உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி -பாகம் 2
உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு இடுகையைப் பதிவு செய்திருந்தேன் . அதன் தொடர்ச்சி இது.
நேற்றுக் கடைத்தெருவில் நின்றுகொண்டு நண்பர்களுடன் உரையாடிகொண்டிருந்தபோதுஅருகில் எனக்கு அறிமுகமான ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
ஆல்ரைட்டு, பட்டு ஒன் திங்கு.....என்ற சொற்கள் காதில் பட்டதும் , இஃது என்ன மொழியாக இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்துப் பிறகு ஆங்கிலம் எனத் துணிந்தேன். ALL RIGHT, BUT ONE THING......
என்ற ஆங்கிலச் சொற்களைத்தான் அவர் அவ்வாறு கூறிக் கொண்டிருந்திருக்கிறார்.
நாராசமாக இருந்தது. எதற்கு இந்த வெட்டி பந்தா?எனத்தோன்றியது. சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே கோமாளிகள் என நினைத்திருப்பார் போலும்!சீன் போட ஆசைப்பட்டிருக்கிறார்.. பாவம் , அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்த உரையாடல் வலையேற்றப்படுமென்று.
ஆங்கிலம் பேசித்ட் தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் அரைகுறைகளை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது.
தமிழைத்தான் ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை, ஆங்கிலத்தையும் ஏன் குற்றுயிரும் குலையுயிருமாக வீசிக் கடாச வேண்டும்?ஆங்கிலத்தை மென்று, தின்று,துப்பி,நக்கி, நாறடிப்பதை நினைத்தால், "அய்யோ பாவம் ஆங்கிலம்!' என்றிருக்கிறது."ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்"
என்று யாராவது பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.ஆங்கிலமோ தமிழோ, ஏன் நம்மில் பலருக்கும் அழகாகக் கையாளத் தெரியவில்லை எனச் சிந்தித்துப் ப்பார்த்தேன்.
கழுத்தை அழுத்தும் தாழ்வு மனப்பான்மை,
அடுத்தவர் முன் அறிவாளி எனக் காட்டிக் கொள்ளும் அலட்டல்,
சீன் போடுவது,
ஜெர்க் விடுவது,
எவனுக்கு இங்கே என்ன பெரிதாகத் தெரியப் போகிறது என்ற அலட்சியம்,
ஆகியவை இருக்கலாம். மற்றபடி மொழியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஆங்கிலத்தைக் கொண்டு அலைகிறார்கள் என்று தோன்றவில்லை!
நாஞ்சில் நாடன் சொன்னதை மீண்டும் இங்கு நினைவு கூர்கிறேன்.இந்த அரைகுறை அலப்பறைகளிடம் "நான் ஏன் இந்த நாட்டை நேசிக்கிறேன்?' என்ற தலைப்பில் ஐந்து நிமிடம் பேசவோ , ஒருபக்கக் கட்டுரை எழுதவோ சொன்னால்தெரியும். டங்குவார் அந்து டார்டாராகி விடும்.
தமிழில் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தை அழித்து விடாதீர்கள், பாவம், அது நமக்கு என்ன தீஙு செய்தது? வேணாம்... வலிக்குது.. அழுதுருவேன்....!
முதல் ரசிகன்
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDeleteஎன்று என் வலையில்
ReplyDeleteராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி
i agree with you . its very true . i agree with you . its very true .
ReplyDeletewhat a pity ! what a pity !
ReplyDeleteஎன்று திருந்துவார்களோ இந்த கூறுகெட்ட ஜென்மங்கள்
ReplyDelete