Posts

Showing posts from October, 2022

இலக்கும் பயணமும்

  “It’s the not the Destination, It’s the journey.”  -Ralph Waldo Emerson கவி- ரம்மியமான மலைப்பகுதி...அதுல அப்படி என்ன விதமான ஈர்ப்பு விசை இருக்குன்னு தெரியல.... மறுபடியும் மறுபடியும் ஈர்த்துட்டே இருக்கு..... வெள்ளிக்கிழமை பிற்பகல்ல ஒரு ஐடியா தோணுச்சு. அடுத்த நாளே கே எஸ் ஆர் டி சி யோட ஃபாரஸ்ட் டூர் பஸ்ல ஒரு ட்ரிப் போகணும்னு......  முடிவு பண்ணதுமே கரூரில் இருக்கிற நண்பர் திரு சுரேஷ் அவர்களுக்கு போன் அடிச்சேன் . நம்மைப் போலவே அவரும் ஒரு வாண்டர்லஸ்ட்.    எங்கே போறதுன்னு டக்குனு ஒரு ஐடியாவும் கிடைக்கல.... அதனால ஓசூர் பக்கம் அப்படியே சும்மா ஒரு லாங் டிரைவ் போயிட்டு இருக்கேன்னார். விஷயத்தைச் சொன்ன அடுத்த ரெண்டு மூணு நொடி சத்தத்தையே காணோம். என்ன ஆச்சுன்னு கேட்டேன். U- Turn போட்டுட்டு இருக்கேன்னார். அவ்வளவுதான்.... தேனில காலை 8 மணிக்கு மீட் பண்ணலாம்னு முடிவாச்சு . நைட் 11 மணிக்கு கால் பண்ணினார் சுரேஷ் சார். கார் பிரேக் டவுன் ஆனதால சேலம் அருகே மாட்டிக்கொண்டதால் வர இயலாதுன்னு கூற, நோ ப்ராப்ளம்... சோலோ ட்ரிப்னு முடிவு பண்ணி, விடியற்காலை நாலரை மணிக்குக் கோவை பிரீமியர் மில் ஸ்டாப்ல பொ

நாய்ஸ் பொல்யூஷன்

 பத்தனம்திட்டயிலிருந்து கோயம்புத்தூருக்கு நான் புக் செய்திருந்த ஸ்லீப்பர் கிளாஸ் பஸ் 600 ரூபாயில் எதிர்பார்த்ததை விட ஸ்மூத்தாக இருந்தது.  எனக்குக்  கடைசி வரிசை UPPER BERTH  கிடைத்தது.  இருந்தாலும் அந்த ஏர்பஸ்  அலுங்காமல் குலுங்காமல் மிதந்த படி எங்களைச்  சுமந்து சென்று கொண்டிருந்தது‌ . கொட்டாரக்கரையிலிருந்து வந்த அந்த பஸ்ஸின் அப்பர் பெர்த்தில் ஏற்கெனவே  இருந்த மகராசன் எத்தனை நாள்களாய் அணிந்திருந்தாரோ தெரியவில்லை .....ஸாக்ஸிலிருந்து வந்த வாசனை  .....ஓ மை காட்.....!  10 மணி இருக்கும்.  தூங்கத்  தொடங்குகையில் ஏதோ ஒரு சீட்டிலிருந்து செல்போனில் லல லலலா டைப் சினிமா பாடல் ஒன்று நாராசமாக ஒலிக்க ஆரம்பித்தது .  ஒரே நிமிடத்தில் போதுமான அளவு கடுப்பை அது ஏற்றி விட்டதால் வேறு வழி இன்றி,  "யாரும்மா அது ... ஆஃப் பண்ணுங்க ....இல்லேன்னா ஹெட் போன் போட்டுக் கேளுங்க....!" என ஒரு சவுண்டு விட்டேன் .  எந்த சீட்டில் இருந்து சவுண்ட் வந்தது என யாருக்கும் தெரிந்திருக்காது.  எந்த சீட்டில் இருந்து பாடல் ஒலித்தது என்று எனக்கும் தெரியவில்லை.  எல்லாமே கர்டெயின்களை இழுத்து விட்டிருந்தார்கள்.  ஆனாலும்  அடுத்த ந

செல்ஃபி

  நண்பருடன் கோழிக்கோடு செல்ல வேண்டியிருந்தது . அவருடைய காரிலேயே செல்லலாம்‌ என்று கூறியதால் என்னுடைய காரைக் கோவையில் ஒரு வாகனக் காப்பகத்தில் விட்டுவிட்டுக் கோழிக்கோடு சென்றுவிட்டு அடுத்த நாள் திரும்பி வந்து எடுத்தேன் . காரை ஸ்டார்ட் செய்து எக்ஸிட் பாயின்டில் வந்து நின்று க்ளோவ் பாக்ஸில் கார் பார்க்கிங் டோக்கனைப் பார்த்தால் அதைக் காணோம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறங்கிச் சென்று விஷயத்தைச் சொன்னேன் . பலவிதக் கேள்விகள் கேட்டு இது Genuine Case தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள். இருந்தாலும் ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறதென்றார்கள் . காரின் RC , இன்ஷூரன்ஸ் காப்பி எல்லாவற்றையும் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள் . என்னுடைய மொபைல் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார்கள். ரெஜிஸ்டர் போன்ற ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். 560 ரூபாய் ஃபைன் வாங்கிக் கொண்டார்கள். நம்பர் ப்ளேட் தெரியுமாறு காருடன் என்னை நிற்க வைத்து ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றார்கள். ஒரிஜினல் ஓனர் நான்தான் ...வேறு யாரும் இந்தக் காரை எடுக்க இனி வரமாட்டார்கள் என்றேன் .....ம்ஹூம்....ஒத்துக் கொள்ளவில்லை. சரி

முதுமை

  டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூதாட்டி கைநீட்டி லிஃப்ட் கேட்டார் . எஃப்.ஸி . போன்ற ஒரு நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கில் முதிர்ந்த வயதில் இருக்கும் அப்பெண்மணி ஏறி அமர முடியாதென நினைத்தேன். ஆனால் 65 வயது மதிக்கத்தக்க , ஒடிசலான உடலையுடைய அந்தப் பெண் கைநீட்டிய தோரணையில் அனிச்சையாக வண்டியை நிறுத்தினேன். "நீங்க இந்த வண்டில ஏறி உட்கார்ந்து வர்றது ரொம்பச் சிரமம்" என்றேன் . அதற்குள் மந்தாகினி யானையில் ஏறுவதுபோல வெகு லாவகமாக பைக்கில் ஏறி அமர்ந்திருந்தார் அந்த அம்மாள். அசந்து போன நான் வண்டியை நகர்த்த , " என் பேரன்களும் இதுமாதிரிப் பெரிய வண்டிகள்தான் வச்சிருக்காங்க , என்னை அடிக்கடி பைக்லதான் கூட்டிட்டுப் போவாங்க , எனக்குப் பழக்கம் இருக்கு பயந்துக்காத...!" என்று தெம்பூட்டினார் . தொடர்ந்து ," பைக் என்னப்பா பெரிய பைக்கு , நான் தென்னை மரத்துலயே ஏறுவேன் ,இன்னைக்குக் காலைல கூட அஞ்சு மரம் ஏறியிருக்கேன் " என்றவர் அவர் செய்யும் வேளாண்மை சார்ந்த வேலைகளைச் சொல்லச் சொல்ல எனக்கு மூச்சு முட்டியது . வயதைக் கேட்டேன். " அதெல்லாம் தெரியாதுப்பா....எண்பதுப் பக்கம் இருக்கும்&quo

மனம் மயங்கும் வயநாடு - PART 1

Image
             க டவுளின் படைப்புதான் உலகம் முழுவதுமே எனினும் அவர் மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்தபோது படைத்தவற்றுள் ஒன்றுதான் கேரளம் போலும் .     இயற்கையின் அத்தனை வித அழகையும் கொட்டிப் படைக்கப்பட்ட ஒரு பரப்பு தான் இந்தக் கடவுளின் நாடு எனப்படும் கேரளம் .  ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்கள் , பரவி விரிநத கடல் பரப்புகள் , பெருகி வழிந்தோடும் ஆற்று நீர்ப் பெருக்குகள் , தெளிந்த பச்சையாய்ப்   பரந்து விரவிய சமவெளிகள் , கொட்டித் தீர்க்கும் பேரருவிகள் , சுழித்துக்கொண்டும் நுரைத்துக்கொண்டும்   ஓடித் தெறிக்கும் சிற்றோடைகள் , வயல்வெளிகள் , வண்ணக் காடுகள் , விலங்கினங்கள் , புள்ளினங்கள் , புல்லினங்கள் , பூக்கள் , சலிக்காமல் பெய்து புரளும் பெருமழைகள் … இப்படியாகப்   படைத்து முடிக்கக்   கடும் பேருழைப்புக்   கடவுளுக்குச் செலவாகியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும் .        . தமிழகத்தின் மிகப்பெரும் அச்சு ஊடக நிறுவனத்தின் இதழ்களில் ஒன்றான மோட்டார் விகடனின்   கிரேட் எஸ்கேப் பயணத்துக்காக இருமுறையும் அதற்கு முன்பு சில முறையும் சென்ற