ஐயா வாங்க அம்மா வாங்க அக்கா வாங்க, கொஞ்சம் எட்டிப்பாத்துட்டுப்

ஐயா வாங்க அம்மா வாங்க அக்கா வாங்க, கொஞ்சம் எட்டிப்பாத்துட்டுப் போங்கனு கூப்பிடற மாதிரி ஒரு கனவு வந்தது. ச்சே சே... எதுக்கு இப்படியெல்லாம் கூப்பிடணும், ஒழுங்கா எழுதினா எல்லாரும் வந்து பார்ப்பாங்களேன்னு தோணிச்சு. உடனே ரொம்ப யோசிச்சு ஒரு கவிதை எழுதினேன், அப்புறம் இன்னொண்ணு எழுதினேன். படிச்சுப் பாத்துட்டுக் கருத்து ஏதாவது இருந்தாச் சொல்லிட்டுப் போங்க புண்ணியமாப் போகும்,,.. ஐயோ, மறுபடியும் அது மாதிரியே வருதே, 
அன்புடையீர் , படித்துப் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லப் பிடித்திருந்தால் சொல்லுங்கள், என்னைச் செதுக்கிக் கொள்ள உதவும்.


பின்வாசல்களில் கூடுகட்டும் மனம்

முன்வாசலில்
புகழ்ந்துவிட்டுப்
பின்வாசலில்
புறம் பேசுபவர்கள்,
பிறரால் 
புகழப்படும்போது
புளகாகிதமடைந்து
பூரித்துப் போகிறார்கள்!
புகழ்பவர்கள் எல்லாருக்குமே
பின்வாசல்கள் இருக்கக்கூடும் என்பது
அவர்களுக்குப் 
புரிவதே இல்லை!


ஏழாவது சுவை
இனிக்கும் கசக்கும்
புளிக்கும் கார்க்கும்
உவர்க்கும் துவர்க்கும்
உருகி உருகிப் 
புறம் பேசுதல் 
நாவுக்கு என்ன சுவை
கொடுக்கும்?





Comments

  1. கலக்கல் கவிதை.. நீங்கள் சொல்லுவது உண்மைதான்..

    ReplyDelete
  2. சுயநலம் இல்லாமல் பொதுநலத்தோடு வாழ்ந்தாலே புகழ் நலம் உங்களைத் தேடி வரும்!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.