நிழலிலாது நீளும் சாலைகள்....

 ”அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார்” என்பது தமிழில் புகழ்பெற்ற சொற்றொடர்களில் ஒன்று. உண்மையில் அதன் அருமை இப்போது தான் தெரிகிறது . கோவை நீலம்பூரிலிருந்து மரப்பாலம் வரை ஏறத்தாழ 30 கிலோமீட்டர் தொலைவிலான சுற்றுச்சாலையின் ஓரங்களில் மருந்துக்குக் கூட நிழல் தரும் மரங்கள் இல்லை .ஜாகுவார் ஷோரூம் பகுதியில் மட்டும் சில மீட்டர் தொலைவிற்கு மர நிழல் இருப்பதால் வெயில் காலங்களில் சாலையோரம் நம்மால் நிற்க முடிகிறது.


 இரண்டு நாட்கள் முன்பு சரவணம்பட்டியில் இருந்து காந்திபுரம் வரும் வழியில் உச்சி வெயிலில் இருசக்கர வாகனத்தில் இருக்கும் குடிநீரை எடுத்துக் குடிப்பதற்காகச் சில நொடிகள் நிறுத்தும் அளவு கூட எங்கும் நிழலே தென்படவில்லை.


மரங்கள் இன்றி முதன்மைச் சாலைகள் அனைத்தும் மூளியாகவே தோற்றமளிக்கின்றன .


நஞ்சப்பா ரோடு, 

ப்ரீமியர் மில்ஸ், உக்கடம், அவினாசி சாலை,  ராமநாதபுரம், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் பாலங்கள் பல கிலோமீட்டர் தொலைவிற்குக் கட்டப்பட்டிருப்பதன் பெரும்பயன் பாலத்தின் மேலே இல்லை; பாலத்தின் கீழே நிழலில் பயணம் செய்வதில் இருக்கிறது ...!


நிழலில் பயணிப்பதற்காக 

அனைத்து ரூட்டுகளிலும் இதுபோல நீளமான பாலங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.


 ”இந்த வருஷம் வெயில் ரொம்பக் கொடுமை...!” என்ற டெம்ப்ளேட் டயலாக்குடன் கடந்து செல்வோமாக...!!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?