ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா
செந்தேர் உருளும் செந்தேன் கமழும் செஞ்சேரி ஊருக்கு -அங்கே செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும் செல்லும் யாருக்கும்..! வந்தோர் எவரையும் வாய்கள்ஆர வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத் தந்தே வணங்கி வாழ வழிதரும் தலைமுறை தலைமுறைக்கும்..! உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும் ஊரின் அடையாளம் -வாழ்வு தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே தரணியில் உவமானம்..! பெருமை மிகுந்த ஊருக்கின்னோர் பெயர்தரும் இடம் உண்டு- அழியாத் திருவாம் கல்வி புகட்டும் பள்ளி தெரிவோம் இங்கின்று..! மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும் மாண்புறு அரும்பள்ளி- கல்வித் தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த் தீட்டிடும் பெரும்பள்ளி..! அழியாச் செல்வம் கல்வியை வாரி அளிக்கும் கையள்ளி- அவர்தம் வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய் வரமாய் வரும்பள்ளி..! மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன் மனிதம் புகுத்துங்கள்- நாளை...
நறுக்கென்று நாலுவரிகள்
ReplyDeleteநறுந் தொகையே
குறுந்தொகை போல்
நன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Super . . . Super . . What a feeling . .
ReplyDeleteSuper . . . Super . . What a feeling . .
ReplyDeleteகாதல் வந்தால் கடிகாரத்தின் ஒலி கூட 'போடா' என்று கேட்குமா? கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா!
ReplyDelete