தமிழ் வலைப்பதிவர்களுக்காக ஒரு பதிவு


வலிமிகுமிடங்கள்
நான்காம் வேற்றுமை விரியில் வல்லினங்களான க்,ச்,த்,ப் ஆகியன மிகுந்து வரும்.


சான்று:


அவனுக்கு + கொடுத்தான் + அவனுக்குக் கொடுத்தான்
வேலிக்கு + கம்பி = வேலிக்குக் கம்பி
வயலுக்கு + பயிர் = வயலுக்குப் பயிர்


வினாச்சொற்களை அடுத்து:


எ+பக்கம் = எப்பக்கம்
எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான்
எந்த + படம்= எந்தப் படம்



சுட்டுச் சொல்:


அ+காளை =அக்காளை
அந்த + படம் =அந்தப்படம்
இ+ சிலை =இச்சிலை
இந்த +கல் =இந்தக்கல்


தூய தமிழில் பதிவிடுவோம்.                                          (தொடரும்..)

Comments

  1. தொடருங்கள்...
    நன்றி...
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  2. தேவையான பதிவு

    ReplyDelete
  3. வரவேற்கிறேன்...

    நல்லது..

    ReplyDelete
  4. நல்லது .. தொடரட்டும்

    ReplyDelete
  5. தொடருங்கள் உங்களை தொடர்கிறேன்ர்

    ReplyDelete
  6. தமிழர்களுக்குத் தேவையான மிக நல்ல பதிவு.
    நன்றிங்க. தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
  7. பள்ளியில் படித்தவற்றை நினைவு கூறவும், பிழையில்லாமல் எழுதவும் கண்டிப்பாக மிகவும் தேவையான பதிவு. அருமை நண்பரே... தொடரட்டும்...

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.