வலைமொழிகள்!


பழமொழிகளை வலைமொழிகளாக மாற்றிப்பார்த்தேன்!      ஐடியா தோன்றியதும் 'டக்' கென நினைவில் வந்த பழமொழிகளை மட்டும் மாற்றியிருக்கிறேன்!


#ஊரார் வலைப்பூவைப் பின்ன் ஊட்டி வளர்த்தால் தனது வலைப்பூ தானே வளரும்!
     (  ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்)


#பதிவரின் மனது இடுகையில் தெரியும் .
                       (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)


#புத்தியில் இருந்தால்தானே இடுகையில் வரும்.
                        (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்)


#வலைப்பதிவருக்கு ட்விட்டர் கற்றுத் தர வேண்டுமா?
                         (மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?)



#கூறு கெட்ட வலைப்பதிவர் ஏழு, எட்டுனு பதிவிட்டாராம்.
                    ( கூறு கெட்ட எருமை மாடு ஏழுகட்டுப் புல் தின்னதாம்!)


#தட்டச்சு செய்வது கால்மணி நேரம்! திரட்டிகளில் பதிவது முக்கால் மணிநேரம்!!
   (சுண்டக்கா காப்பணம், சுமைகூலி முக்காப் பணம்!!!)



#கும்பகோணத்தில் பதிவேற்ற குத்தாலத்தில் டைப் செய்தானாம்!
                       (கும்பகோணத்தில் மூட்டை தூக்க  குத்தாலத்தில் முண்டாசு கட்டினானாம்!)


#இட்டதெல்லாம் இடுகையல்ல!
                 ( மின்னுவதெல்லாம் பொன்னல்ல! )


#எழுத மாட்டாதவன் கைகளுக்கு எழுபத்தெட்டு வலைப்பூக்களாம்!
                 ( அறுக்க மாட்டாதவன் கைகளுக்கு அம்பத்தெட்டு அரிவாளாம் ! )



#ஈ ன்னு இளிக்க இ‍‍-மெயில் ஐடி இல்லாதவன் ப்ளாக்குக்குப் பேரு பெருச்சாளின்னு வெச்சானாம்!
                           (அடியேன்னு கூப்பிடப் பொண்டாட்டி இல்லாதவன் புள்ள பேரு அருணாச்சலம்னு வெச்சானாம்!)



#வம்பளந்து கொண்டே இருப்பவன் வலைப்பதிவு செய்யமாட்டான்!
                                     ( குரைக்கிற நாய் வேட்டைக்கு ஆகாது)


#சீரியல் பாக்குறவனுக்குத் தெரியுமா வலைப்பதிவோட வாசனை !
                                                       (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ?_)



#ப்ளாக்குக்கு ப்ளாக் ஸ்பெல்லிங் மிஸ்டேக்!
                                 ( வீட்டுக்கு வீடு வாசப்படி !)


# அழுதாலும் பதிவு அவந்தானே இட வேண்டும்!
                                ( அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் !)


#ஒரு பின்னூட்டம் கொடுத்துக் கருத்துக் கேட்டவன் ஒன்பது பின்னூட்டம் தந்து விளக்கம் சொன்னானாம்.
                                  ( ஒரு ரூபா தந்து அழச்சொன்னவன் ஒன்பது ரூபா தந்து ஓயச் சொன்னானாம் !)



#ப்ளாக்கர் கண்ணுக்கு கண்டதெல்லாம் இடுகை!
                                 ( அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!)


#டெம்ப்ளேட் நாறினாலும் போஸ்டிங் நல்லா இருந்தா சரி !
                         (கோழி குருடானாலும் சாறு ருசியா இருக்கணும் &   ஓட்டைச் சட்டியானாலும்  கொழுக்கட்டை வெந்தால் சரி! )



#எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியாதவன் ப்ளாக் ஆரம்பிச்சு ப்ரைஸ் வாங்கறேன்னு சொன்னானாம்!
    (கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத‌வன் வானம் ஏறி வைகுண்டம் காட்டப் போறேன்னு சொன்னானாம் !)














Comments

  1. சும்மா அதிருது!

    ReplyDelete
  2. #இட்டதெல்லாம் இடுகையல்ல!
    ( மின்னுவதெல்லாம் பொன்னல்ல)



    என்ன பதிவு எழுதலாம்ன்னு கஷ்டப்பட்டு யோசிச்சிருப்பீங்க போல

    ReplyDelete
  3. வலையகத்தில் இணைத்தாகிவிட்டது

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  5. பழமொழிகள் பல கற்றோம் நண்பரே!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?