மொபைல் போன் ப்ரவுஸிங்கில் தமிழ் எழுத்துருக்கள் தெரிய வேண்டுமா?
செல்போனில் ப்ரவுஸ் செய்கையில் தமிழ் எழுத்துருக்கள் தெரிவதில்லை, வெறும் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்ற புலம்பல்கள், மொபைல் ஷோரூமில் கேட்டதற்குக் கூட சிம்ப்பிளாக "உங்க மொபைல் சப்போர்ட் பண்ணாது சார்" என்கிற விதத்திலான மறுமொழிகள், நோகியா உள்ளிட்ட பிராண்டட் மாடல்களில் மட்டுமே தமிழ் எழுத்துருக்கள் தெரியும் என்பன போன்ற வதந்திகள் ஆகியவை என்னிடத்திலும் இருந்தன. அதற்குத் தீர்வு அண்மையில் கிடைத்தது.
உங்கள் ஆப்பரா மினி ப்ரவுஸரைத் திறந்து,
* முகவரிப் பட்டையில் (அட்ரஸ் பார்) www என்பதை நீக்கிவிட்டு opera:config என்று டைப் செய்யவும்.
*செட்டிங்ஸ் தேர்ந்தெடுத்து use bitmap fonts for complex scripts என்பதில் yes கொடுத்து save செய்து வெளியேறவும்!
இனி ப்ரவுஸ் செய்யுங்கள். கட்டங்கள் எல்லாம் மறைந்து தமிழ் எழுத்துருக்கள் தெளிவாகத் தெரியும்.எனக்கு இத்தனை நாட்களாகத் தெரியாத இந்தத் தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்ட சக வலைப்பதிவரும், இனிய நண்பருமான திரு. அகிலம் தங்கதுரைக்கு(http://www.minsittu.blogspot.com/) நன்றிகள்!
thank you
ReplyDeletethanq . very useful information
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteI tried it . super
ReplyDeletethank you .
ReplyDeleteசொல்லுக சொல்லிற் பயனுடைய நம் சுற்றத்தார்க்கு..! எனும் வாக்கினை மெய்ப்பித்து விட்டீர்.
ReplyDeleteஅன்பானவரே தங்கள் தளத்தில் தமிழ் யூனிகோடு எழுதியை நிறுவியதற்கு நன்றி html code ல் ஏற்பட்ட பிழைகாரணமாக தங்களுடைய தளத்தில் அது பெரிதாக உள்ளது, சிரமத்துக்கு வருந்துகிறோம். இப்போது புதிதாக மாற்றப்பட்ட code ல் பிரச்சனைகள் இல்லை அதைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். புதிய code ற்கு இங்கே சொடுக்கவும் நன்றி
ReplyDeleteTamil Unicode Writer said... Tuesday, June 14, 2011 10:44:00 PM PDT
ReplyDeleteஅன்பானவரே தங்கள் தளத்தில் தமிழ் யூனிகோடு எழுதியை நிறுவியதற்கு நன்றி html code ல் ஏற்பட்ட பிழைகாரணமாக தங்களுடைய தளத்தில் அது பெரிதாக உள்ளது, சிரமத்துக்கு வருந்துகிறோம். இப்போது புதிதாக மாற்றப்பட்ட code ல் பிரச்சனைகள் இல்லை அதைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். புதிய code ற்கு இங்கே சொடுக்கவும் நன்றி
நன்றி ஐயா, செதாகி விட்டது!