கடவுச்சொல் மேலாண்மை
பாஸ்வேர்டுகள் மறந்துபோகமலிருக்கச் சில எளிய வழிகள்:
கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட்ன.மின்னஞ்சல் முகவரிகள், சமூக வலைத்தளங்கள், காணொளி மற்றும் நிழற்படப் பதிவகங்கள், வங்கிச்சேவைகள், இணைய இதழகள்......... என எங்கும் எதிலும் பாஸ்வேர்டுகள்தாம்.இத்தனை பாஸ்வேர்டுகளை எப்படி நினைவு கொள்வது?
இதோ சில எளிய வழிகள்!
#உங்களது பாஸ்வேர்டுகள் அனைத்தையும் ஒரு சிறியநோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை 4 காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்து 4 நண்பர்களிடம் கொடுத்து வைக்கலாம். நீங்களும் தொலைத்து, மற்ற மூன்று நண்பர்களும் தொலைத்து விட்டால் கூட நாலாவது நண்பர் உங்களுக்கு உதவக்கூடும்.
#அனைத்துத் தளங்களூகும் ஒரே கடவுச்சொல்லாக வைத்துக் கொண்டு, அதனை உங்கள் வீட்டு முகப்பில் டிஜிட்டல் பேனராக வைத்துக் கொள்ளலாம் .அடிக்கடிப் பார்வையில் படுவதால் மறந்துபோகாமல் இருக்கும்.
#எஸ்.எம்.எஸ்., இ-மெயில் அனுப்பும் போது உங்கள் பாஸ்வேர்டினை சிக்னேச்சராகப் போட்டு அனுப்பலாம். மறந்து போகும் பட்சத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
#தினமும் 2016 தடவை ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
#கையில் பச்சை குத்திக் கொள்ளலாம்.
#காரின் பின் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.
#மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் சேவராகவோ, வால் பேப்பராகவோ வைத்துக் கொள்ளலாம்.
#பாஸ்வேர்டை மட்டும் வைத்து ஒரு ட்யூன் போட்டுப் பாடலாக அடிக்கடி முனுமுணுத்துக் கொள்ளலாம்.
#பாஸ்வேர்டை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாம்.
#வளர்ப்புப் பிராணிகளுக்குப் பெயராக வைத்துக் கொள்ளலாம். அடிக்கடிக் கூப்பிடும் போது மறந்து போகாது.
#உங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களுக்குப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.
#உங்களது ஒரிஜினல் பெயரில் நீங்கள் யூசர் நேம் வைத்திருக்கும் போது பாஸ்வேர்டை அதேபெயரில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் , பாஸ்வேர்டினைப் பெயராக வைத்து கெஜட்டில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
ரொம்ப வெவரமாத்தான் யோசிப்பியளோ.எங்களுக்கும் புரியுத மா(தி)ரி யோசிச்சு வெளக்குங்க.
ReplyDeletePassword nu vaja easy erukumla..?
ReplyDeletePassword nu vaja easy erukumla..?
ReplyDelete#பாஸ்வேர்டை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாம்.// எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா..
ReplyDelete