பசி வந்தால் பறக்கும் பத்து எவை என்று தெரியுமா?
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே ... அந்தப் பத்து என்னென்ன என்று தெரியுமா? நல்வழியில் ஔவையார் கூறுகிறார். பாடலைப் பாருங்கள்... பசி வந்து விட்டால் என்னவெல்லாம் நம்மை விட்டுப் பறக்கின்றன என்று..
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
அருமை நண்பர்..
ReplyDeleteநேற்றுதான் இதுதொடர்பாக ஒரு இடுகையிட்டேன்..
நேரம் கிடைக்கும்போது வாருங்களேன்..
http://www.gunathamizh.com/2012/08/blog-post_8910.html
ReplyDeleteநல்ல பகிர்வு. பலருக்கும் தமிழ் தெரியும் என்றாலும் சில சொற்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படாமல் போகலாம். அருஞ்சொல் பதவுரை தேவை என்று எண்ணுகிறேன், இதேபோல் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்தும் பதினாறு எவை என்று தெரிந்தால் வெளியிடலாமே.
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
அருமையான பகிர்வு.
ReplyDeleteவிளக்கவுரை அளித்திருக்கலாம் கவிஞரே.
நன்றிங்க.
பதம் பிரித்து வாசித்தால் விளக்கவுரை தேவை இல்லை என்றே தோன்றுகிறது... எளிமையான ஒரு கவிதைதான்...ஒளவையாரின் படைப்பு என நினைக்கிறேன்.. நாங்கள் பத்தாம் வகுப்பில் இலக்கிய நயம் படித்தது... நல்ல பகிர்வு... நன்றி...
ReplyDeleteஅருமை .
ReplyDeleteமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
ReplyDeleteதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
1. மானம்: honour and respect
2. குலம்: birth
3. கல்வி: education
4. வன்மை: caring
5. அறிவுடைமை: wisdom
6. தானம்: giving
7. தவம்: penance
8. உயர்ச்சி: high status
9. தாளாண்மை: effort
10. காமம்: sexuality