Posts

Showing posts from January, 2023

எளிய தமிழ்....இனிய தமிழ்....!

 இன்று சாலையோரம் இருந்த பலகை ஒன்றில் காணக் கிடைத்த சொற்றொடர்.....   ’இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை'  இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை.  இஃதோர் எச்சரிக்கைப் பலகை.  இங்கு யாரும் கடைகள் திறக்கக் கூடாது என்பதை இவ்விதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.  ஆனாலும் இத்தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும் எனப் பார்க்கலாம். முதலில், 'எந்த கடைகள்' என்பதில் 'எந்த'  என்ற சொல்லுக்குப் பின் வல்லெழுத்து மிகுந்து 'எந்தக் கடைகள்' என வந்திருக்க வேண்டும்.   அடுத்து, இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்ற தொடரானது கேள்விக்குறியுடன் முடிய வேண்டிய ஒரு வினாவாகும்.   இந்தியாவின் தலைநகரம் எது?  வாரத்தின் முதல் நாள் எது? புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார் ? என்பவை போல  ' இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை ' என்பதுவும் ஒரு கேள்வியாகும்.   'இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை....?     விடை:       பூக்கடை      டீக்கடை       புத்தகக் கடை       செருப்புக் கடை       என்பது போல இருக்கலாம்.      சரி , இதை எப்படி எழுதலாம் ?    

உரும்பிக்கர நாங்க நினைச்சதை விடவும் ரொம்பவே அட்டகாசமான ஸ்பாட்.....

 3500 அடி உயரத்தில் மொத்த அழகையும் ஊற்றிப் பொழிந்து கொண்டிருக்கும் உரும்பிக்கரப் பயணம் திரும்பி வந்த பிறகும் ஒரு கனவு போலவே இருக்கிறது .  மயக்கும் எழிலும், பிரமிக்க வைக்கும் பேரழகும், மலைக்க வைக்கும் வனப்புமாகத்தான் உரும்பிக்கர எங்களை வரவேற்றது . ரெகுலர் டூரிசத்தின் எந்த வரையறைக்குள்ளும் வராத உரும்பிக்கரயின் மலைமுகடுகளில் அப்படி என்ன மாயமந்திரம் இருக்கிறது எனத் தெரியவில்லை... மொத்த மனதையும் கட்டிப்போட்டு விடுகிறது.  கோவையிலிருந்து ஆறு மணி நேரத்தில் அடைந்து விடக்கூடிய இடம் ஏந்தயார். இதுதான் உரும்பிக்கரயின் ஸ்டார்ட்டிங் பாயின்ட். பாலக்காடு, திருச்சூர், அங்கமாலி, மூவாற்றுப்புழ ,தொடுபுழ ஈரோட்டுப்பேட்ட என ஓர் அழகான சாலைப் பயணத்தின் முடிவில் ஏந்தயாரை அடையலாம் . ஏந்தயார் ஈரோட்டுப்பேட்டயில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது என்றாலும் அவ்வளவு எளிதில் அங்கு சென்று விட முடியாது . மலைத்தொடர்களின் வழியாக ஏந்தையாருக்கு மூன்று ரூட்டுகள் இருக்கின்றன. Google மேப்பும் அவற்றைக் காட்டும் ;அங்குள்ள மக்களும் அதே ரூட்டுகளைக் காட்டுகிறார்கள்; நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகைகளும் கைகாட்டிகளும் அப்பட

அஞ்சே ரூபால பாங்காக்

 'அஞ்சே ரூபா' என வட்டமாக எழுத்தால் விலை குறிப்பிட்டு விகடன் குழுமத்திலிருந்து ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து கொண்டிருந்த வார இதழ் 'டைம்பாஸ்....' நக்கலும் நையாண்டியும், கிண்டலும் கேலியும், ஜோக்குகளும் காமெடியுமாக முழுவதும் நகைச்சுவைக்கான வார இதழான டைம் பாஸ் செம ஜாலியாக இருக்கும்.   அதில் பாங்காக் ட்ரிப்பிற்கான போட்டி ஒன்றை அறிவித்தார்கள்.  உங்கள் வாழ்வில் நடந்த செல்போன் தொடர்பான நகைச்சுவைச் சம்பவம் ஒன்றைச் சிறு காமெடியாக எழுதி அனுப்புங்கள்... சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் நகைச்சுவைக்குத்  தாய்லாந்துப் பயணம் பரிசு என அறிவித்திருந்தார்கள். நான் எழுதி அனுப்பிய நகைச்சுவைத் துணுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டதாக அடுத்த வாரமே அலைபேசியில் அழைத்தார்கள். பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்றேன். பத்து நாள்களுக்குள் எடுக்க முடியுமா என்றார்கள். வாய்ப்பே இல்லை என்றேன்.  சாரி சொல்லிவிட்டு அடுத்த இடம் பெற்றவரைத் தாய்லாந்து அழைத்துச் சென்றார்கள் .  அழகிய ரிஸ்ட்வாட்ச் ஒன்றை ஆறுதல் பரிசாக எனக்கு அன்பளித்தார்கள்.  விகடன் ஆல்வேஸ் கிரேட்...... நான் எழுதிய செல்போன் சம்பவத்தைக