"சைட் " ஒரு சமூகப் பார்வை
இளையோர் முதியோர், ஆண் , பெண் என வேறுபாடில்லாமல்"சைட்" என்பது இன்றைய தலைமுறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.பண்டைக்காலத்திலிருந்து நிலவி வரும் பழக்கந்தான் என்றாலும்மாறிவரும் சூழலுக்கேற்ப இதுவும் மாற்றம் பெற்று வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் இது உறைந்து கிடக்கிறது.மூன்றாசைகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானது.வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் முதலில் செய்வது இதைத்தான்.சிலர் மற்றவர்களுக்குத் தெரிந்து செய்கிறார்கள், சிலர் தெரியாமல் செய்கிறார்கள்.
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் இதில் மட்டும் யாருமே சலிப்பது இல்லை. போதுமென்ற மனமும் யாருக்கும் இல்லை. சைட்டில் கிடைக்கும் பேரானந்தத்திற்கு மனிதன் எப்போதுமே அடிமை. பேருந்துப் பயணங்கள் ,நடை பயிற்சி, வெளியூர் என எங்கும் நாம் இதை விடுவதேஇல்லை. பார்த்து மகிழ்ந்த பின்தான் நமக்கு மன நிறைவு.சில பொழுதுகளில்" சே.... மாப்ள... இது மட்டும் எனக்குக் கிடைச்சா.. வாழ்க்கையே சொர்க்கந்தாண்டா.. " என்று அங்கலாய்ப்பதும் உண்டு.சைட்டுகளி ல் பலவகை உண்டு.சிறியது, பெரியது, வளைவு , நெளிவுகளுடனான் அமைப்பு. இடை குறுகியது என.சில இடங்களில் பார்த்த உடனே "ரேட்" பேசுமளவு சென்று விடுபவர்களும் உண்டு.
ஆனால் இதில் சில கொடுமைகளும் உண்டு. விளை நிலங்களை எல்லாம் இன்று சைட் பிரித்துவிற்பதுதான் கவலை தருவதாக உள்ளது . இந்நிலை மாற வேன்டும்.
பி.கு:
காய்ந்த மண்டைகளைக் குளிர்விக்க ஒரு டிப்ஸ்: நீங்கள் கிழக்குப் பார்த்து சாலையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.உங்களின் வலப்பக்கத்திலிருந்து , அதாவது தெற்கிலிருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபிகர்கள் வடக்கு நோக்கி வருவதைப் பார்த்து விடுகிறீர்கள்.உடனே வாயிலிருந்து ஜொள் எனப்படும் ஆனந்த திரவம் ஒழுகி வழிய வாய்பிளந்து பார்க்காமல் வேறெங்காவது பாருங்கள்!அந்த அழகுக் குழு உங்களைக் கடந்து இடப்பக்கமாகச் சென்றவுடன் ( அதாவது வடதிசை )பார்த்துப் பேரின்பம் ( அல்ப சந்தோஷம் ) உய்யுங்கள்!
பி.கு. பி.கு : ( பின்குறிப்புக்கொரு பின் குறிப்பு)
இது போன்றதொரு பேரின்பச் சூழலில் மேற்குத் திசையிலும் சற்றுக் கவனமிருக்கட்டும். முதுகு பத்திரம்
பி.கு. பி.கு. பி.கு :
அடச்சே .... !கடைசியில் இடுகையை விடப் பி.கு.க்கள் பெரிதாக அமைந்து தொலைந்து விட்டன.
ada kodumaiye
ReplyDeleteநல்ல ஜோக்
ReplyDeleteநீங்க நெறைய சைட் அடிக்கறீங்கன்னு இதிலிருந்து தெரியுது
ReplyDeleteதொடரட்டும்
ReplyDelete