கவிதை வனைவதன் சாத்தியம்
எழுத்துகள் ஒழுகிக்கொண்டிருக்கின்றன;
கவிதை கண்முன்னே
உறைந்து உருள்கிறது;
வெட்டவெளி விரிந்து கிடக்கிறது;
உன் முலையறிந்த விரல்களில்
நடுக்கம் பிறக்கிறது;
வெண்குதிரைகளில்
பறந்து பறந்து சலித்த
அலுப்பில்
கன்வுதெளிந்து உறக்கம் பீடிக்க,
நடுங்கும் விரல்களால்
இனியும் கவிதை வனைவதன்
சாத்தியத்தை அறியத்தான்
மூச்சிரைக்க ஓடுகிறேன்!
நடுங்கும் விரல்களால்
ReplyDeleteஇனியும் கவிதை வனைவதன்
சாத்தியத்தை அறியத்தான்
கவிதை ரசிக்கிறது. பாராட்டுக்கள்.
fine linesfine lines
ReplyDeleteஎன்னமோ ஏதோ ஒன்னும் புரியலே எனக்கு
ReplyDelete