Posts

Showing posts from November, 2010

யாப்பருங்கலக்காரிகை (YAAPPARUNGKALAK KAARIKAI) நூலறிமுகம்

பழம்பெரும் மொழியான தமிழின் பண்டைய இலக்கியங்களை நோக்குங்கால், அவற்றுக்கும் முன்னரே எத்தனை ஆண்டு காலமாய் இம்மொழி வழக்கிலிருந்து வந்திருக்க வேண்டும், பண்பட்ட மொழிக்குச் செம்மையான இலக்கணங்கள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை நினைக்க வியப்புப் பெருகுகிறது.அக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்கள் இன்று கிடக்கப் பெறவில்லையெனினும்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அவை இல்லாமல் இன்று கிடைக்கப் பெற்றிருக்கிற பழந்தமிழிலக்கியங்கள் வடிக்கப்பட்டிருக்க முடியாதெனத் துணியலாம்.    நாமறியும் அகத்தியரே கூட செய்தாரெனக் கொளினும் , அவரும் அவர் காலத்துக்கு முன்பிருந்த இலக்கண நூல்களையெல்லாம் ஆராய்ந்துதானியற்றியிருப்பாரென்பது தெளிவு.எழுத்து . சொல். பொருள், யாப்பு , அணி என்னும் ஐந்திலக்கணத்தில் அகத்தியத்தில் விரிவாய்க் கண்ட செய்யுளிலக்கணத்தையே தொல்காப்பியர் தொகுத்தும், பல்காப்பியர் பகுத்தும் தந்தனர் என்பார் உச்சிமேற் புலவர் நச்சினார்க்கினியர்.பல்காப்பியருக்கு முன்பே பல்காயனார் போன்றோரும் , பின்பு காக்கை பாடினியார் , சிறுகாக்கைபாடினியார் , அவினயர்,நக்கீரனார், நத்தத்தனார், மயேச்சுரர் முதலானோரும் செய்யுளிலக்கணஞ் செய்தாலும

பொன்னியின் செல்வன்

தமிழர்தம் உள்ளங்களில் தனியிடம்  பெற்ற பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் திரைப்பட வடிவம் பெறப்போகிறது எனுஞ் செய்தியினை ஆங்கில இதழொன்றின் மூலம் நேற்றறிந்தேன்.   சென்றுபோன செப்டெம்பர் மாதத்தின் இறுதி நாட்களில்தான் ஐந்தாம் முறையாகப் பொன்னியின் செல்வனை வாசித்து முடித்திருந்ததாலும் , அதே வாரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமவாது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தபடியாலும் பொன்னியின் செல்வன் கதைக்களம் இன்னமும் கண்ணை விட்டகலாத நிலையில் அச்செய்தி பேரின்பம் பயப்பதாயிருந்தது.   வந்தியத்தேவனும், திருமலையப்பனும், நந்தினியும் உருவம் பெற்று உலவப்போகிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே இனிப்பாக உள்ளது.கடம்பூர் மாளிகை சுரங்கப்பாதையும், நாகப்பட்டினம் சூடாமணி விகாரமும், பழையாறை அரண்மனையும், தஞ்சைக்கோட்டையும் வெள்ளித்திரையில் விழப்போகின்றன.அநிருத்த பிரம்மராயரின் சாதுர்யத்தையும், குந்தவையின் புத்தி கூர்மையையும், அருள்மொழிவர்மனின் ஆற்றலையும், பழுcஏட்டரையரின் தீரத்தையும் ,ஆதித கரிகாலனின் வீரத்தையும் இருவிழிகளாலும் அள்ளி விழுங்கப்போகிறோம்.  கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் ஒரு முறை சொன்னது போலப்