செவன் ஓ க்ளாக் வீட்டில் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்…!” என்றார் நண்பர்.    “என்ன விசேஷம் …எங்கே போறோம்..?” எனக் கேட்க,  “ சும்மா ஒரு ரோட்-ட்ரிப் போகலாம்…மிட்-நைட்ல  மூணார் ஹில்ஸ் போயிட்டு அப்படியே மறுநாள் அந்தப் பக்கமா அடிமாலி வழியா இறங்கிடலாம்..!”  என்றார்.  கேட்ட அடுத்த நொடியே ப்ளான் பிடித்துப் போனது. டிராவல் பேகை எடுத்து பேக் செய்து 7 மணி எப்பொழுது வரும் எனக் குறுகுறுப்புடன் அமர்ந்திருக்க ,சரியாக 7.05 உக்கு வாசலில் கார் வந்து நின்றது.     மிகப்பெரிய சர்ப்ரைஸ். புத்தம் புது காம்பாக்ட் செடான் கார்.   நண்பர் முதலில் ஒரு என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் வைத்திருந்தார் .அதில்தான் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் .பிராண்ட் நியூ செடானைப்  பார்த்ததும் ஸ்வீட் ஷாக்கிங்காக  இருந்தது . சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷத்தில்  நண்பர்  ”கமான்… கெட் இன்.. லெட்ஸ்  ஸ்டார்ட்  அவர் ரோட்-ட்ரிப்  ..."!என்றார்  உற்சாகமாக.  வீட்டில் ஒரு காஃபியை விழுங்கிவிட்டுக் கிளம்ப, கார் மிக ஸ்மூத்தாக வழுக்கிக் கொண்டு சென்றது . ”எ