தூய தமிழ்ச்சொற்கள்


தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் தந்துள்ளேன். பயன்படுத்தித் தமிழை நிலைநிறுத்துவோம்.
கோபம் - சினம்
உத்தரவு - ஆணை, கட்டளை
யுத்தம் - போர், சண்டை
புஷ்பம் - பூ, மலர்
கும்பம் - குடம்
கீதம் - இன்னிசை, பாடல்
அமோகம்- மிகுதி, பெருக்கு, மிகை
யாத்திரை - பயணம்
ஜன்னல் - பலகணி, சாளரம்
மாருதம் - காற்று, வளி.

Comments

  1. தேவையான பதிவு

    ReplyDelete
  2. உத்தம் (பொருதுவதால் பொருது என்றுங் கூட அழைப்பர், அதிலிருந்தே உத்தம், பொருந்தி வருவதால் உத்தி என எல்லாம் பிறக்கும்!), கோவம், கும்பம் எல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள். யாத்திரை, மாருதம் என்பன தமிழில் வேர்களைக் கொண்டு உருப்பெற்று வடபுலத்தில் புழங்கப்பட்ட சொற்கள்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி