சொந்த வீட்டு மாட்டுத் தயிர் மோர்

 தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, அழகிய பெருங்கடற்கரைகளுள் ஒன்று அது. கோடைக்கால நண்பகல் ஒன்றில் நானும் நண்பரும் அக்கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபோது வினோதமான ஒரு முழக்கம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

 "சொந்த வீட்டு மாட்டுத் தயிரு மோரு...!" என்பதை ஒரு ஸ்லோகன் போல நான் ஸ்டாப்பாக ஒருவர் கத்திக் கொண்டே இருக்கத்  திரும்பி பார்த்தோம் .

 Highly excited and energetic ஆகத்  தெரிந்த  அறுபது வயது மதிக்கத்தக்க நபரொருவர்  சைக்கிளில் எதையோ விற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

மோர் விற்கிறார்  என்பதைப் புரிந்து கொண்ட நாம் அவருடைய ஸ்லோகன் ஷவுட்டிங்கால்   ஈர்க்கப்பட்டு அருகில் அழைத்தோம் .

"என்னண்ணே இது.... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா,  க்யூட்டா மோர்ன்னு சொல்லலாமே.... எதுக்கு இப்படி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறீங்க ....! என்று கேட்டோம்.

 அதற்கு அவர், " எல்லாப் பயலுவளும் 

மோர் விக்கிறானுவோ.... ஆனா நம்ம மோரு  கெட்டியான தயிரிலிருந்து எடுக்கிற மோரு.  எல்லாம் மோரும் தயிரில இருந்து எடுத்தாலும் நம்ம மோரு ஒரே மாட்டுப் பாலோட  தயிரிலிருந்து எடுக்குற மோரு... அந்த மாடும்  நம்ம வீட்டுலயே வச்சிருக்கிற பசு மாடு... அதுவும் சொந்த வீட்டில வச்சிருக்கிற கறவை மாடு.... வாங்கிக் குடிச்சு பாருங்க தம்பி.....!" என்றார்.

அப்போதுதான் தெரிந்தது "ஒரே  சொந்த வீட்டுக் கறவைப்  பசுமாட்டுப் பால் தயிர் மோர் " என்பதைத்தான் சுருக்கி அப்படிக் கூ(வு)றுகிறார் என்று.

நல்லவேளை ஒரே ஒரு சொந்த வீடு தான் இருந்திருக்கிறது போலும்.... இல்லாவிட்டால் சொந்த வீட்டுக்கு முன்பு ஏதோ ஒரு அடைமொழி சேர்த்துக்  குருவம்மா கதையாகி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவருடைய USP  யில் இம்ப்ரஸ் ஆகி ஆளுக்கு இரண்டு டம்ளர் அடித்தோம்.

 And the rest is the tragedy ....

ஆமாங்க.... ஏற்கனவே ஏகப்பட்ட ஐட்டங்கள  உள்ள தள்ளி இருந்ததால இந்த மோரும் உள்ள போயி என்ன விதமான  கூட்டு வேதிவினை நடந்துச்சோ தெரியல.... நைட் வரைக்கும் நான் ஸ்டாப்பாப் புடுங்கித் தள்ளிருச்சு....

வாழ்க ஒரே  சொந்த வீட்டுக் கறவைப் பசுமாட்டுத்  தயிர் மோர்ப் பேதி மருந்து .....!

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி