சுற்றிச் சுற்றி வருவேன்


எனக்கான உன்பார்வையில்
எனக்காக 
எதுவோ வைத்திருக்கிறாய்
என்ற கற்பனையில்தான்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!


நீ வரும் வழியில்

மலைபோல
ஓங்கி உயர்ந்து நிற்கிறது என் காதல்!
நீயோ
புகையினூடே
புகுந்து செல்வதைப்போல
அதனை
ஊடறுத்துச் செல்கிறாய்!



மின்விசிறி
சுற்றிச் சுற்றி வந்து
அறையைக் குளிரூட்டிக் கொண்டிருந்தது!
என் காதலோ 
உன்னையே சுற்றிச் சுற்றி வந்து
என்னைச் 
சூடேற்றிக் கொண்டிருக்கிறது!





Comments

  1. காதலியை சுற்றும் காதல் கவிதை...

    ReplyDelete
  2. மின் விசிறி - காதல்

    ஒப்பீடு நன்றாகவுள்ளது நண்பா.

    ReplyDelete
  3. மலையும் - புகையும்

    காதலை அழகாகச் சொல்லிவிட்டது.

    ReplyDelete
  4. எதிர்பார்ப்பு மட்டும் இல்லாவிட்டால் மனிதவாழ்க்கை என்றோ...

    வாழ்ந்த சுவடுகள் கூடத் தெரியாமல் போயிருக்கும்..

    கவிதை அருமையாக உள்ளது நண்பா.

    தொடர்க..

    ReplyDelete
  5. காதலில் எதிர்பார்ப்புகள் கூடும்போது, ஏமாற்றங்களும் கூட வாய்ப்புள்ளது. கவனம்.!

    ReplyDelete
  6. காதல் கசக்குதய்யா! காதல் கவிதை படிக்க இனிக்குதய்யா

    ReplyDelete
  7. sweet lines

    ReplyDelete
  8. sweet lines

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!