Posts

Showing posts from September, 2022

சொந்த வீட்டு மாட்டுத் தயிர் மோர்

 தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, அழகிய பெருங்கடற்கரைகளுள் ஒன்று அது. கோடைக்கால நண்பகல் ஒன்றில் நானும் நண்பரும் அக்கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபோது வினோதமான ஒரு முழக்கம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.  "சொந்த வீட்டு மாட்டுத் தயிரு மோரு...!" என்பதை ஒரு ஸ்லோகன் போல நான் ஸ்டாப்பாக ஒருவர் கத்திக் கொண்டே இருக்கத்  திரும்பி பார்த்தோம் .  Highly excited and energetic ஆகத்  தெரிந்த  அறுபது வயது மதிக்கத்தக்க நபரொருவர்  சைக்கிளில் எதையோ விற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தார். மோர் விற்கிறார்  என்பதைப் புரிந்து கொண்ட நாம் அவருடைய ஸ்லோகன் ஷவுட்டிங்கால்   ஈர்க்கப்பட்டு அருகில் அழைத்தோம் . "என்னண்ணே இது.... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா,  க்யூட்டா மோர்ன்னு சொல்லலாமே.... எதுக்கு இப்படி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறீங்க ....! என்று கேட்டோம்.  அதற்கு அவர், " எல்லாப் பயலுவளும்  மோர் விக்கிறானுவோ.... ஆனா நம்ம மோரு  கெட்டியான தயிரிலிருந்து எடுக்கிற மோரு.  எல்லாம் மோரும் தயிரில இருந்து எடுத்தாலும் நம்ம மோரு ஒரே மாட்டுப் பாலோட  தயிரிலிருந்து எடுக்குற மோரு... அந்த மாடும்  நம்ம வீட்டுலயே வச்ச