ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவம்

தலைவனைப் பிரிந்த தலைவி, ஆற்றாமல் தோழியிடம் எறிந்த ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவமிது!

மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி-
http://inthiya.in/ta/?p=7304


மாலை கவிந்ததடி- என்
  மனதும் கனிந்ததடி-தோழீ
இருளும் குவிந்ததடி - என்
  இதயம் குளிர்ந்ததடி!


இதயத்தி லிருப்பவர்போல் - என்னை
  இருளும் தழுவியதடி- பிரிவால்
புழுதி படிந்திருந்த -மனதைப்
  பூசிக் கழுவியதடி!



கூட்டை அடைந்திடவே- பறவைக்
  கூட்டம் விரைந்ததடி - இதயக்
கூட்டில் வசிப்பவருடன் - மனது
  கூடிக் கரைந்ததடி!


மேற்கே சூரியனும் - மங்கி
 மெல்ல மறைந்ததடி.- என்
மேனி தவித்ததடி - அவரை 
  மேயத் துடித்ததடி!


மாலைக் குளிரினைச் - சுமந்து
  மாருதம் வீசியதடி - என்னை 
மாலை யிடுபவரின் - சேதியை
  மனதில் பேசுதடி!

நிலவும் எழுந்ததடி - வெண்மை
  நிறமும் பரவுதடி - இந்த 
நிமிடம் அவரருகில் - இருக்க 
  நினைவு துடிக்குதடி!

வெள்ளிப் பூக்களினால் - கருப்பு
  வானம் சிரிக்குதடி - என் 
வெல்லக் கட்டியவரை - விழிகள் 
  வெல்லத் துடிக்குதடி !



வானை நோக்குதடி ‍ -விழிகள்
 வாசல் பார்க்குதடி- ‍ என் 
 வாழ்வைப் பகிர்பவரின் ‍- இனிய 
 வரவை நோக்குதடி!


நேரம் கரையுதடி ‍- அந்த‌
 நிலவும் காயுதடி ‍ -என் 
கோலத் திருமகனை ‍ -மனது
  கொஞ்சப் பாயுதடி !


வாசனை பூசியபடி -மலர்கள்
 விரிந்து மலர்ந்ததடி- என் 
நாசித் துவாரத்தில் -புகுந்து
  நெஞ்சம் கிளர்ந்ததடி



ஆவல் வளருதடி- என் 
  ஆவி துடிக்குதடி -என்
அவரைக் கண்டால்தான் -என்
  ஆயுள் நிறையுமடீ !



மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி-




Comments

  1. அன்பு நண்பா தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

    gunathamizh@gmail.com

    ReplyDelete
  2. முனைவர் இரா.குணசீலன் said... 30/6/11 9:20 AM
    அன்பு நண்பா தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

    gunathamizh@gmail.com

    thanq friend.. this is my e-mail id:

    msrajiniprathapsingh@ymail.com

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி