சூரியன் - கதிர்,ஞாயிறு சந்திரன் - திங்கள் , நிலா, மதி ஆகிருதி - உடல் பூஜை - வழிபாடு திவ்யம் - முழுமை, நிறைவு கவி - பா, பாடல், பனுவல், புலவர் நிர்மாணம் - கட்டுதல்
செந்தேர் உருளும் செந்தேன் கமழும் செஞ்சேரி ஊருக்கு -அங்கே செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும் செல்லும் யாருக்கும்..! வந்தோர் எவரையும் வாய்கள்ஆர வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத் தந்தே வணங்கி வாழ வழிதரும் தலைமுறை தலைமுறைக்கும்..! உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும் ஊரின் அடையாளம் -வாழ்வு தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே தரணியில் உவமானம்..! பெருமை மிகுந்த ஊருக்கின்னோர் பெயர்தரும் இடம் உண்டு- அழியாத் திருவாம் கல்வி புகட்டும் பள்ளி தெரிவோம் இங்கின்று..! மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும் மாண்புறு அரும்பள்ளி- கல்வித் தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த் தீட்டிடும் பெரும்பள்ளி..! அழியாச் செல்வம் கல்வியை வாரி அளிக்கும் கையள்ளி- அவர்தம் வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய் வரமாய் வரும்பள்ளி..! மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன் மனிதம் புகுத்துங்கள்- நாளை...
தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதிய போது தலைமை ஆசிரியர் என்று பிரித்துத்தானே எழுத வேண்டும், தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதுவது பிழையல்லவா என நண்பர் ஒருவர் கேட்டார். கேட்டவர் யார் என்பது இப்பொழுது நினைவில் இல்லையென்றாலும் இதில் இருக்கும் இலக்கணம் என்ன என்பதைப் பார்க்கலாம். தலைமை + ஆசிரியர்---தலைமையாசிரியர் இதுபோல் பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக என்பவை எல்லாம் தொடக்க நிலை வகுப்புகளிலேயே தமிழ்ப் பாடத்தில் நமக்குத் தரப்படும் பயிற்சிகள். இரண்டு சொற்கள் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். முதலில் இருக்கும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் சொல்வோம். இங்கு, தலைமை + ஆசிரியர் என்பதில் தலைமை என்பது நிலைமொழி. ஆசிரியர் என்பது வருமொழி. உண்மையில் இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியின் இறுதியெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன. இறுதியெழுத்தை ஈற்றெழுத்தென்போம்.சில இடங்களில் இயல்பாகவும் ,சில இடங்களில் மாற்றங்களுடனும் புணர்ச்சி நடைபெறும். உதாரணத்துக்கு, ஒன்றுடன் ஒன்று இணையும் சொற்களின் இறுதியெழுத்து-முதலெழுத்து ...
பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!