மரபுத் தொடர்கள், பழமொழிகள்,பொன்மொழிகள்.
பழமொழிகள் என்பவை நமது வாழ்வின், மொழியின், பண்பாட்டின் குறியீடுகள். வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வருபவை.இயற்கையோடு இணைந்த வாழ்வினைப் பறைசாற்றுபவை.பழமொழிகள் வெளிப்படும் சூழல் பலவகைப்பட்டது.துக்கம். கோபம்,மகிழ்ச்சி,ஐயம் எனப் பல தருணங்களில் பழமொழிகள் வெளிப்படுகின்றன.சூழலின் தீவிரத்தை ஒருவரிப் பழமொழி உணர்த்தி விடும்.நறுக்குத் தெறித்தாற்போல, ஒரு வித நகைச்சுவை உனர்ச்சியுடன், அங்கதச்சுவையுடன் பழமொழிகள் அமைந்திருக்கும்.ஒருவித எள்ளல் தொனி புலப்படும்.
இன்றைய நாளில் பழமொழிக்கும், பொன்மொழிக்கும், மரபுத்தொடருக்கும் வேறுபாடு அறியாது பலரும் உள்ளனர் என உணர முடிகிறது.பழமொழிகளின் தொகுப்பு என்று வெளியிடப்பட்டுள்ள சிறுநூல்கள் பலவற்றில் எண்ணற்ற பழமொழிகள் உள்ளன.அவற்றைத் திரட்டித் தந்தமைக்குமவர்களின் கடின உழைப்புக்கும் நாம் கடமைப் பட்டிருக்க வேண்க்டும்.ஆனால் பழமொழிகளுடன், பொன்மொழிகளும்,மரபுத்தொடர்களும் அதில் கலந்துள்ளதைக் காண முடிகிறது.
மாணவர்களிடம் பழமொழிகள் சிலவற்றைக் கூறச் செய்கையில் அவர்கள் பெரும்பாலும் பொன்மொழிகளைக் கூறுகின்றனர்.பொன்மொழியும் , மரபுத்தொடர்களும் பழமொழியினின்றும் வேறுபட்ட்வை.சான்றுகளுடன் பார்ப்போம்.
பசுமரத்தாணி போல- இஃது ஒரு மரபுத்தொடராகும்.இதனைப் பழமொழி என ஏற்க முடியாது.
ஆனால் பழமொழிகளின் பட்டியலில் இதுவும் இடம் பெறுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.உள்ளங்கை நெல்லிக்கனி போல, வாழையடி வாழையாக--- இவையெல்லாமே மரபுத்தொடர்கள்தாம்.
மூடனின் இதயம் அவனது வாயில் உள்ளது.அறிவாளியின் வாய் இதயத்தில் உள்ளது.- இஃது ஒரு பொன்மொழி.இதனையும் பழமொழி என வகைப்படுத்த முடியாது.பழமொழிகளுக்குச் சில சான்றுகள் தருகிறேன்.
'மாங்காய்க்கு ஆசைப்பட்ட மாமியார் மருமகள் பேரைச் சொல்லிக் கேட்டாளாம்"
:நித்திய கண்டம் பூரண ஆயுசு"
பழமொழிகள் வாழ்வனுபவத்தில் தோன்றியவை. நாட்டார் வழக்காக அறியப்படுபவை.வட்டாரப் பழமொழிகளைப் பற்றிக்குறிப்பிடத்தகுந்த ஆழமான ஆய்வுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
மாங்காய்க்கு ஆசைப்பட்ட மாமனார் யார் பேரைச் சொல்லிக் கேட்பார்?
ReplyDelete