செல்ஃபி

 நண்பருடன் கோழிக்கோடு செல்ல வேண்டியிருந்தது . அவருடைய காரிலேயே செல்லலாம்‌ என்று கூறியதால் என்னுடைய காரைக் கோவையில் ஒரு வாகனக் காப்பகத்தில் விட்டுவிட்டுக் கோழிக்கோடு சென்றுவிட்டு அடுத்த நாள் திரும்பி வந்து எடுத்தேன் .


காரை ஸ்டார்ட் செய்து எக்ஸிட் பாயின்டில் வந்து நின்று க்ளோவ் பாக்ஸில் கார் பார்க்கிங் டோக்கனைப் பார்த்தால் அதைக் காணோம்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறங்கிச் சென்று விஷயத்தைச் சொன்னேன் . பலவிதக் கேள்விகள் கேட்டு இது Genuine Case தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இருந்தாலும் ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறதென்றார்கள் . காரின் RC , இன்ஷூரன்ஸ் காப்பி எல்லாவற்றையும் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள் . என்னுடைய மொபைல் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார்கள். ரெஜிஸ்டர் போன்ற ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். 560 ரூபாய் ஃபைன் வாங்கிக் கொண்டார்கள்.

நம்பர் ப்ளேட் தெரியுமாறு காருடன் என்னை நிற்க வைத்து ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றார்கள். ஒரிஜினல் ஓனர் நான்தான் ...வேறு யாரும் இந்தக் காரை எடுக்க இனி வரமாட்டார்கள் என்றேன் .....ம்ஹூம்....ஒத்துக் கொள்ளவில்லை.

சரி என்று தலையைச் சரிசெய்து , ஹேன்க்கியால் முகந்துடைத்து கார் பானெட் டின் இடப்புறமாக நம்பர் ப்ளேட் தெரியுமாறு போஸ் கொடுத்தேன் .

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காரை நிறுத்தி அதன் அருகில் விதவிதமாகப் போஸ் கொடுக்க #Mohamed Rafi ஃபோட்டோ எடுப்பார் . அதே நினைவில் ஃபோட்டோ எடுத்தவுடன் இடம் மாறி மீண்டும் போஸ் கொடுக்க ஆரம்பிக்க வாகனக் காப்பகத்துப் பணியாளர் முறைக்க ஆரம்பித்தார். ரஃபி சாரிடம் சொல்வது போல ஃபோட்டோ எடுத்து முடித்தவுடன் அருகில் சென்று எல்லா ஃபோட்டோஸையும் வாட்சப் பண்ணிடுங்க என்றேன்.

அவர் தன்னுடைய ராசிக்கான அன்றைய பலனைப் படிக்க ஆரம்பித்திருந்தார்.

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.