Posts

Showing posts from July, 2021

நீ

பேரிருளும்  நிலவொளியுமாய்க்   கிடக்கின்றன   நீ ததும்பி வழியும்    இரவுகள்...! எழுதாத வரிகளின்  அழகான கவிதை நீ...!

தோனி அருவியும் கவத்தீவுகளும்- அழகும் அமைதியும் தழுவுமிடங்கள்

Image
கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே Chill,cool ,Free flowing type தான் தோனி அருவியும்.  பாலக்காட்டு மலைகளுக்கு இடையில், அவ்வளவு எளிதில் யாரும் சென்று பார்த்துவிட முடியாத ஓர் உள்ளடங்கிய பகுதியில் ஒய்யாரமாக ஒளிந்து கொண்டிருக்கிறது இந்தத் தோனி அருவி. உயிரினங்களில் மனித நடமாட்டம் மிகக் குறைவாகவும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள தோனி அருவி த்ரில் விரும்பிகளுக்கும் இயற்கைப் பிரியர்களின் அடங்காத ஆர்வத்திற்கும் தீனி போடக்கூடிய அற்புதமான ஸ்பாட். நிறையக் கட்டுப்பாடுகளுடன் தான் தோனி அருவிக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள்.  காலை 10 மணிக்கு ஒரு பேட்ச், நண்பகல் ஒரு மணிக்கு ஒரு பேட்ச் என இரண்டு அனுமதிகள் தான் .  நாங்கள் தேர்வு செய்தது காலை நேரத்தை.   அதற்கு முன்பாக மலம்புழப் பகுதியில் உள்ள கவத் தீவுகளைக் காலை 7 மணிக்கெல்லாம் பார்த்து விடுவது என வாளையாரில்  ஆளுக்கு ஒரு ப்ளாக் டீயை   மட்டும் உறிஞ்சிவிட்டு நான்கு பேராகக் கவத்தீவுகளை அடைந்துவிட்டோம்.    மிகப் பெரிய நீர்ப்பரப்பு விரிந்து கிடக்கும் மலையின் பின்பகுதியில் மலைத்தொடரை ஒட்டிச் செல்லும் பாதையிலிருந்து சற்று உள்ளடங்கி நீர்ப்பரப்

காதலெனும் காற்புள்ளி

எங்கும் விரவி இந்தப் பேரண்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பேராற்றலான காதலைப் பாடியிருக்கும் கவிதைநூல் தான் காதலெனும்  காற்புள்ளி..... காதலில் தோய்த்தெடுத்த சொற்களைக் கொண்டு குட்டிக் குட்டியான அழகுக் கவிதைகளை இந்த நூல் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர்.   "சோபியா ...சோபியா..."  என ஷஸ்வத் சிங் வசீகரிக்கும் குரலில் உருகிக்கொண்டிருந்த பாடலுடனான மாலைநேர மழைச்சாரலில் வாசிக்க நேர்ந்த காதலெனும் காற்புள்ளி நூல் முழுவதும் காதலின் போதை சொட்டுவதை உணரமுடிந்தது. தேர்ந்தெடுத்த சொற்கள்...  சுருக்கமான வரிகள்....   அழகான வடிவம் ...   சுவையான நடை ...   கவிதைகளின் ஊடே காதலில் தொலைந்தவன் ஒருவனின் ஏக்கமும் பெருமூச்சும் இழைந்து கொண்டே இருக்கிறது .    "நீ நனையும் போதெல்லாம்  கொஞ்சம் கூர்த்து பார்   நானும் கரைந்து இருப்பேன்....."     என்ற வரிகள் நூலின் முத்தாய்ப்பென நான் உணர்ந்த தருணத்தில் பின்னட்டையிலும் அதே வரிகள்..... வாசிக்கும்போதே கரைவதை உணரமுடிகிறது .    "உலக அழகிப் போட்டிக்கு உன் நிழலைப் படம் எடுத்து அனுப்பு போதும்..." என்ற வரிகள் ரசனை ததும்பும் கற்பனை.   அழகான