மின்னித் தீர்க்கிறது
மலர் விரிகிறது
துயிலெழுகிறாய்
மணம் பரவுகிறது
முகம் கழுவுகிறாய்?
பனி மறைகிறது
து கில் திருத்துகிறாய்
கதிர் எழுகிறது
கண்ணாடி பார்க்கிறாய்
குளிர் வழிகிறது
குளித்து முடிக்கிறாய்
ஒளி தெறிக்கிறது
ஒப்பனை செய்கிறாய்
குயில் இசைக்கிறது - யாருக்கோ
குட்மார்னிங் சொல்கிறாய்!
முகில் நகர்கிறது
உடை உடுத்துகிறாய்
இலை உதிர்கிறது
நகம் நறுக்குகிறாய்
மரம் அசைகிறது
நடை பயில்கிறாய்
தென்றல் தவழ்கிறது
கூந்தல் உலர்த்துகிறாய்
மழை பெய்கிறது
நகை புரிகிறாய்
இடி இடிக்கிறது
இமை திறக்கிறாய்
மின்னித் தீர்க்கிறது
விழி சுழற்றுகிறாய்
நிலவு ஒளிர்கிறது
நெற்றி துடைக்கிறாய்
மலை தெரிகிறது
பெருமூச்செறிகிறாய்
உயிர் துடிக்கிறது
எதிரில் வருகிறாய்
இனிய கவிதை
ReplyDeleteநிலவு ஒளிர்கிறது
நெற்றி துடைக்கிறாய்
நல்லதொரு கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteசின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteஉயிர் துடிக்கிறது
ReplyDeleteஎதிரில் வருகிறாய்
nice lines
super
ReplyDelete
ReplyDeleteகவிதை அருகையாக உள்ளது! வாழத்துக்கள்!