அடடா...!
இல்லாத இடை , கொடியிடை, பனியிடை, மெல்லிடை என இடையைத்தான் எத்தனை விதமாக வருணித்துள்ளனனர்....எனது பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் கூறுவார்.. ஆனண்களின் இடை மத்தளம் போன்றும் பெண்களின் இடை உடுக்கை போன்றும் இருக்க வேண்டும் என்பார்.உடுக்கை என்பது மேலே விரிந்தும் ,இடையில் குறுகியும், பின் விரிந்தும் இருக்கும்.
பற்றிக் கொண்டு நடக்க இடையைப்போல.... வேண்டாம்..சொந்தக்கதைகள்... நளவெண்பாவில்புலவர் புகழேந்தி சொல்வதைக் கேட்போம்....
என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து
தமயந்தியின் இடையானது, ஆறு சிறுகால்களையுடைய சிறிய வண்டானது தனது மெல்லிய சிறகால் வீசும் காற்றுக்குக் கூட ஆற்றமாட்டாமல் துவண்டு விடும் என்கிறார்...இதை இனியும் விளக்க வேண்டுமா...? குறளில்
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை" என்பார் வள்ளுவர்..காம்பைக் கிள்ளாமல் பூச்சூடியவளின் இடை பாரம் தாங்காமல் முறிந்து விழும் ஒலியைக் கூறுகிறார் வள்ளுவர்.
இலக்கிய நயம் உணர்ந்தேன் நண்பா.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஅடடா..
ReplyDeleteஇதுவரை அறியாத அருமையான பாடலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகான பாடலுக்கு அருமையான விளக்கத்துடன் பதிவு.
சூப்பர்! தொடருங்கள் கவிஞரே.
ரொம்ப டேஞ்சரான இடம் ஆச்சே... ஹா ஹா....
ReplyDeleteநளவெண்பாவையும் திருக்குறளையும் இணைத்தது சிறப்பு...