Posts

Showing posts from 2011

உன்னாலானவை

Image
ஓரக்கண்ணால் ஒருநொடி பார்த்ததற்கே உடைந்து போனேன்! ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் உருகிப்போவேனோ உறைந்துபோவேனோ தெரியவில்லை!! எல்லாப்பொருட்களுமே  அணுக்களாலானவை என்கிறது  அறிவியல்! எனது உடலிலுள்ள  அணுக்கள் எல்லாமே  உன்னாலானவை!!

தூங்குவது என்னவோ நீதான்!

#இரவுகளில் உன் நினைவுகள் என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் தூங்குவது என்னவோ நீதான்! #இறுக்கமான உனது ஆடைகளின் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

தூய தமிழ்ச்சொற்கள்

தூய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். தமிழில் கலந்திவிட்ட பிறமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்களை இங்கு தருகிறோம். குறையிருப்பின் சுட்டுக. நண்பர் கோவிகண்ணனுக்கு நன்றிகள்! வதை - துன்புறுத்து நித்திரை - உறக்கம் , தூக்கம் ஞானம்- அறிவு சதம்- நூறு சதவிகிதம் - விழுக்காடு ஐதீகம் - நம்பிக்கை, மரபு, பழைமை ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம், நெறி பரிசுத்தம் - தூய்மை சரித்திரம் - வரலாறு 

என்ன மாயம் செய்தாய்?

Image
வெட்கம் ததும்பி வழிய "போடா' என்ற ஒற்றைச்சொல்லை எறிந்துவிட்டுப்போனாய்! அதன் பிறகு கடிகாரத்தின் டிக்டிக் ஒலிகூட எனக்குப் போடா என்றுதான் கேட்கிறது! விக்கல் எடுக்கிறது உனக்கு! தண்ணீர் தரக்கூடத் தோன்றாமல் 'உம்' கொட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!

தூய தமிழ்ச்சொற்கள்

அன்புத்தமிழர்களே , தமிழ்ச்சொற்களை இனங்காண இப்பதிவு உதவக்கூடும் . பிழையிருப்பின் சுட்டுக,  தூய தமிழ்ச்சொற்கள் பரம்பரை - தலைமுறை தீர்க்கம் - ஆழமான, உறுதியான,முழுமையான சுகம் - நலம் நியதி - நெறி , முறைமை மர்மம் - புதிர் சமீபம் - அண்மை மதியம் - நண்பகல், உச்சி புளகாங்கிதம் - பெருமகிழ்ச்சி தானம் - கொடை

ஏனிந்தக் கொலைவெறி?

இன்றைய கல்விமுறை எத்திசையில் போகிறது என்பதற்கு விடைகள் பலவுண்டு.கல்வி என்பது வயிற்றை நிரப்பும் வழி மட்டும் அன்று, . அது மனிதனை மனிதனாக்கும் ஒன்று என்பது பலருக்கும் தெரியுமோ என்று புரியவில்லை. இன்றைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். காலையில் ஒரு தம்ளர் பால் மட்டும் அருந்திவிட்டுப் பள்ளி செல்லும் எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். மீறினால் ஓரிரண்டு இட்லிகள் அல்லது பிரட் துண்டுகள் அதனுடன் உண்பார்கள்.   மதிய உணவாக டப்பவில் அடைக்கப்பட்ட ஜங்க் வகை உணவு.மாலையில் ஏதேனும் கொறித்துவிட்டு ட்யூஷன்.   "மாலை முழுதும் விளையாட்டு " என்று பாடினார் பாரதியார். மாலையில் பள்ளி விட்டதும் குறைந்தது ஒருமணி நேரமாவது விளையாடுவது என்பது குழந்தைகளில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?சக வயதுக் குழந்தைகளோடு சுதந்திரமாக விளையாடுவது எவ்வளவு பயனுள்ளது என்பது பலருக்கும் புரிவதில்லை. உடற்பயிற்சியின் நன்மைகள் மட்டுமின்றி குழு மனப்பான்மை , தலைமைப்பண்பு, வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் ப

சமன்பாட்டின் உண்மைத்தன்மை

நழுவி ஒழுகும் தீராத கணங்களுக்குள் நுழைந்து, அறுதியிடப்படாத சமன்பாட்டின் உண்மைத்தன்மை புலப்படாமல், வழிந்து பெருகும் இருளோடை கிழிய எங்கோ கூவும் அடிமனக் குரலின் சுவடைப்பற்றி ஓடுகின்ற சிறு பொழுதில்தான் தோன்றியது, காலத்தைச்சேமிக்கும் கலைக்குப் பெயர்தான் மரணம் என்று! எத்தனை இட்டும், எத்தனை எடுத்தும் வாழ்வுப் பெருவெளியில் தீராத தேடலுடன் மூச்சிரைக்க ஓடி ஓடி, தெரியாத கனவிலும் தெரியாத வளைவிலும் கண்டும் , கேட்டும், உண்டும், உயிர்த்தும் உற்றறிந்த புலன்களின் ஊடே முளைத்த மயக்க வினாக்களின் முன்னே யாவும் முயங்கித்தான் கிடக்கின்றன.

தூய தமிழ் - சில ஐயங்கள்

உலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல்லாக மாழை என்ற அரிய தகவலை நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். கனிமங்களில் உலோகம் , அலோகம் என்று இரு பிரிவுகள் உண்டு. பள்ளிப் பருவத்தில் 'ம்' என்ற எழுத்தில் முடிவன எல்லாம் (கந்தகம் பாஸ்பரம் தவிர..) உலோகம் என்றும், 'ன்' என்ற எழுக்தில் முடிவன எல்லாம் அலோகம் என்றும் சொல்லித்தந்தார்கள். ஆங்கிலத்தில் ....M ,N   (  SODIUM, POOTTAASIUM--... METALS.OXYGEN , HYDROGEN -- NONMETALS) உலோகங்கள் பொதுவாக எளிதிற்கடத்தியாகவும், கம்பியாகவும் , தகடாகவும் மாற்றக்கூடிய வகையிலும்,கார ஆக்சைடுகளைத் தரும் வகையிலும், அலோகங்கள் இவற்றினின்று மாறுபட்டும் இருக்கும் . அலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல் வேண்டும். யாராவது சொல்லுங்கள். தூரம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என நண்பர் கோவிகண்னன் குறிப்பிட்டிருந்தார். தூர் என்ற தமிழ்ச்சொல் தூரம் என்றாகியிருக்கலாம். என்பது சிந்திக்க வேண்டிய கருத்து. ஆனால் தூர் என்பது தோண்டுவது என்றானால் அதை ஆழம் என்றுதான் சொல்வோம், தூரம் என்றோ தொலைவு என்றோ கூறுவது மரபன்று. அதேபோல். சயனம் என்பது சாய், சாய்தல் என்பவற்றிலிருந்து வந்திரு

தூய தமிழ்ச்சொற்கள்

தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைச் சுட்டிக்காட்டுவதே இவ்விடுகையின் நோக்கம். பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். அனானியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சயனம்- தூக்கம், உறக்கம் பூர்த்தி - நிறைவு, முழுமை புத்தி - அறிவு தூரம் - தொலைவு தேகம் - உடல் , யாக்கை, மெய் கிராமம் - சிற்றூர்  அன்னம் - சோறு

ஆங்கிலம் இனி மெல்லச்சாகும் - உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி - பாகம் 3

உகரத்தின் மீது நாம் கொண்டிருக்கிற தாளாத வெறியையும் , தீராத மோகத்தையும் இதற்குமுன் இரண்டு இடுகைகளில் கண்டோம்.  மெய்யெழுத்துகளில் எந்தவொரு தமிழ்ச்சொல்லையும் உகரஞ்சேர்த்து முடிக்கும் நமது பண்பாடு ஆங்கிலத்தையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு உச்சரிப்பு முறை உண்டு. ஆனால் ஆங்கிலமானது இந்தியாவில் எந்தவொரு  மாநிலத்திலும், அங்கு புழங்குகின்ற மொழியின் உச்சரிப்பிலேயே வழங்கப்பட்டு வருகிறது. மலையாளிகள் ஆங்கிலத்தை மலையாள உச்சரிப்பிலும்,. இந்திக்காரர்கள் இந்தியைப் போலவும் , கல்தோன்றாக் காலத்து மொழியைப் பேசும் நாம் தமிழே போலவும்பேசி, ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்ததற்குப் பழி வாங்கிக் கொள்கிறோம்.  தொலைக்காட்சிகளில் பேட்டி தரும் புன்ணியாத்மாக்கள் பலரும் ஏன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே இடையிடையெ தமிழ்ச்சொற்களையும் கலந்து கட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை!ஆங்கிலத்தை ஏன் முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது!!அண்மையில் ஒரு நண்பர் தனது மகளின் படிப்பைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்."தேர்டு ஸ்டேன்டர்

உயிர்க்கொல்லி!

Image
ஆயிரம் அர்த்தங்களுடன் உன்னைநான் பார்ப்பது  உனக்குப் புரிபடுவதில்லை! ஆனால் நீ அரைநொடி என்னைப் பார்ப்பதே ஆயிரம் அர்த்தங்களைச்  சொல்லிவிடுகிறது! உனது பார்வையை  எப்படித் தயாரிக்கிறாய்? கொல்லவும் பார்க்கிறது: உயிரைக் கொடுக்கவும் பார்க்கிறது!!

காதல்புலம்

காந்தவிசை பரவியிருக்கும் இடத்தைக் காந்தப்புலம் என்கிறார்கள்! உன் காதல்விசை பரவியிருக்கும் இடத்தைமட்டும் ஏன்  காதல்புலம் என்று சொல்லாமல் பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள்?

தாவணிக்கனவுகள்

உனது இரட்டைச்சடைகளில் ஒன்று, எனது ஆழ்மனக்கிணற்றிலிருந்து கவிதைகளை மொண்டெடுக்கும் கயிறாகவும், மற்றொன்று, பார்க்கும் போதெல்லாம் உனது துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடிவரும் என்மனதை இழுத்துப்பிடிக்கும்  லகானாகவும் இருக்கின்றன..!

தூய தமிழ்ச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள் என்று நினைத்து நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள் சிலவற்றையும் , அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் இங்கு தந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் சில இதோ: குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி தாலுகா - வட்டம் தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு உலோகம் - கனிமம் மமதை - செருக்கு, ஆணவம், திமிர் நிச்சயம் - உறுதி லாபம் - பயன் போதை - கிறக்கம் தம் - மூச்சு தசம்- பத்து தமிழைப் போற்றுவோம்!

ஆச்சரியம் அதிசயம்

நபர் ஒன்றுக்கு .... என்னும் தொடரில் என்ன பிழை உள்ளது எனக்கேட்டிருந்தோம். நாம் அடிக்கடிக் கேள்விப்படும் சொற்பயன்பாடுகளுள் இதுவும் ஒன்று.நபர் என்பது தமிழ்ச்சொல்லன்று, அதற்கிணையான சொல்லாக "ஆள்" என்பதைக் கூறலாம்.ஆள் என்பவர் உயர்திணையாதலால், ஒன்று என அஃறிணைப் பயன்பாட்டைத்தவிர்த்து ஆள் ஒருவர்க்கு எனலாம். இதிலும் ஆள் என்பது தேவையில்லை. சுருக்கமாக ஒருவர்க்கு எனக் கூறிவிடலாம். தலைக்கு எனக் கூறுவது மரபு. தமிழறிவோம்! அதேபோல "வந்திருந்தவர்கள் எல்லாம் வியப்பிலாழ்ந்தார்கள்" என்பது போன்ற பயன்பாடுகளைக் காண்கிறோம்.வந்திருந்தவர்கள் என்பது உயர்திணையாதலின் எல்லாம் என்பதை விட எல்லாரும் எனக்கூறுவதே சரி.வியப்பிலாழ்ந்தார்கள் என்பதை விடவும் வியப்பிலாழ்ந்தனர் என்பது இன்னும் இனிமை..அதிசயித்தனர், ஆச்சரியப்பட்டனர் என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களன்று!வியந்தனர் என்பது தமிழ்ச்சொல்.

தூய தமிழ்ச்சொற்கள்

தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் தந்துள்ளேன். பயன்படுத்தித் தமிழை நிலைநிறுத்துவோம். கோபம் - சினம் உத்தரவு - ஆணை, கட்டளை யுத்தம் - போர், சண்டை புஷ்பம் - பூ, மலர் கும்பம் - குடம் கீதம் - இன்னிசை, பாடல் அமோகம்- மிகுதி, பெருக்கு, மிகை யாத்திரை - பயணம் ஜன்னல் - பலகணி, சாளரம் மாருதம் - காற்று, வளி.

புவிமிதிக்கும் திருவிழா!

வீட்டு வாசற்படியிலேயே  காலணி அணிந்துகொள்கிறாய்! எப்போதாவது அதிசயமாக வெறுங்காலால் நடப்பதைப் புவிமிதிக்கும் திருவிழா என்று கூறினேன்; புவி சொன்னது, "இல்லை, இல்லை, இது என்னைப் பூ மிதிக்கும் திருவிழா என்று!" அழகுக் குறிப்புகளைக் கேட்டு அழகாகியவர்கள் இருக்கிறார்களா எனத்  தெரியவில்லை. ஆனால், நீ கேட்கும் போதுதான் வெறுங்குறிப்புகள் கூட அழகுக்குறிப்புகளாகிவிடுகின்றன.

நூறாவது பதிவு.

Image
இது எனது நூறாவது பதிவு. எனக்குப் பிடித்த சில பதிவுகளை எனது வலைப்பூவிலிருந்து இங்கு ப்கைர்ந்து கொள்கிறேன். நூறு என்பது ஒரு எனது நெடும்பயணத்தில் ஒரு கட்டம் நான் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் நிறைய உள்ளது. உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நனறி!! அழகுச்சுளை சுவாசித்துச் சுவாசித்துக்  காற்றை அழகாக்குகிறாய்; குளித்துக் குளித்து ஆற்றையும் அழகாக்குகிறாய்! courtesy: http://www.chakpak.com/celebrity/amala-paul/43675 ஐம்புலன்களாலும் அழகை  அனுப்பி வைக்கிறாய்! அதனை ரசிக்கவோ ஐயாயிரம் புலன்கள் வேண்டும் போலிருக்கிறது. http://movies.sulekha.com/stargallery/amala-paul/91.htm மெழுகுச்சிலை போல் அமர்ந்திருந்தாய்! கண்டு  உருகிக் கொண்டிருக்கிறது என்  http://movies.vinkas.in/2011/04/amala-paul-shares-her-love-matter-with-us/ காதல்! இரு விழிகளாலும் உன்னை அள்ளி அள்ளித் தின்றாலும் காதல் பசி  தீரவே மாட்டெனென்கிறது! உகரத்தின்மீது நமக்கிருக்கும் வெறி 'அ' கரம் முதலான அருந்தமிழ் மொழியில், 'உ'கரம் மூன்றாமெழுத்தாக அமைந்துள்ளது.ஒருமாத்திரை அளவுடைய இந்த