ஆசெதுகை-கவிஞர்களுக்காக ஓரிடுகை

தொடைகளுள் எதுகை என்பது செய்யுளுக்கு இனிமை சேர்க்கும் அழகுப் பொருளாம். இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும்.

எ‍‍கா: "மதியும் மடந்தை முகனும் அறியா

              பதியிற் கலங்கிய மீன்"                                                       (திருக்குறள்)

 இங்கு மதி, பதி என்பவை எதுகைச்சொற்கள். ஆசெதுகை என்பது என்ன? ஆசு என்ற பதத்துக்குப் பற்று, பொடி எனப் பொருள் கொள்ளலாம். 

பொன் மற்றும்வெள்ளி நகை செய்பவர்கள் கம்பி,மற்றும் தகடுகளைப் பொடி வைத்து ஊதி இணைப்பர்.
அதனைப் போல எதுகை யெழுத்தையும், முதலெழுத்தையும் இணைக்கும் வகையில் இடையில் வரும் எழுத்தை ஆசென்று கூறி இவ்வகையை  ஆசெதுகை என்பர்.

 சான்று:

     "ஒத்துயர் கானவன் கிரியி னோங்கிய

      மெத்துறு மரந்தொறு மின்மி னிக்குலம்

      மொய்த்துள வாமென முன்னும் பின்னரும்

      தொத்தின தாரகை மயிரின் சுற்றெலாம்"

                                                                                         -  கம்பராமாயணம்.

        ஒத்துயர்

        மெத்துறு

        மொயித்துள

        தொத்தின       

  என்பனவற்றுள் மூன்றாம் அடியில் எதுகை எழுத்தான‌ 'த்' என்பதற்கும்

 முதலெழுத்துக்கும் இடையில் 'ய்' வந்து இஃது ஆசெதுகை ஆயிற்று.

இதனை யகர வொற்றாசிடை எதுகை என்பர்.

          ஈரொற்றும் உடன் மயங்கக்கூடிய ய்,ர்,ழ் என்பன வல்லின மெய்களான க்,ச்,த்,ப் என்பனவுடன் ஆசெ
துகையாக வருவது போல் 'ல்' என்பது

     "ஆவே றுருவின் வாயினும் ஆபயந்த

       பால்வே றுருவின வல்லவாம்"

என்று ஆசெதுகை யாகும்.

Comments

  1. அருமையான விளக்கம் கவிஞர் ஐயா.

    நான் குறள்கள் படிக்கும் பொழுது ஏன் இப்படி என்று பலமுறை குழம்பிப் போய் இருக்கிறேன். இப்பொழுது புரிகிறது.

    தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்,
    ஊமைக்கனவுகள் தளத்தில் தங்கள் பதில் பார்த்து இங்கு வந்தேன்.
    அருமை, தொடர்கிறேன். நன்றி.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி