Posts

Showing posts from February, 2023

கருப்பு -கறுப்பு எது சரி ?

அண்மையில் சகோதரி ஒருவர் இவ் ஐயத்தை எழுப்பி இருந்தார். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் விவாதங்களுள் ஒன்று இது.  சற்று விரிவாகப் பார்ப்போம்....!  கரிய நிறம் என்று குறிப்பிடுவதால் கருப்பு என்பதே சரி என்பர் சிலர்.    கருவிழி  கருங்கூந்தல்   கருந்தேள்   கார்மேகம்   காரிருள்   கன்னங்கரிய  கரிய நிறம்   கருங்குழலி   கார்வண்ணன்   இச்சொற்களை எல்லாம் பார்த்தால் கருப்பு என்ற சொல்லிலிருந்து தோன்றியவை இவை எனப் புரியும்.    'கருகரு' என வளர்ந்த கூந்தல் என்பதிலும் கருப்பு என்பதிலிருந்தே கருகரு என்ற அடுக்குத்தொடர் பிறந்திருக்க முடியும்.    கருப்பு என்பதிலிருந்து அதன் பண்பைக் கொண்ட கரி என்னும் சொல் வந்திருக்கலாம்.   அடுப்புக்கரி    நிலக்கரி என்று எழுதுகிறோம். அடுப்புக்கறி   நிலக்கறி என்று எழுதுவதில்லை.     "துங்கக்  கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்   சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று  யானை முகத்தோனிடம்  முத்தமிழையும்    ஔவையார் கேட்கிறார்.     இப்பாடலில் கரி என்பது யானையைக் குறிக்கும்.  யானை கருமை நிறம் கொண்டது  என்பதால் கரி என்றும் அதற்குப் பெயர்.     "வருகென வந்து போகெனப் போகிய கருநெ

எனக்கென

 கண்களுக்கு எட்டினாலும் கைகளுக்கு எட்டாமல்  விண்மீன்களாய்ப்  பூத்திருக்கிறாய்.. வளைவுகளும் திருப்பங்களுமாய் ஆனால் வடிவும் வண்ணமுமாய் காலங்களைக் கொண்டு எனக்குமுன் கோலங்களை வார்த்திருக்கிறாய்... மகிழ்ச்சியாலும் துயரங்களாலும் செதுக்கப்பட்ட கண்ணிகளை மனம்‌போன போக்கில் மாற்றி மாற்றி அடுக்கி எனக்கான மாலையாய்க் கோத்திருக்கிறாய்... ஒவ்வொரு நொடியும் எனக்காக...எனக்காகவே காத்திருக்கிறாய்.... கனவுகளால் நெய்து கற்பனைகளால் எனக்கோர் ஆடையைத் தைத்திருக்கிறாய்.... இன்னும் எனக்காக என்னென்ன  வைத்திருக்கிறாய்....... என் ப்ரிய வாழ்க்கையே....!

எளிய தமிழ் இனிய தமிழ்......!

"நேற்று எங்கள் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்." மேற்கண்ட சொல் தொடரைக் கவனிப்போம். "இதில் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்" என்று எழுதுவதை விட  "இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்"  என்று எழுதுவது  சரியான தொடராக இருக்கும் .  இதனை மேலும் செழுமைப்படுத்தினால் "இதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்" என்பது கிடைக்கும். இன்னும் செழுமைப்படுத்த வேண்டுமென்றால் , 'கள்'ளை நீக்கலாம்.  (கள் எப்போதுமே நீக்கப்பட வேண்டியதுதான்).   "இதில்  மாணவர் அனைவரும் கலந்து கொண்டனர்".  மாணவர் எனும் பொழுது மாணவிகளைக் குறிப்பது எவ்வாறு எனும் ஐயம் எழும். மாணவர் என்பது பலர்பால் பெயர்தான்.  மாணவன் ,மாணவி என அனைவரையும் சேர்த்தே குறிப்பதுதான் மாணவர் என்ற சொல் .  'அர்' விகுதி வந்தால் ஆண்பால் எனப் பொதுவாக  நினைப்பதுதான் இக்குழப்பத்துக்குக் காரணம். இருந்தாலும், வேறுபடுத்திக் காட்டியே தான் ஆக வேண்டும் என விரும்பினால், "இதில் மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்" என எழுதலாம்.  இப்பொழுது மீண்டு