Posts

Showing posts from December, 2021

Silent Valley - சைலண்ட் வேலி - ஆர்ப்பரிக்கும் அமைதி

கோயம்புத்தூரில் இருந்து எட்டிப் பிடிக்கும் தூரத்தில் அமைந்துள்ள சைலன்ட் வேலி (Silent Valley) யில் இயற்கையின் பிரமாண்டத்தைத் திகட்டத் திகட்ட அனுபவிக்கலாம். விடுவோமா நாம்.... வானம் இளமழையைத் தூவிக்கொண்டிருந்த விடிகாலை ஒன்றில் வண்டியைக் கிளப்பினோம். கோவையிலிருந்து தடாகம் சாலையில் மாநகராட்சி எல்லை முடிந்து புறநகர்ப் பகுதி கடந்ததும் V வடிவத்தில் விரிந்து கிடந்த மலைத் தொடர்களுக்கு நடுவில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் சூழப் பயணிக்க,மாங்கரை செக்போஸ்ட் வருகிறது. அதனைக் கடந்ததுமே மலைச்சாலை தொடங்கிவிடுகிறது.பசுமை சூழ வளைந்து செல்லும் சாலையில் காற்றின் புத்துணர்ச்சியை நுகர்ந்து கொண்டே செல்ல வழியில் உலகப் புகழ்பெற்ற சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Salim Ali International Ornithology Center ) மலைச் சாலையில் இருந்து விலகி உள்ளடங்கிப் பெருமிதத்துடன் நிற்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அலுவல் நிமித்தமாக ஒருமுறை அடியேனுக்கு உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது .வேறோர் உலகத்தில் இருந்தது போலத் தோன்றிய புதுமையான அனுபவம் அது. 15 நிமிடங்களில் ஆனைகட்டியை அடைகிறோம். தமிழ்நாடு- கேரள