கிறுக்கு முற்றியது
கிறுக்கு முற்றியது (தாழிசை) கண்ணழகுக்கு இவ்வுலகில் என்னவிலையும் கொடுக்கலாம்; கண்ணசைவுக் கட்டளையில் காலன்கூட மயங்கலாம்! உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக உலகத்தையே துறக்கலாம்; உதட்டு வார்த்தை உத்தரவில் சொர்க்கம்கூடத் திறக்கலாம்! பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப் படையல் ஒன்று போடலாம்; முக்தியடைய அடுத்த பிறவியிலுன் முகப்பருவாய்ப் பிறக்கலாம்! என்னவளே உன்னழகை என்ணியெண்ணி வியக்கலாம்; கன்னியுன்றன் முகத்தைகாட்டிக் கல்லைக்கூட மயக்கலாம்! கன்ணேஉன் கனிமொழியைக் காலம்முழுதும் கேட்கலாம்; புண்ணியமாய்ப் போகுமொரு புன்னகை செய் தேவலாம்! கண்மணியின் காலடியில் காலம் முழுதும் கிடக்கலாம்; - உன் கால்கள்பட்ட இடத்திலெனக்குக் கல்லறையே கட்டலாம்! உன்விழிய...