ஆங்கிலம் இனி மெல்லச்சாகும் - உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி - பாகம் 3
உகரத்தின் மீது நாம் கொண்டிருக்கிற தாளாத வெறியையும் , தீராத மோகத்தையும் இதற்குமுன் இரண்டு இடுகைகளில் கண்டோம். மெய்யெழுத்துகளில் எந்தவொரு தமிழ்ச்சொல்லையும் உகரஞ்சேர்த்து முடிக்கும் நமது பண்பாடு ஆங்கிலத்தையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு உச்சரிப்பு முறை உண்டு. ஆனால் ஆங்கிலமானது இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும், அங்கு புழங்குகின்ற மொழியின் உச்சரிப்பிலேயே வழங்கப்பட்டு வருகிறது. மலையாளிகள் ஆங்கிலத்தை மலையாள உச்சரிப்பிலும்,. இந்திக்காரர்கள் இந்தியைப் போலவும் , கல்தோன்றாக் காலத்து மொழியைப் பேசும் நாம் தமிழே போலவும்பேசி, ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்ததற்குப் பழி வாங்கிக் கொள்கிறோம்.
தொலைக்காட்சிகளில் பேட்டி தரும் புன்ணியாத்மாக்கள் பலரும் ஏன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே இடையிடையெ தமிழ்ச்சொற்களையும் கலந்து கட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை!ஆங்கிலத்தை ஏன் முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது!!அண்மையில் ஒரு நண்பர் தனது மகளின் படிப்பைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்."தேர்டு ஸ்டேன்டர்டு படிக்கிறா... ஃபோர்த்துக்கு வேற ஸ்கூல் பாக்கணும்" என்கிற விதத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
தேர்ட் ஸ்டாண்டர்ட் என்பதி தேர்டு என்று உதடு குவித்து முடிப்பதென்பது நமது க்ரொமோசோமில் நடந்து விட்ட கோளாறு!ஆங்கிலத்தில் THIRDU STANDARDU என்றுயாரும் எழுதுவதில்லை.
விளக்கக் கூட்ட்டமொன்றில் ஏஜு ப்ரூஃபு என்ற சொல்லை ஒருவர் அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ஏஜ்ப்ரூஃப்(age proof) எனபதில் u எங்கிருந்து வந்து சேர்ந்து கொண்டது எனத் தெரியவில்லை. செகண்டு கொஸ்டின் , தேர்டு கொஸ்டின் என்று எங்கெங்கு காணினும் ’உ’ கரமாகவே இருக்கிறது. தமிழில் பேசுவது கேவலம் என்ற நினைப்பில் ஆங்கிலம் பேசி மாய்கிறார்களே இந்த அரைகுறைகள், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இவற்றையெல்லாம் கேட்டால் கண்ணீர்மல்கிக் கதறுவார்களே என்ற ஈவிரக்கம் சிறிதளவும் இன்றி தமிழில் தற்குறி, ஆங்கிலத்தில் அரைகுறை என்ற வெட்கமின்றி உலவிவருவது பெரும் வேடிக்கை. ஆங்கிலத்தில் பேச வேண்டாமென்று சொல்லவில்லை. முழுக்க ஆங்கிலத்தில் பேசுங்கள், பார்க்கலாம் உங்கள் அறிவுத்திறனை!
சூப்பரு ஃப்ரண்டு
ReplyDeleteகலக்கல் நண்பா
வாழ்க தமிழ் வாழ்க உயிர் கொடுத்த உகரம்
நன்றி
french, german, spanish காரன் பேசுற ஆங்கிலத்தை நீங்கள் கேட்கவில்லை போலிருக்கிறது... தமிழனடா என்று மார் தட்டி கொள்வீர்கள்
ReplyDeletezinc என்பதை வடநாட்டவர்கள் jink என்று படிக்கும் பொழுது ஐயோ என்று high pitchil அலற சொல்லும்
ReplyDelete