தூய தமிழ்ச்சொற்கள்
தமிழ்ச்சொற்கள் என்று நினைத்து நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள் சிலவற்றையும் , அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் இங்கு தந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் சில இதோ:
குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி
தாலுகா - வட்டம்
தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு
உலோகம் - கனிமம்
மமதை - செருக்கு, ஆணவம், திமிர்
நிச்சயம் - உறுதி
லாபம் - பயன்
போதை - கிறக்கம்
தம் - மூச்சு
தசம்- பத்து
தமிழைப் போற்றுவோம்!
திருத்தங்கள்..
ReplyDeleteஉலோகமும் கனிமமும் வேவ்வேறானவை. உலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல் மாழை.
நிச்சயம் வடசொல்லல்ல. நிச்சயம், நித்தியம் போன்றனவெல்லாம் நில் என்ற வேரிலிருந்து பிறந்தவை. தீ தமிழென்றால் தீபமும் தமிழே. தீவம் என வரவேண்டும். வடக்கே செல்லச் செல்ல
வ > ப ஆக மாறும். இலாவமும் தமிழே. போதை உருதுச் சொல், அதன் நிகரி கிறக்கம் என்பதை விட மத்தம், மதுகை என்பனவாகும். இருபிறப்பியான உன்மத்தத்திலிருக்கும் மத்தம், மதுவிலிருந்து பிறந்த தூயதமிழ்ச் சொல்லாகும். நுண்பொருளில் கிறக்கம் மத்ததிலிருந்து வேறுபடும்.
யாருங்க அந்த அனானி, உங்க பெயரை சொல்லாம தப்பிச்சுட்டீன்களே... உங்கள் இருவர் சேவையும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை நண்பரே உங்கள் வலை தளமும் படைப்புகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ...நன்றி
ReplyDelete