எனக்கென

 கண்களுக்கு எட்டினாலும்
கைகளுக்கு எட்டாமல் 
விண்மீன்களாய்ப் 
பூத்திருக்கிறாய்..

வளைவுகளும் திருப்பங்களுமாய்
ஆனால்
வடிவும் வண்ணமுமாய்
காலங்களைக் கொண்டு
எனக்குமுன் கோலங்களை
வார்த்திருக்கிறாய்...

மகிழ்ச்சியாலும் துயரங்களாலும்
செதுக்கப்பட்ட கண்ணிகளை
மனம்‌போன போக்கில்
மாற்றி மாற்றி அடுக்கி
எனக்கான மாலையாய்க்
கோத்திருக்கிறாய்...

ஒவ்வொரு நொடியும்
எனக்காக...எனக்காகவே
காத்திருக்கிறாய்....

கனவுகளால் நெய்து
கற்பனைகளால் எனக்கோர் ஆடையைத்
தைத்திருக்கிறாய்....

இன்னும் எனக்காக
என்னென்ன 
வைத்திருக்கிறாய்.......

என் ப்ரிய வாழ்க்கையே....!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?