உள்ளே வாருங்கள்! இந்தப் பதிவு உங்களுக்குத்தான் !!
சந்திப்பிழை சகித்து வாழும் தலைமுறை தாண்டி, சந்திப்பிழை மறந்து வாழும் தலைமுறையும் தாண்டி, சந்திப்பிழை அறியாமல் வாழும் தலைமுறையும் தாண்டி சந்திப்பிழை இருந்தால் என்ன குடியா முழுகி விடும் என்ற தலைமுறையினர் வாழும் காலகட்டத்தில் இருக்கிறோம்.
இரண்டாம் வேற்றுமை விரி:
'"ஐ" என்ற உருபு நிலைமொழிலியிலிருக்க வல்லினம் மிகும்.
ஆட்டை + கட்டினான் =ஆட்டைக்கட்டினான்
வீட்டை + கட்டினான் =வீட்டைக்கட்டினான்
வாயை + பொத்தினான் =வாயைப் பொத்தினான்
நாயை+ துரத்தினான் =நாயைத் துரத்தினான்
வேட்டியை + துவைத்தான் = வேட்டியைத் துவைத்தான்
புல்லை + செதுக்கினான் = புல்லைச்செதுக்கினான்
வாயை + திறந்தான் =வாயைத் திறந்தான்
அவனை + தவிர்த்தான் = அவனைத் தவிர்த்தான்
நீரை + குறைத்தான் = நீரைக்குறைத்தான்
கல்லை + புரட்டினான் = கல்லைப் புரட்டினான்
எளிமையான பாடமிது.நினைவில் இருத்திக்கொள்ளலாம். இதனை நினைவில் கொள்வதாலோ பயன்படுத்துவதாலோ தீங்கொன்றும் நேராது என உறுதியாய்ச் சொல்வேன்.
இதுபோல எளிமையான வழிகள் இன்னும் நிறைய உள்ளன. தொடர்ந்து பயிலுவோம்;தொடர்ந்து முயலுவோம்.
நன்றி!
தொடரும்....
இடுப்பில் இலையுரி கட்டித் திரிந்தால் கூடத்தான் குடிமுழுகி விடாது, ஆனாலும் அழகியலைப் பார்ப்பது போலத்தான்.கூடுதலாக ஒரு ப், க், ச் அல்லது த் என்ற ஒன்றினைச் சேர்த்து எழுதினால் என்ன எழவு துன்பம் நேர்ந்து விடும்...?
"வாங்கி சென்றார் " என்பதை " வாங்கிச் சென்றார்" என்று எழுதித் தொலைப்போம் என்று சொன்னால் இளக்காரமாகப் பார்க்கும் அரைவேக்காட்டுக் கூட்டம் பெருகிவிட்டது. எங்கெல்லாம் இரண்டு சொற்களுக்கு இடையில் வல்லினம் மிக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!
இரண்டாம் வேற்றுமை விரி:
'"ஐ" என்ற உருபு நிலைமொழிலியிலிருக்க வல்லினம் மிகும்.
ஆட்டை + கட்டினான் =ஆட்டைக்கட்டினான்
வீட்டை + கட்டினான் =வீட்டைக்கட்டினான்
வாயை + பொத்தினான் =வாயைப் பொத்தினான்
நாயை+ துரத்தினான் =நாயைத் துரத்தினான்
வேட்டியை + துவைத்தான் = வேட்டியைத் துவைத்தான்
புல்லை + செதுக்கினான் = புல்லைச்செதுக்கினான்
வாயை + திறந்தான் =வாயைத் திறந்தான்
அவனை + தவிர்த்தான் = அவனைத் தவிர்த்தான்
நீரை + குறைத்தான் = நீரைக்குறைத்தான்
கல்லை + புரட்டினான் = கல்லைப் புரட்டினான்
எளிமையான பாடமிது.நினைவில் இருத்திக்கொள்ளலாம். இதனை நினைவில் கொள்வதாலோ பயன்படுத்துவதாலோ தீங்கொன்றும் நேராது என உறுதியாய்ச் சொல்வேன்.
இதுபோல எளிமையான வழிகள் இன்னும் நிறைய உள்ளன. தொடர்ந்து பயிலுவோம்;தொடர்ந்து முயலுவோம்.
நன்றி!
தொடரும்....
நல்லதொரு சேவை ... வாழ்த்துக்கள் !
ReplyDeleteரிஷ்வன் கவிதைத் துளிகள் என்றே மாற்றிவிட்டேன்... தவறைச் சுட்டி காண்பித்ததுக்கு என் நன்றி ..
ReplyDeleteதமிழ் படிக்க வேண்டும் சார்....
ReplyDeleteநல்ல பதிவு தொடருங்கள்