தூய தமிழ்ச்சொற்கள்
அன்புத்தமிழர்களே , தமிழ்ச்சொற்களை இனங்காண இப்பதிவு உதவக்கூடும் . பிழையிருப்பின் சுட்டுக,
தூய தமிழ்ச்சொற்கள்
பரம்பரை - தலைமுறை
தீர்க்கம் - ஆழமான, உறுதியான,முழுமையான
சுகம் - நலம்
நியதி - நெறி , முறைமை
மர்மம் - புதிர்
சமீபம் - அண்மை
மதியம் - நண்பகல், உச்சி
புளகாங்கிதம் - பெருமகிழ்ச்சி
தானம் - கொடை
சரியான தமிழ் சொற்கள் அறிந்தேன்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDelete//மர்மம் - புதிர்//
ReplyDeleteதமிழில் மறையம் என்ற ஒரு சொல் இருந்து வழக்கிழந்துள்ளது.
http://www.eudict.com/index.php?lang=tameng&word=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
இந்த வடமொழி மர்மம் அதிலிருந்து திரிந்து வந்திருக்கலாம், மறைதல், மறைத்துக் கொள்ளுதல் என்ற பொருளில் தான் மறையம் புழங்கிவந்துள்ளது.
மறையம் covers
மறையம் secrecy
அலுவலகமுறை நம்பிக்கை / இரகசியம் / மறையம் official confidence
அலுவல் சார் மறையம் official secret
மறையம், இரகசியம் மறைகாப்பு secrecy
******
ஒரு சொல் வடசொல்லா என்று அறிய ஓரளவு அதற்கு வடசொல்லில் வேர்சொல் இருக்கிறதா என்று அறிதல் மிகத் தேவை. மர்மம் என்ற சொல்லுக்கு வேர்ச் சொல் இருப்பது போல் தெரியவில்லை, எனவே அது திரிச் சொல்லாக வடமொழியில் புழங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
//மதியம் - நண்பகல், உச்சி//
மதிக்கும் மதியத்திற்கும் தொடர்பில்லை, எனவே இது மையம் என்ற சொல்லில் பிறந்திருக்க வேண்டும், மையம் தமிழ் வழக்கில் நடுவம் என்று மாற்றி வழங்கிவருகிறார்கள், வடமொழியில் மையம் வழங்கு சொல்லாகவும் தெரியவில்லை, மையம் வடமொழியில் மத்ய என்றே வழங்கப்படுகிறது, மையம் மத்ய ஆகி மதிய ஆகி மதியம் வந்திருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது, மத்ய விலிருந்து மையம் தோன்றி இருக்க வாய்ப்பில்லை பத்ய என்பதை தமிழில் பத்தியம் (கட்டுப்பாடு) என்றே சொல்லுவார்கள். அந்த வகையில் பார்த்தாலிம் மத்ய என்பது மத்தியம் என்றாகி இருக்குமேயன்றி மையம் என்று ஆகி இருக்க வாய்ப்பில்லை, மையம் தமிழ் சொல் என்றோ வடசொல் என்றோ என்னால் உறுதிபட நினைக்க முடியவில்லை.
********
ஜ,ஷ,ஸ வகை வடச் சொற்கள் இல்லாத சொற்கள் தமிழ் சொல்லென்றே பலர் புரிந்து வைத்துள்ளதால் தூய தமிழ் சொற்களை அடையாளம் காணுவதில் தெளிவற்றவர்களாக உள்ளனர்.
உங்கள் தூய தமிழ்சொற்கள் தொகுப்பு நன்றாக உள்ளது, பாராட்டுகள் தொடர்ந்து செயல்படுங்கள்.