என்னமோ போடா மாதவா...!


தேநீர்க்கடைகளில் அமர்ந்து மணிக்கணக்கில் வெட்டியாகக் கதைப்பதன் சுகத்தை அறியாதோர் செவ்வாய்க் கோளில் கால் பதிப்பது கூட வீண்தான்.அண்மையில் தேநீர்க்கடையொன்றில் கேட்ட உரையாடலின் ஒரு பகுதியைத் தருகிறேன்.30 வயதைத் தொட்ட இருவர் பேசியதை ஒட்டுக் கேட்டபடித் தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.
ஆள் 1:  என்னடா மாப்ள, ரெண்டு நாளா ஆளக் காணோமே

ஆள் 2:  சான்ஃப்ரான்சிஸ்கோ போயிருந்தேண்டா....
ஆள் 1: அங்க என்னடா? சரக்கு அடிக்கவா?
ஆள் 2: இல்ல ... அங்க ஒரு சாமியாரு இருக்காருன்னு நம்ம ........... சொன்னான்....போனேன்!
ஆள் 1: சான்ஃப்ரான்சிஸ்கோவிலேயேவா?
ஆள் 2: இல்ல மாப்ள.... அங்கிருந்து பத்துப் பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்தில டோக்கியோ நு ஒரு எடம்....மாஸ்கோ போற பஸ்ல ஏறினா அஞ்சு ரூபா டிக்கெட்டு. எறங்கி, கரும்புக்காட்டுக்குள்ள குறுக்குவழில ரெண்டு கிலோமீட்டர் 

நடந்தா லண்டன் நு ஒரு எடம். அங்கதான் இருக்காரு அந்தச் சாமியாரு.
ஆள் 1: ஏன் ? மெயின் ரோட்டுல இருந்து பஸ் கிடையாதா? 
ஆள் 2: இருக்கு, ஒரு நாளைக்கு ரெண்டு தடவதான் வருமாம்!
ஆள்1: சாமியார் கிட்ட எதுக்குப் போன ?
ஆள்2: புட்டுப் புட்டு வெக்கறாருடா மாப்ள....
ஆள் 1 : என்னது ... புட்டு விக்கறாரா ?
ஆள் 2: கேனயா... போடா,..... நடந்தத எல்லாம் புட்டுப் புட்டு வெக்கறாருன்னு நம்ம ........ தான் சொன்னான்..... போய்த்தான் பாக்கலாமேன்னு கெள்ம்பபினோம்.மூணு பஸ் மாறி சான்ஃப்ரான்சிஸ்ககோ போயி அங்கிருந்து மாஸ்கோ பஸ்ல ஏறி டோக்கியோ ஸ்டாப்புல எறங்கி நடந்து லண்டன் போறதுக்குள்ள மத்தியானம் ஆயிடுச்சு. அந்தக் குக்கிராமத்துல டீக்கடை ஒண்ணு இருந்துச்சு. பன்னும் டீயும் அடிச்சுட்டு சாமியாரப் பாக்கப் போனோம். ஏற்கனவே பத்துப் பதினஞ்சு பேரு நின்னுக்கிட்டிருந்தாங்க.....நாலஞ்சு காரும் இருந்தது....
ஆள் 1: அப்புறம் .... ?
ஆள் 2: ஒரு மனி நேரங் கழிச்சு சாமியாரோட சிஷ்யன் ஒருத்தன் கூப்பிட்டான், போனோம். நல்லாப் பேசினாரு. நாலஞ்சு ஏக்கர் தோப்பும், மடு கன்னும் இருக்கு அவருக்கு. கூடவே ரெண்டு மூணு எடுபிடிகளும் இருக்காங்க...சோறு தண்ணி வெக்க.என்னப் பாத்தாகுமே , வான்க தம்பி ந்னு வாய் நெறயச் சொல்லி உக்காரச் சொன்னாரு. ஒரு பிடி விபூதி அள்ளிக் கையில கொடுத்தாரு. பேரு ஊரு எல்லாம் கேட்டாரு, சாப்பிட்டாச்சான்னு கேட்டாரு.
நமக்கு தோப்பு , மாடு கன்னு எல்லாம் இருக்கு நு ஆரம்பிச்சு அவரப் பத்தி அஞ்சு நிமிஷம் சொல்லி முடிச்சாரு....அப்புற என்னைப் பாத்து உனக்கென்னவோ பிரச்சனை இருக்குன்னு சொன்னாரு...எனக்குப் படிப்பு கம்மி, இது ரொம்பச் சோதனைக்காலம், அம்மா அப்பாவுக்கு நோவு நெறைய இருக்கு, அப்படீன்னுஎன்னோட ஜாதகத்தையே புட்டுப் புட்டு வெச்சாரு...!
ஆள் 1: ஏண்டா... இதக் கேக்கவா இத்தனை செலவு பண்ணி அவ்வளவு தூரம் போன, என்னியக் கேடிருந்தா உன்னப் பத்தி நானே சொல்லியிருப்பேனே.....................................................................................................................................................................................................
(வெளி நாட்டு நகரங்களின் பெயர்கள் வருமிடங்களில் எல்லாம் நம்மூர்ப் பெயர்களைப் போட்டுக் கொள்ளுங்கள்.புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். புரியாதவர்கள், புரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்! வர்ட்டா...?)


Comments

  1. நல்லாருக்கே மாதவா

    ReplyDelete
  2. என்னத்தச் சொல்ல

    ReplyDelete
  3. இரண்டு பேரும் டீ குடிக்கவே இல்லை போல

    ReplyDelete
  4. ஹா ஹா செம காமெடி.. லே அவுட் மிரட்டுது

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி