தங்கம்
ஹீரோ ஹீரோயின் இல்லை; டூயட் சாங்ஸ் இல்லை; பஞ்ச் டயலாக்குகள் இல்லை; வில்லன், காமெடியன்கள் இல்லை; ஃபைட் சீன்ஸ் இல்லை; அசட்டுத்தனங்கள் எதுவும் இல்லை; அடாவடி வசனங்கள் இல்லை.... ஆனாலும் 140 நிமிடங்கள் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் தங்கம். (THANKAM) .
திருச்சூர் ,கோயம்புத்தூர், மும்பை என மூன்று வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாநகரங்களுக்குக் கதை மாறி மாறிப் பயணித்தாலும் இன்வேஸ்டிகேஷன்- சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த மூவியின் சிறப்பம்சமே அந்தந்த மாநில மக்கள் அவரவர் மொழியிலேயே பேசிக் கொள்வதுதான்.
தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் எனப் படம் முழுவதும் ஐந்து மொழிகளில் கலந்து கட்டி அடித்தாலும் எளிதில் புரியக்கூடிய வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அதிலும் கேரளக் கேரக்டர்கள் தமிழ்நாட்டுக்கும் மும்பைக்கும் வரும்போது தமிழ், ஆங்கிலம், இந்தியில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும் அதேபோலத் தமிழ்நாட்டுக் கேரக்டர்கள், மும்பைக் கேரக்டர்களும் மலையாளம், இந்தி, தமிழ் ஆங்கிலம் எனப் பிற மொழிகளில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும் இயல்பாக ,அழகாக அமைந்திருப்பது செம க்யூட்டாக இருக்கிறது.
கிளைமாக்ஸ் சற்று சொதப்பலாக இருந்தாலும் , நடிப்பு ராட்சசனான பிஜூ மேனனின் பர்ஃபாமன்ஸுக்காகவே இன்னொரு முறைகூடப் பார்க்கலாம் .
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!