Posts

Showing posts from July, 2011

நெஞ்சில் நிலைத்த நெல்லைச் சமையல்

திருநெல்வேலி என்றதும் அல்வா, தாமிரபரணி,குற்றாலம் முதலியவை நினைவுக்கு வரும்.திருநெல்வேலி மண்ணுக்கே உரிய மற்றொரு அம்சம் அவர்களது சப்புக்கொட்ட வைக்கும் சமையல்தான். அண்மையில் விகடனில், மூங்கில் மூச்சு எழுதிவரும் சுகாஇதுபற்றி மிகச்சுவையாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.நான் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி அலைந்திருக்கிறேன்.எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு சிறப்பு இருப்பது உண்மை . ஆனால் நெல்லைச் சமையல் எனக்குக் கிறக்கத்தை ஏற்படுத்திவிட்டது.என்னுடன் பணிபுரியும் தோழி ஒருவர் நெல்லைக்காரர்.அவர் கொணரும் உணவுவகைகள் நாவில் நீர் ஊறச் செய்பவை.நெல்லை ஸ்பெஷலாக அவர் அவ்வப்பொழுது கொணரும் சில அயிட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். #உளுந்துக்கஞ்சி: வெள்ளை உளுந்து,தேங்காய்ப்பால், நெய், முட்டை, கருப்பட்டி, ஏலம் , சுக்கு, சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி. சூடாக ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்க, அவ்வளவு இனிமையாக இருக்கும்.சளித்தொல்லைக்குத் தீர்வான இது சத்து மிகுந்ததும் கூட. # ஒட்டுமாவு:பச்சரிசியைநெய் , ஜீனி, முட்டை தேங்காய்ப்பால் விட்டு நன்கு வறுத்து மணல் போன்ற பக்குவத்தில் டப்பாவில் அடைத்து வைப்பார்கள்.

உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி -பாகம் 2

உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி  என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு இடுகையைப் பதிவு செய்திருந்தேன் . அதன் தொடர்ச்சி இது. நேற்றுக் கடைத்தெருவில் நின்றுகொண்டு நண்பர்களுடன் உரையாடிகொண்டிருந்தபோதுஅருகில் எனக்கு அறிமுகமான ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.   ஆல்ரைட்டு, பட்டு ஒன் திங்கு.....என்ற சொற்கள் காதில் பட்டதும் , இஃது என்ன மொழியாக இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்துப் பிறகு ஆங்கிலம் எனத் துணிந்தேன்.  ALL RIGHT, BUT ONE THING......   என்ற ஆங்கிலச் சொற்களைத்தான் அவர் அவ்வாறு கூறிக் கொண்டிருந்திருக்கிறார். நாராசமாக இருந்தது. எதற்கு இந்த வெட்டி பந்தா?எனத்தோன்றியது. சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே கோமாளிகள் என நினைத்திருப்பார் போலும்!சீன் போட ஆசைப்பட்டிருக்கிறார்.. பாவம் , அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்த உரையாடல் வலையேற்றப்படுமென்று.   ஆங்கிலம் பேசித்ட் தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் அரைகுறைகளை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது. தமிழைத்தான் ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை, ஆங்கிலத்தையும் ஏன் குற்றுயிரும் குலையுயிருமாக வீசிக் கடாச வேண்டும்?ஆங்கி

எந்தனா என்றனா ?தமிழறிவோம்,

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி எந்தன் பொன்வண்ணமே.... எந்தன் என்பது என்னுடைய , எனது என்னும் பொருளில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. என்+தன்=என்றன் என்றுதான் வரவேண்டும். ,அதேபோல, உன்+தன்=உன்றன். பன்மையில் வரும் போது, எம்+தம்=எந்தம் என்று வரவேண்டும். அவைதான் என்பது அவைதாம் என்றும், அவர்கள்த்கன் என்பது அவர்கள்தாம் என்றும் வருவதுதான் சரியான தமிழ்.  விபத்தில் ஓட்டுநரின் கால் உடைந்தது ஒட்டுநரின் கால் ரப்பரால் அல்லது மரத்தாலான செயற்கைக்காலாக இருந்து விபத்து நேர்ந்திருந்தால் கால் உடைந்தது என்பது சரி . கால் ஒடிந்தது என்பதுதான் தமிழின் மரபு.  இயல்பான, எளிமையான, அழகான தமிழைப் பயன்படுத்துவோம்

மரபுத் தொடர்கள், பழமொழிகள்,பொன்மொழிகள்.

பழமொழிகள் என்பவை நமது வாழ்வின், மொழியின், பண்பாட்டின் குறியீடுகள். வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வருபவை.இயற்கையோடு இணைந்த வாழ்வினைப் பறைசாற்றுபவை.பழமொழிகள் வெளிப்படும் சூழல் பலவகைப்பட்டது.துக்கம். கோபம்,மகிழ்ச்சி,ஐயம் எனப் பல தருணங்களில் பழமொழிகள் வெளிப்படுகின்றன.சூழலின் தீவிரத்தை ஒருவரிப் பழமொழி உணர்த்தி விடும்.நறுக்குத் தெறித்தாற்போல, ஒரு வித நகைச்சுவை உனர்ச்சியுடன், அங்கதச்சுவையுடன் பழமொழிகள் அமைந்திருக்கும்.ஒருவித எள்ளல் தொனி புலப்படும்.    இன்றைய நாளில் பழமொழிக்கும், பொன்மொழிக்கும், மரபுத்தொடருக்கும் வேறுபாடு அறியாது பலரும் உள்ளனர் என உணர முடிகிறது.பழமொழிகளின் தொகுப்பு என்று வெளியிடப்பட்டுள்ள சிறுநூல்கள் பலவற்றில் எண்ணற்ற பழமொழிகள்  உள்ளன.அவற்றைத் திரட்டித் தந்தமைக்குமவர்களின் கடின உழைப்புக்கும் நாம் கடமைப் பட்டிருக்க வேண்க்டும்.ஆனால் பழமொழிகளுடன், பொன்மொழிகளும்,மரபுத்தொடர்களும் அதில் கலந்துள்ளதைக் காண முடிகிறது. மாணவர்களிடம் பழமொழிகள் சிலவற்றைக் கூறச் செய்கையில் அவர்கள் பெரும்பாலும் பொன்மொழிகளைக் கூறுகின்றனர்.பொன்மொழியும் , மரபுத்தொடர்களும் பழமொழியினின்றும் வேறுபட்ட்

தகிக்கும் தவிப்பு!

Image
ஏறெடுத்துப் பார்த்தநொடி ஏனிப்படி ஆனதடி   எதுவுமெனக்கு உலகிலினித் துச்சம் - நீயோ சேறெடுத்துப் பூசும்படி செய்துவிட்ட கோலமடி   செந்தணலில் விழுவதுதான் மிச்சம்! ஆதரவாய் அன்றிருந்த போதகலக் கண்கள்விரித்து   அழகழகாய்ப் பேசியது இன்னும் - நீஇன்று வேதனையாம் இருட்குழியில் வெறுத்தொதுக்கித் தள்ளும்போதும்   வெளிச்சம்போட்டு என்னுயிரில் மின்னும்! கண்டபடி என்னுயிரைக் கலைத்துவிட்டாய் இனியெனது    கண்ணீரின் ஈரமென்று உலரும்? - இங்கே மண்டிக்கிடக்கும் இருள்விலகி மகிழ்ச்சிபுரளும் நாளைக்காய்   மறுபடியும் என்றுபொழுது புலரும்? வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க   வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம் கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்    கவலையெல்லாம் எப்பொழுது மாளும்? கற்பனைகள் கனவுகளைக் கவிதைகளாய் உருக்கிவிட்டு    காகிதத்தில் படியும்காதல் வெப்பம்- அவளின் கற்கள்பதித்த இதயம்தனைக் கசிந்துருகச் செய்யமெல்ல    காத்திருந்து காத்திருந்து தோற்கும்!

உறக்கம் வராதவனின் உளறல்கள் !

நள்ளிரவாகியும் உறக்கம் பீடிக்காத கண்களாலும், உருகிக் கொண்டிருக்கும் இதயத்தாலும், விரலிடுக்கில் ஒழுகும் கவிதையை இங்கே ஊற்றி வைக்கிறேன்! படித்துப் பாருங்கள்!! விடிந்தபின்னும் என்மனதில்   வெளிச்சம் வரவில்லை- துக்கம் வடிந்துவிட என்கண்களில்    வழியும் படவில்லை! இடிந்துபோன இதயச்சுவர்    இன்னல் தந்தது - என்னைக் கடந்துபோன காலமெலாம்    கருகி வெந்தது! மடிந்துவிட்ட வழிகள்தேடி    மனது துடித்தது.- அதில் படிந்துவிட்ட பாசம்தடுக்கப்    பரி தவித்தது! உடைந்துபோன உள்ளத்திலே       ஊற்றுத் திறந்தது ‍ -நான் அடைந்திருந்த கவலைகளை    அலச மற‌ந்தது கண்விழியில் கவலைச்சுமை    காயம் செய்தது - என் எண்ணமெல்லாம் கதறிப்புலம்ப‌   எட்டிப் பார்த்தது1

வலைமொழிகள்!

பழமொழிகளை வலைமொழிகளாக மாற்றிப்பார்த்தேன்!      ஐடியா தோன்றியதும் 'டக்' கென நினைவில் வந்த பழமொழிகளை மட்டும் மாற்றியிருக்கிறேன்! #ஊரார் வலைப்பூவைப் பின்ன் ஊட்டி வளர்த்தால் தனது வலைப்பூ தானே வளரும்!      (  ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்) #பதிவரின் மனது இடுகையில் தெரியும் .                         (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்) #புத்தியில் இருந்தால்தானே இடுகையில் வரும்.                         (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்) #வலைப்பதிவருக்கு ட்விட்டர் கற்றுத் தர வேண்டுமா?                           (மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?) #கூறு கெட்ட வலைப்பதிவர் ஏழு, எட்டுனு பதிவிட்டாராம்.                      ( கூறு கெட்ட எருமை மாடு ஏழுகட்டுப் புல் தின்னதாம்!) #தட்டச்சு செய்வது கால்மணி நேரம்! திரட்டிகளில் பதிவது முக்கால் மணிநேரம்!!    (சுண்டக்கா காப்பணம், சுமைகூலி முக்காப் பணம்!!!) #கும்பகோணத்தில் பதிவேற்ற குத்தாலத்தில் டைப் செய்தானாம்!                         (கும்பகோணத்தில் மூட்டை தூக்க  குத்தாலத்தில் முண

வெண்பா எழுதுவது எப்படி?

யாப்பருங்கலத்தை அலசி ஆராய்வதற்காகத்தான் இவ்வலைப்பூவை நாம் ஆரம்பித்திருந்தாலும், வெண்பா எழுதுவது எப்படி எனச் சற்றுத் தனித்துப் பார்ப்போம்! தமிழின் பெருங்கொடைகளுள் வெண்பாவும் ஒன்று!தமிழ்க் கவிதையின் பெரும்பிரிவுகளுல் ஒன்றான வெண்பாவுக்குத் தனியிடம் உண்டு.வெண்பாவானது பாடுவதற்குச் சற்றுக் கடினமானதும்,நுட்பமானதும், படிப்பதற்கு இன்பமானதுமாம்.வெண்பா என்றாலே என்னவோ ஏதோ எனத் தெறிப்பவர்க்கும்,அஃது ஏதோ ஒரு புரியாத புதிர் என்பவர்க்கும்,நமக்கெல்லாம் அவ்வளவு எளிதில் வெண்பா வராது என்பவர்க்கும்,அதன் அழகையும் .இயற்றும் முறையையும்,விளக்குவதும் வெண்பா என்பது எவ்வளவு வசீகரமான ஒன்று என்பதைப் புரிய வைப்பதும்,இவ்விடுகையின் நோக்கம்.தமிழில் குறிலும் நெடிலும் தெரிந்திருந்தால் போதும், வெண்பா  இயற்றி விடலாம். வெண்பாவுக்கென்றுள்ள விதிமுறைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும். #வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும். #இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். #ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டும் ம