காதலெனும் காற்புள்ளி

எங்கும் விரவி இந்தப் பேரண்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பேராற்றலான காதலைப் பாடியிருக்கும் கவிதைநூல் தான் காதலெனும்  காற்புள்ளி.....

காதலில் தோய்த்தெடுத்த சொற்களைக் கொண்டு குட்டிக் குட்டியான அழகுக் கவிதைகளை இந்த நூல் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர்.

  "சோபியா ...சோபியா..."  என ஷஸ்வத் சிங் வசீகரிக்கும் குரலில் உருகிக்கொண்டிருந்த பாடலுடனான மாலைநேர மழைச்சாரலில் வாசிக்க நேர்ந்த காதலெனும் காற்புள்ளி நூல் முழுவதும் காதலின் போதை சொட்டுவதை உணரமுடிந்தது.


தேர்ந்தெடுத்த சொற்கள்...
 சுருக்கமான வரிகள்....
  அழகான வடிவம் ...
  சுவையான நடை ...
  கவிதைகளின் ஊடே காதலில் தொலைந்தவன் ஒருவனின் ஏக்கமும் பெருமூச்சும் இழைந்து கொண்டே இருக்கிறது .
  
"நீ நனையும் போதெல்லாம்
 கொஞ்சம் கூர்த்து பார் 
 நானும் கரைந்து இருப்பேன்....."
  
 என்ற வரிகள் நூலின் முத்தாய்ப்பென நான் உணர்ந்த தருணத்தில் பின்னட்டையிலும் அதே வரிகள்..... வாசிக்கும்போதே கரைவதை உணரமுடிகிறது .
 
 "உலக அழகிப் போட்டிக்கு உன் நிழலைப் படம் எடுத்து அனுப்பு போதும்..." என்ற வரிகள் ரசனை ததும்பும் கற்பனை.
 
அழகான  வடிவமைப்பில் பக்க எண்கள் கூட இல்லாத புதுமையாக, உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்தும் எழுத்துக்கள். குறிப்பாக, ஒற்றுப் பிழைகள்,‌சந்திப்பிழைகள்,எழுத்துப் பிழைகள் என்று எதுவும் நெருடவில்லை.
 
காதலைப் பாடாத கவிஞன் இல்லை.....
இல்லை...இல்லை...
 காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை ...
 என்பதே உண்மை.
 
 இனிய நண்பரும் நமது பயணங்களில் தொடர்ந்து பங்கெடுப்பவருமான  முகமது ரஃபி அவர்களின் இந்த நூல் இனிமையான அனுபவத்தைத் தருகிறது . அவரது படைப்பாற்றலில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறேன்.
  அவர் இன்னும் நிறைய எழுதவும், பல்வேறு தளங்களில்  தனது படைப்புகளை விரிக்கவும் வாழ்த்துகிறேன்.

Paperback version is available online. Flipkart link ...
 KAATHALENNUM KAARPULLI / காதலென்னும் காற்புள்ளி on Flipkart https://dl.flipkart.com/s/Dn75dRuuuN

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி