பிரியாணி

 பிரியாணியைப் பற்றி பலவித ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன; நடந்து கொண்டிருக்கின்றன; இன்னும் நடக்கும்! வாய்க்கு ருசியாக இருக்கும் பிரியாணியைத்தான் அதே வாய்கள் கோவை திருப்பூர்ப் பகுதிகளில் பிரயாணி ( Birayani ) என பாடாய்ப்படுத்துகின்றன.

ஆங்கிலத்தில் பிரியாணி ( Biriyani ) என்பது ஸ்டைலாக Briyani என்று சில காலம் வழங்கப்பட்டு இப்பொழுது இன்னும் ஸ்டைலாக Biryani என மாற்றம் பெற்றுள்ளது. i ஒன்று குறைந்தும், இடம் மாறியும் தற்போது BIRYANI என்பதில் நிற்கிறது. அது நன்றாகவும் இருக்கிறது .

 இங்குள்ள மக்கள் பரோட்டா என்ற சுவையான உணவின் அழகான பெயரை BROTTA  என்று பெரும்பாலும் உச்சரிக்கின்றனர் . பூரியை BOORI  என்றுதான் பலரும் கூறுகின்றனர். சப்பாத்தி பெரும்பாலும் ஸப்பாத்தி என்று ஒலிக்கப்படுகிறது . இவ்வாறாக ஒலிக்கப்படும்போது  செவிக்குச் சுவையாக இல்லை .

ரெடி டு குக் பராத்தா வை ரொட்டியாகக் கருத முடியாது என அண்மையில் GST தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இங்கு மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் , தடுக்கி விழுந்தால் கூட ஒரு பேக்கரி வாசலில் தான் விழ முடியும் என்னும் அளவு எட்டுத்திசையும் நீக்கமற நிறைந்திருக்கும் பேக்கரிகள் தாம்.

  இப்பதிவு கூட  L&T  ரிங்ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில் கிரீன் டீ பருகியபடியே தான் இடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?