Posts

Showing posts from March, 2023

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்  தொகுத்தவற்று ளெல்லாந் தலை. இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு. அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.  இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன.  நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது . இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என   மிகச்சுவையாக இருந்தது.  காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு. ஏற்கெனவே 2007 இல் கோயம்புத்தூர் மேட

தங்கம்

 ஹீரோ ஹீரோயின் இல்லை; டூயட் சாங்ஸ் இல்லை; பஞ்ச் டயலாக்குகள் இல்லை;  வில்லன், காமெடியன்கள் இல்லை; ஃபைட் சீன்ஸ் இல்லை; அசட்டுத்தனங்கள் எதுவும் இல்லை; அடாவடி வசனங்கள் இல்லை.... ஆனாலும் 140 நிமிடங்கள் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் தங்கம். (THANKAM) . திருச்சூர் ,கோயம்புத்தூர், மும்பை என மூன்று வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாநகரங்களுக்குக் கதை மாறி மாறிப் பயணித்தாலும்  இன்வேஸ்டிகேஷன்- சஸ்பென்ஸ் த்ரில்லரான  இந்த மூவியின் சிறப்பம்சமே அந்தந்த மாநில மக்கள் அவரவர் மொழியிலேயே பேசிக் கொள்வதுதான்.  தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் எனப் படம் முழுவதும் ஐந்து மொழிகளில் கலந்து கட்டி அடித்தாலும் எளிதில் புரியக்கூடிய வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.  அதிலும் கேரளக் கேரக்டர்கள் தமிழ்நாட்டுக்கும் மும்பைக்கும் வரும்போது தமிழ், ஆங்கிலம், இந்தியில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும் அதேபோலத் தமிழ்நாட்டுக் கேரக்டர்கள், மும்பைக்  கேரக்டர்களும்  மலையாளம், இந்தி, தமிழ் ஆங்கிலம் எனப் பிற மொழிகளில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும் இயல்பாக ,அழகாக அமைந்திருப்பது செம க்யூ

தமிழ் கொஞ்சம் வாழட்டும்

  நாளும் செல்லும் இடங்கள் தோறும் பிழைகள் மலிந்த பெயர்ப் பலகைகள்  கண்ணில் போடுவது இப்பொழுதெல்லாம் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எங்காவது ஓரிரு இடங்களில் அரிய நிகழ்வாகத்தான்  ஏதாவது  பிழையில்லாத் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிலவாவது  கண்ணுக்குத் தென்படும்.  இன்னும் சில காலங்களுக்குத் தமிழின் ஆயுளைத் தள்ளிப் போட முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கும்.   நேற்று நண்பகல் கண்ணில் பட்ட ஒன்று.....   "இங்கு கண்டிப்பாக குப்பைகளை கொட்ட கூடாது....!"  முதலில் வழக்கம் போல ஒற்றுப்பிழை.   " இங்கு கண்டிப்பாகக் குப்பைகளைக் கொட்டக் கூடாது" என்று வரவேண்டிய இடத்தில் மூன்று  'க்' குகளை வெட்டி அதற்கான  அச்சு மற்றும் வண்ணக் கலவைச் செலவை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.  ஆண்டுக்கு இதுபோலப் பத்தாயிரம் பலகைகள், 20,000 எழுத்துக்கள் , பல ஆயிரம் ரூபாய்கள் மிச்சம் என்ற கணக்கீடு ஒரு வேளை இருக்குமோ என்னவோ......!   சரி போகட்டும்...... அதென்ன 'கண்டிப்பாக’ என்று புரியவில்லை.      கண்டித்தல் என்ற பொருளுக்கும் குப்பைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை‌.   கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல் கண்டி