Posts

Showing posts from June, 2011

ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவம்

Image
தலைவனைப் பிரிந்த தலைவி, ஆற்றாமல் தோழியிடம் எறிந்த ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவமிது! மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- http://inthiya.in/ta/?p=7304 மாலை கவிந்ததடி- என்   மனதும் கனிந்ததடி-தோழீ இருளும் குவிந்ததடி - என்   இதயம் குளிர்ந்ததடி! இதயத்தி லிருப்பவர்போல் - என்னை   இருளும் தழுவியதடி- பிரிவால் புழுதி படிந்திருந்த -மனதைப்   பூசிக் கழுவியதடி! கூட்டை அடைந்திடவே- பறவைக்   கூட்டம் விரைந்ததடி - இதயக் கூட்டில் வசிப்பவருடன் - மனது   கூடிக் கரைந்ததடி! மேற்கே சூரியனும் - மங்கி  மெல்ல மறைந்ததடி.- என் மேனி தவித்ததடி - அவரை    மேயத் துடித்ததடி! மாலைக் குளிரினைச் - சுமந்து   மாருதம் வீசியதடி - என்னை  மாலை யிடுபவரின் - சேதியை   மனதில் பேசுதடி! நிலவும் எழுந்ததடி - வெண்மை   நிறமும் பரவுதடி - இந்த  நிமிடம் அவரருகில் - இருக்க    நினைவு துடிக்குதடி! வெள்ளிப் பூக்களினால் - கருப்பு   வானம் சிரிக்குதடி - என்  வெல்லக் கட்டியவரை - விழிகள்    வெல்லத் துடிக்குதடி ! வானை நோக்குதடி ‍ -விழிகள்   வாசல் பார்க்குதடி- ‍ என்   வாழ்வைப் பகிர்பவரின் ‍- இனிய   வ

எனது தத்துப்பித்து ட்வீட்டுகள்!

http://twitter.com/#!/rpsinghh/ ஓட்டலுக்குத்தனியாகச்செல்கையில் சப்ளையர்சீக்கிரம் வராவிட்டால்கடுப்பாகும் மனசு, கேர்ள்ஃப்ரண்டுடன் செல்லும்போது மெதுவாக வரட்டுமெனப்படபடக்கிறது ஆனாலும் ஒரிஜினல் ப்ரொஃபைல் போட்டோவோடு ட்வீட்டுவது என்பது பல சமயங்களில் சிக்கலாகத்தான் இருக்கிறது! இந்த இரன்டு வரி ட்வீட் தான் உலகையே மாற்றியமைக்கப் போகிறது என்று நினைத்துத்தான் எல்லா ட்வீட்டுகளுமே வெளிப்படுகின்றன. அழைப்பின் பேரில் விழாக்களுக்குச் செல்வதன் நோக்கம், வாழ்த்துவதை விடவும் மொய் வரவுசெலவுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது. கட்டளைக் கலித்துறை எழுதுவதன் நவீன, எளிய வடிவந்தான் ட்வீட்டுவது! டூவீலரின் ஜெயன்ட் சைஸ் பேக் டயர்கள்தாம் ஆண்களின் 'எக்ஸ்ட்ரா சமாசாரத்தின்' வெளிப்பாட்டு வடிகால்!(புரிகிறதோ?) முழு இரவும் தெரியும் முழுநிலவை விட, அது நூறு நிமிடங்கள் பூமியால் மறைந்து விடுவதைத்தான் மக்கள் அதிகம் ரசிக்கின்றனர்.#சந்திரகிரகணம் நிறைவேறாத ஆசைகள்தாம் கனவுகளாக வருகின்றன அல்லது ட்வீட்டுகளாக வெளிப்படுகின்றன! எல்லாருக்கும் மாதக் கடைசிகள் வரவே செய்கின்றன.ஆனால் தேதிகள்தான் ஆளாளுக்கு மாறுபடுகின்றன.#புலம்பல் நடன,

கனவில் வரட்டுமா?

Image
நேரிசை வெண்பாக்கள்: மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- http://inthiya.in/ta/?p=7304 மூன்றாம் கோணம் வலைபத்திரிகை அறிவித்துள்ள கவிதைப்போட்டிக்காக அவர்கள் கொடுத்திருந்த படத்தை வைத்து எழுதிய கவிதை இது. கனவில் வரட்டுமா?    சூழ்ந்த துயரும் சுகமும் மறந்திரவில் ஆழ்ந்து துயிலும் அழகேநான் - வாழ்ந்து பெறுவது வேறென்ன பெண்ணரசி உன்றன் குறுநகை யன்ன கொடை! திறவாயோ என்றுன் திருவடியில் சாய்ந்தே உறங்காமல் பார்த்திருப்பேன் உன்னை - நிறமொளிரும் ஓவியம்போல் எவ்வா றுறங்குகிறாய் பக்தன்போல் சேவித்து நின்றேன் சிலிர்த்து! தங்கத் தளிர்க்கொடியே தாமரையே வான்மதியே பொங்கிப் பெருகுதடி பொன்முகத்தில் ‍- ‍ தங்கித் தினவெடுக்கும் பேரழகைத் தீண்ட வருவேன் கனவிலுன்மேல் மேகமாய்க் கவிழ்ந்து! தூங்கிப் புரள்கிறாய் தோகையே கண்டுள்ளம் ஏங்கித் தவிக்கிறது எப்படித்தான் -தாங்கிக் கழிப்பேனோ வாழ்வைநான் காதல்நோய் தீண்டக் கிழியாதோ என்னிதயம் கேள்! நிலவும் கவியெழுதும் நீயுறங்கும் சீரைச் சிலநொடி பார்த்தாலே சிந்தை - கலைந்துவிடும் நில்லாதே என்னாவி நெஞ்சுக்குள் தூக்கத்தால் கொல்லாதே மூடியகண் கொண்டு! புர

பொன்னின் பொருண்மை

மண்ணுக்கு அடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் வெறும் உலோகந்தான் அது. ஆனாலும் தங்கம் இல்லாமல் மனித வாழ்க்கையைக் கற்பனை செய்ய இயலாது.மூவாசைகளுள் ஒன்றாகப் பொன்னைக் குறிப்பிடக் காரணம், அதன் வசீகரமான, ஒளிரும் அழகுத் தன்மையா,அல்லது கிடைத்தற்கரிய பொருளாக இருப்பதா தெரியவில்லை.அழகும் வசீகரமும்தான் காரணம் என்றால், பொன்னை விட அழகும் வசீகரமும் உள்ள எத்தனையோ பொருட்கள் உள்ளன. அதே போலக் கிடைத்தற்கரிய பொருட்களும் எத்தனையோ உள்ளன.சில நேரங்களில், திடீரெனத் தங்கத்தின் இருப்பு மிக அதிக அளவில் எங்கேனும் கண்டறியப்பட்டோ அலல்து நீரைப்போல நிலத்தடியில் பரவலாகக் கண்டறியப் பட்டாலோ தங்கத்தின் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பு என்ன ஆகும் , தஙகத்தின் ம‌திப்பு என்ன ஆகும்,தங்கத்தை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் மக்களின் நிலை என்ன ஆகும் என்று சிந்திப்பதுண்டு! நேற்று எனது தோழி ஒருத்தி சிலப்பல சவரன்களை, தங்க அணிகலன்கள் விற்பனை செய்யப்படும் கோயம்புத்தூரின் புகழ்பெற்ற கடையொன்றில் வாங்கி வந்து அதைப்பற்றிய தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்கையில், தங்கத்தில் முதலிடுவது எனபதுபுத்திசாலித்தனமான ஒன்று என்றும், அஃது ஒரு மிகச்ச்றந்த சேம

திரு.நாஞ்சில் நாடன் அவ்ர்களுடனான ஒரு சந்திப்பு!

தமிழின் முதுபெரும் எழுத்தாளரும், எளிமையான ஆனால் சொக்கவைக்கும் நடை கைவரப் பெற்றவரும்,தனது அனுபவங்களைப் பிறர்க்கும் பாடமாக்கும் ஆற்றலுடையவரும், நுட்பமான ஆய்வுப் பார்வை உடையவரும்,பழந்தமிழிலக்கியத்தில் தீராத தேடுதல் வேட்கை கொண்டவரும், எண்ணற்ற வாசகர்களைத் தன்பால் ஈர்த்து வைத்திருப்பவருமான திரு.நாஞ்சில் நாடன் அவர்களை ஏப்ரல் மாதத்தில் கோய‌ம்புத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்! "சூரல் பம்பிய சிறுகான் யாறு" என்ற தலைப்பில், தமிழின் யாப்பு வகை அனைத்திலும் நான் பாடிய செய்யுள் தொகுதிக்கு அணிந்துரை வாங்குவதன் பொருட்டு அவரில்லஞ்சென்றேன். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்ற வரிகளை அவ‌ரித்தில் கண்டேன்.மிகப்பெரிய அறிவுஜீவியின் இல்லத்துக்குள் நுழைகிறோம் என்ற உணர்வைவிட, மிக நெருங்கிய உறவினரின் இல்லத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே மேலிட்டது.அவரது வரவேற்பும் உபசரிப்பும் அந்த அளவு அன்புடன் இருந்தது.ஏறத்தாழ மூன்றுமணிநேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததில், அவரது வாசிப்பின் ஆழம், அறிவின் அடர்த்தி,, பார்வையின் வீச்சு, ஆகியவற்றை உணர்ந்தோம் நானும் , என்னுடன் வந்த எனது இனிய நண்பரும், தமிழ

மொபைல் போன் ப்ரவுஸிங்கில் தமிழ் எழுத்துருக்கள் தெரிய வேண்டுமா?

செல்போனில் ப்ரவுஸ் செய்கையில் தமிழ் எழுத்துருக்கள் தெரிவதில்லை, வெறும் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்ற புலம்பல்கள், மொபைல் ஷோரூமில் கேட்டதற்குக் கூட சிம்ப்பிளாக "உங்க மொபைல் சப்போர்ட் பண்ணாது சார்" என்கிற விதத்திலான மறுமொழிகள், நோகியா உள்ளிட்ட பிராண்டட் மாடல்களில் மட்டுமே தமிழ் எழுத்துருக்கள் தெரியும் என்பன போன்ற வதந்திகள் ஆகியவை என்னிடத்திலும் இருந்தன. அதற்குத் தீர்வு அண்மையில் கிடைத்தது. உங்கள் ஆப்பரா மினி ப்ரவுஸரைத் திறந்து, * முகவரிப் பட்டையில் (அட்ரஸ் பார்)   www என்பதை நீக்கிவிட்டு opera:config என்று டைப் செய்யவும். *செட்டிங்ஸ் தேர்ந்தெடுத்து use bitmap fonts for complex scripts என்பதில்    yes கொடுத்து     save செய்து வெளியேறவும்! இனி ப்ரவுஸ் செய்யுங்கள். கட்டங்கள் எல்லாம் மறைந்து தமிழ் எழுத்துருக்கள் தெளிவாகத் தெரியும்.எனக்கு இத்தனை நாட்களாகத் தெரியாத இந்தத் தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்ட சக வலைப்பதிவரும், இனிய நண்பருமான திரு. அகிலம் தங்கதுரைக்கு( http://www.minsittu.blogspot.com/ ) நன்றிகள்!

ஐயா வாங்க அம்மா வாங்க அக்கா வாங்க, கொஞ்சம் எட்டிப்பாத்துட்டுப்

ஐயா வாங்க அம்மா வாங்க அக்கா வாங்க, கொஞ்சம் எட்டிப்பாத்துட்டுப் போங்கனு கூப்பிடற மாதிரி ஒரு கனவு வந்தது. ச்சே சே... எதுக்கு இப்படியெல்லாம் கூப்பிடணும், ஒழுங்கா எழுதினா எல்லாரும் வந்து பார்ப்பாங்களேன்னு தோணிச்சு. உடனே ரொம்ப யோசிச்சு ஒரு கவிதை எழுதினேன், அப்புறம் இன்னொண்ணு எழுதினேன். படிச்சுப் பாத்துட்டுக் கருத்து ஏதாவது இருந்தாச் சொல்லிட்டுப் போங்க புண்ணியமாப் போகும்,,.. ஐயோ, மறுபடியும் அது மாதிரியே வருதே,  அன்புடையீர் , படித்துப் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லப் பிடித்திருந்தால் சொல்லுங்கள், என்னைச் செதுக்கிக் கொள்ள உதவும். பின்வாசல்களில் கூடுகட்டும் மனம் முன்வாசலில் புகழ்ந்துவிட்டுப் பின்வாசலில் புறம் பேசுபவர்கள், பிறரால்  புகழப்படும்போது புளகாகிதமடைந்து பூரித்துப் போகிறார்கள்! புகழ்பவர்கள் எல்லாருக்குமே பின்வாசல்கள் இருக்கக்கூடும் என்பது அவர்களுக்குப்  புரிவதே இல்லை! ஏழாவது சுவை இனிக்கும் கசக்கும் புளிக்கும் கார்க்கும் உவர்க்கும் துவர்க்கும் உருகி உருகிப்  புறம் பேசுதல்  நாவுக்கு என்ன சுவை கொடுக்கும்?

என்னமோ போடா மாதவா...!

தேநீர்க்கடைகளில் அமர்ந்து மணிக்கணக்கில் வெட்டியாகக் கதைப்பதன் சுகத்தை அறியாதோர் செவ்வாய்க் கோளில் கால் பதிப்பது கூட வீண்தான்.அண்மையில் தேநீர்க்கடையொன்றில் கேட்ட உரையாடலின் ஒரு பகுதியைத் தருகிறேன்.30 வயதைத் தொட்ட இருவர் பேசியதை ஒட்டுக் கேட்டபடித் தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். ஆள் 1:  என்னடா மாப்ள, ரெண்டு நாளா ஆளக் காணோமே ஆள் 2:  சான்ஃப்ரான்சிஸ்கோ போயிருந்தேண்டா.... ஆள் 1: அங்க என்னடா? சரக்கு அடிக்கவா? ஆள் 2: இல்ல ... அங்க ஒரு சாமியாரு இருக்காருன்னு நம்ம ........... சொன்னான்....போனேன்! ஆள் 1: சான்ஃப்ரான்சிஸ்கோவிலேயேவா? ஆள் 2: இல்ல மாப்ள.... அங்கிருந்து பத்துப் பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்தில டோக்கியோ நு ஒரு எடம்....மாஸ்கோ போற பஸ்ல ஏறினா அஞ்சு ரூபா டிக்கெட்டு. எறங்கி, கரும்புக்காட்டுக்குள்ள குறுக்குவழில ரெண்டு கிலோமீட்டர்  நடந்தா லண்டன் நு ஒரு எடம். அங்கதான் இருக்காரு அந்தச் சாமியாரு. ஆள் 1: ஏன் ? மெயின் ரோட்டுல இருந்து பஸ் கிடையாதா?  ஆள் 2: இருக்கு, ஒரு நாளைக்கு ரெண்டு தடவதான் வருமாம்! ஆள்1: சாமியார் கிட்ட எதுக்குப் போன ? ஆள்2: புட்டுப் புட்டு வெக்கறாருடா மாப்ள.... ஆள் 1

'உ'கரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி!

'அ' கரம் முதலான அருந்தமிழ் மொழியில், 'உ'கரம் மூன்றாமெழுத்தாக அமைந்துள்ளது.ஒருமாத்திரை அளவுடைய இந்த 'உ'கரம் தான் நம்மை எப்படியெல்லாம் ஆட்கொண்டுள்ளது எனப் பார்த்தால் பெருவியப்பு மேலிடும். 'உ' எனும் இவ்வுயிரெழுத்துப் பிறக்குமிடமானது இதழகளாகும். இதழ்கள் குவியும்போது 'உ' பிறக்கிறது. (நன்னூல்) பொதுவாகக் கைநொடிக்கும் கால அளவையோ அல்லது கண்ணிமைக்கும் கால அளவையோ ஒரு மாத்திரை என்கிறோம். குறிலுக்கு ஒரு மாத்திரை யும் , நெடிலுக்கு இரண்டு மாத்திரை அளவும், மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை அளவும் ஒலியளவு ஆகும்.ஆனால், ஒரு சில இடங்களில், 'உ'கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாய் ஒலிக்கும். அதனை நாம் குற்றியலுகரம் என்று , கூறுகிறோம். வல்லுகரங்களான கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறும் வல்லின மெய்யைத் தொடர்ந்து வருவதுசொல்லின் இறுதியில் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.  சான்று: நாக்கு மூச்சு பாட்டு கூத்து காப்பு கூற்று. மெல்லின மெய்யைத் தொடர்ந்து இவ்வாறு உகரங்களும் வருவது மென்றொடர்க் குற்றியலுகரமாகும். சான்ரு: பங்கு ப