ஸ்வீட் ட்வீட்ஸ்

சிரங்கு வந்தவன் கையும் செல்போன் எடுத்த்வன் கையும் சும்மா இருக்காது என்பார்கள்.கீபோர்ட் தொட்டவன் கையும் தான், பொழுதுபோகாம தத்துப் பித்துன்னு நாம ட்வீட் பண்ணதப் படிச்சுப் பாருங்க!

மட்டமான மனிதர்கள் மனிதர்களையும்,சாதாரண மனிதர்கள் சம்பவங்களையும்,வெற்றியாளர்கள் கருத்துக்களையும் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்ளுகிறார்கள்


மழைநீர்க்குழாய் என்ற ஒன்றுமட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், கிரைம் நாவல்கள் பல எழுதப்படாமலே போயிருந்திருக்கும்.


பார்ப்பதை எல்லாம் ட்வீட் செய்கிற பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால்....நிச்சயம் உடனே நீங்கள் மருத்துவரைச் சந்திக்கவேண்டும்!


எந்தப்பக்கம்திருகினால் தண்ணீர்வரும் என்பதைக்கண்டுபிடிக்க முடியாதஅளவுக்குவாஷ்பேஸின்குழாய்களைடிசைன் செய்வதற்குத்தான்எவ்வளவுமெனக்கெடுகிறார்கள்?


பத்துப் பேர் கூட இல்லாத பஸ் ஸ்டாப்பில் பத்து லட்சம் பேர் தன்னையே பார்ப்பது போன்ற தன்னுணர்வுடன் நடக்கிறீர்கள் என்றால் , நீங்கள் ஒரு பெண்!


ப்ரியமான் ஸகாக்களோ, ஸகியோ விடைபெறும்போது TATA சொல்வதுதான் எவ்வளவு திவ்யமாக உள்ளது! FEEL பண்ணிப் பாருங்கள்!!


கல்கி இதழில் வெளிவந்த நையாண்டிக் கவிதை, நான் இன்றும் ரசித்து மகிழ்வது:நான் நீ அவன் இவன் டாஸ்மாக்! (ஒண்ணுங் கீழ் ஒண்ணு)


எதற்கெல்லாமோ எக்சேஞ்ச் ஆஃபர் தருகிறார்கள் என்று அலுத்துக்கொள்கிறார் அறுபது கடந்த நண்பர் ஒருவர் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வந்த பிறகு!
ஜீன்ஸ் பேன்ட்டின் மீது பெல்ட்டுக்குப்பதிலாக அரைஞாண் கயிற்றைச் சுற்றிக் கொள்பவர்கள் எல்லாம் உள்ளே கோவணம் கட்டியிருக்கமாட்டார்கள்# நம்பிக்கை


சங்கீதம் என்ற வார்த்தைக்குப் பிறகு சந்தோஷம் என்ற வார்த்தை இல்லாத எந்தத் திரைப்படப் பாட்லையும் நான் கேட்டதே இல்லை


வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அறிகுறி, அதன் நடுத்தர மக்கள் அடிக்கடிவெளியே சென்று சாப்பிடுவதுதா - பொருளாதார நிபுணர்கள்(தினத்தந்தி- 14.08.2011)


நிலாவில் கவிதை ஊற்றுகள் ஏதேனும் சுரக்கின்றனவா என்று அடுத்த முறை செல்பவர்கள் கண்டறிந்து வரவேண்டும்!



you will only get what you deserve , not what you desire . #first rank in test cricket







Comments

  1. Good

    http://astrovanakam.blogspot.com/

    ReplyDelete
  2. எதைத் தேடி எங்கு வந்துவிட்டேன். கவிதை என்று நினைத்து எதையோ எழுதியும் படித்தும் வந்தவன் எது கவிதை என்று ஒரு பதிவு எழுதினேன். பலகருத்துக்கள் வந்தன. கவிதை இலக்கணம் தெரியாதவனுக்கு ”நாட்டாமை” மூலம் வந்த ஒரு பின்னூட்டம் யாப்பிலக்கணம் அறிய ஆவலூட்டியது. பல தேடல்களின் ஒரு வழியாக உங்கள் வலைப்பக்கம் வந்தேன். பல வலைகளில் மேய்ந்த பிறகு இலக்கணப்படி எழுத பல பாடங்கள் வலையுலகில் இருப்பது கண்டேன். உங்கள் பதிவுகளையும் படித்தேன். எழுத முயற்சிக்கலாம் என்னும் நம்பிக்கை இருக்கிறது. உங்களை பதிவு மூலம் அறிவதிலும், என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதிலும் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?