வெப்ப வரிகள்


கவ்விச் சுவைத்த உன்
கரும்பிதழ்களுக்கிடையே
அள்ளிக் குடித்த
அமுதமென்ன
பாலும் தேனும் கலந்த
படையலா காதல் தேவதையே..?
சொல்வாய்...என்
சுடர் மிகு  பூவழகே...!


அனல் பறக்கிறதா வரிகளில்... வெப்பமாகாமல் என்ன செய்யும்..? கவிதை  சுடப்பட்டதாச்சே...  திருவள்ளுவர் எழுதிய குறள் இது...

பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயி  றூறிய  நீர்  .


 காதற்சிறப்புரைத்தல்  என்னும் அதிகாரத்தில் வரும் 1121 ஆவது குறட்பாவிது..... வள்ளுவர் முன் நாமெல்லாம் ....சும்மா....!

Comments

  1. நண்பரே உங்களது தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.உங்களது தளத்தின் templeate மாற்றி பார்க்கலாமே

    ReplyDelete
  2. குறள் கருத்தில் எழுதிய கவிதை,பாலொடு தேன் கலந்தது போல் இருக்கிறது

    ReplyDelete
  3. சார்... அவர் கில்லாடி... இன்னும் பல குறள்கள், இதை விட அனல் பறக்கும்... அதனால் தான் முடிவில் வைத்தார்...

    ReplyDelete
  4. நீங்கள் ரொம்பத்தான் விளக்கியிருக்கிறீர்கள்....

    அனலால் உங்களின் வலை கூட சீக்கிரம் திறக்க மாட்டேங்கிறது நண்பரே.

    ReplyDelete
  5. இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
    வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
    மறக்காம ஓட்டும்!
    http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html

    ReplyDelete
  6. அருைம,,,
    லொட் ஆக நேரம் அதிகம் நண்பா.... எனது தளத்தயும் வந்து பார்த்து இணையுங்களேன்.
    varikudhirai.blogspot.com

    ReplyDelete
  7. வணக்கம்

    சுடா்மிகு பூவே என்று
    சூட்டிய கவிதை கண்டேன்!
    உடல்மிகு சூட்டைக் காதல்
    உயிர்மிகும் வண்ணம் தந்தீா்!
    இடா்மிகு வாழ்வைப் போக்கும்
    இதழ்மிகும் இன்றேன்! சோலை
    மடல்மிகும் மணத்தை உன்றன்
    வலைமிகும் என்பேன்! வாழ்க!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?