ஆச்சரியம் அதிசயம்
நபர் ஒன்றுக்கு .... என்னும் தொடரில் என்ன பிழை உள்ளது எனக்கேட்டிருந்தோம். நாம் அடிக்கடிக் கேள்விப்படும் சொற்பயன்பாடுகளுள் இதுவும் ஒன்று.நபர் என்பது தமிழ்ச்சொல்லன்று, அதற்கிணையான சொல்லாக "ஆள்" என்பதைக் கூறலாம்.ஆள் என்பவர் உயர்திணையாதலால், ஒன்று என அஃறிணைப் பயன்பாட்டைத்தவிர்த்து ஆள் ஒருவர்க்கு எனலாம். இதிலும் ஆள் என்பது தேவையில்லை. சுருக்கமாக ஒருவர்க்கு எனக் கூறிவிடலாம். தலைக்கு எனக் கூறுவது மரபு. தமிழறிவோம்! அதேபோல "வந்திருந்தவர்கள் எல்லாம் வியப்பிலாழ்ந்தார்கள்" என்பது போன்ற பயன்பாடுகளைக் காண்கிறோம்.வந்திருந்தவர்கள் என்பது உயர்திணையாதலின் எல்லாம் என்பதை விட எல்லாரும் எனக்கூறுவதே சரி.வியப்பிலாழ்ந்தார்கள் என்பதை விடவும் வியப்பிலாழ்ந்தனர் என்பது இன்னும் இனிமை..அதிசயித்தனர், ஆச்சரியப்பட்டனர் என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களன்று!வியந்தனர் என்பது தமிழ்ச்சொல்.
பகிர்வுக்கு நன்றி... இதே போன்று இலக்கணம் வகுப்பு எடுத்தால் சீக்கிரம் நாங்கள் [பிரமாதமாக]அருமையாக எழுத உதவும்
ReplyDeletevery useful
ReplyDeleteநபர் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்றால், அது எந்த மொழிச்சொல்.?ஒரு வேளை ஆங்கிலத்தின் நம்பர் என்ற சொல்லின் திரிபோ.?
ReplyDeleteநீங்க எம் ஏ தமிழ் போல.. அவ்வ்வ்
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteபா. ம. க சின்னம் மாறுகின்றதா?
அதிசயம் - வியப்பு
ReplyDeleteஆச்சரியம் - பெருவியப்பு